சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஹுண்டாய் நிறுவனம் விஷன் G என்ற தொலைநோக்குடன் கூடிய காரை அறிமுகப்படுத்துகிறது

அபிஜித் ஆல் ஆகஸ்ட் 14, 2015 04:23 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஹுண்டாய் நிறுவனம் தனது சமீபத்திய மாடலான விஷன் ஜி‌ ஐ உலக பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இம்மாடல், அழகிய பின்புற பந்தைய கார்களின் வாளிப்பான வடிவத்தை பெற்றுள்ளதால் இது உற்சாகமான வரவேற்பையும் துடிப்பான உணர்வையும் கொடுக்கிறது. இந்த கார் 420 bhp திறன் கொண்ட 5.0 லிட்டர் V8 இஞ்ஜின் பொருத்தபட்டு சக்தியூட்டப் படுகிறது. இதன் சிறப்பம்ஸங்களைக் கொண்ட இந்த இயந்திர தொழில்நுட்பமே எதிர்காலத்தில் உபயோகப்படுத்தப்படும் என்று ஹுண்டாய் நம்பிக்கை தெரிவிக்கிறது. எனவே, இந்த காரை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை பலரிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

விஷன் ஜி‌ மாடலை முழுமையாக வடிவமைத்தது USA விலிருந்து வந்த வடிவமைப்பாளர்கள் குழுவே. ஆனால் உட்புற பாகங்கள் அனைத்தும் உலகளவில் உள்ள டிசைன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்களிடமிருந்தே பெறப்பட்டது. மேலும் ஹுண்டாய்யின் அதிகாரிகள் இந்த காரின் குறிக்கோள், வெறும் செயல்திறனை மட்டுமே நோக்கியதாக இல்லாமல், இதில் மாறுபட்டு ‘தைரியமான அழகான தோற்ற உணர்வுடன்' என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இக்காரை பற்றி பேசினால், இது எந்த வித தூண்களும் அற்ற அழகிய கலை நயமான பொருளாகவே தெரிகிறது. இது மட்டுமல்லாமல், இந்த காரின் அழகை பறைசாற்றும் வண்ணம் அதன் மிக பெரிய நீள்மூக்கு போன்ற முன்புற முகப்பும், அதனுடன் இணைந்த மேற்கூரையும் அமைந்துள்ளன. இதன் அடையாள குறியீடு ஜெனீசிஸ் மோனிகர் என்பதை தாங்கியுள்ளதால் இது எதிர் காலத்தில் நிறைய மாறுதல்களுக்கு உட்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதன் முகப்பில், அச்சுறுத்தும் வடிவில் கம்பி வலை (கிரில்), பிரம்மாண்டமாக இரு புறமும் உள்ள சக்கரங்கள், மற்றும் மிருதுவான வாளிப்பான வடிவத்தையும் தனகத்தே கொண்டு அனைவரையும் கவர்கிறது.

இதன் உட்புற அலங்காரங்களை மேலே உள்ள படத்தில் பார்க்கும் போது, மிருதுவான தோல் மற்றும் மர வேலைபாடுகள், புதிய தொழில் நுட்பத்துடன் இணைந்து உட்புறத்தில் சற்றே உயரத்தில் நேர்த்தியாக அமைக்கப்பட்ட படத் திரையும் பிரதிபலிக்கின்றன. மிகவும் மிருதுவாக்கபட்ட தரமான உறுதியான இருக்கைகளில் நான்கு பேர் தாராளமாக அமர்ந்து செல்வதற்கு ஏற்ப, இட வசதியும் உள்ளது. மேலும், தானே திறந்து கொள்ளும் கதவு என, மேற்படி சொன்ன அனைத்தும் சிறப்பம்சங்களாக, இந்த சொகுசு வகை காரில் உள்ளன.

ஹுண்டாய் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் பீட்டர் ஸ்ரேயர் இது பற்றி கூறும் போது, “பளபளப்பான மற்றும் ஒரே மாதிரியான சொகுசு கார்களின் வரிசையில் முதலாவதாக நாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,” என்றார். ஆனால் அமெரிக்காவின் ஹுண்டாய் வடிவமைப்பு பிரிவின் தலைவரான கிறிஸ் சாப்மான், “வடிவமைப்பை பற்றி பேசும் போது, இந்த கார் சாலையில் ஓடும் போது ஆச்சர்யமாக வேடிக்கை பார்ப்பவரின் கவனத்தை ஈர்ப்பதை விட, காரின் உரிமையாளரை மிகவும் அதிகமாக எங்கள் கலைநயம் மிக்க வடிவமைப்பு கவரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். விஷன் G மிகவும் உற்சாகமாகவும், சீராகவும் சீறிப் பாய்ந்து இயங்குகிறது,” என்று கூறினார். இவர் தான் இந்த செயல் திட்டத்திற்கு தலைவர்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை