D2 பிரிவின் தற்போதைய புதிய வழக்கம்: ஹைபிரிடு பதிப்பு!
published on பிப்ரவரி 10, 2016 03:34 pm by raunak
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இதில் நிலைநின்று, பிரபலப்படுத்திய பெருமை அதிகளவில் டொயோட்டா காம்ரியை தான் சேரும். இதனால் எழுந்த கட்டாயத்தின் பேரில் மற்றவர்களும் இதை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்!
சமீபகாலமாக, D2 மற்றும் துவக்க நிலை ஆடம்பர சேடன்கள் ஆகியவற்றின் விலை நிர்ணயங்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்துக் கொண்டே வருகிறது. எதிர்காலத்தில் இந்த இடைவெளி இன்னும் குறையலாம் என்று தெரிகிறது. ஏன் தெரியுமா? இதிலிருந்து வேறுபாட்டை காட்டும் வழியாக, எரிபொருள் சிக்கனம் கொண்ட ஹைபிரிடு வகையை டொயோட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. மீதமுள்ள காரியங்களை - அதிலும் முக்கியமாக பின்பக்க சீட்டின் இதம் ஆகியவற்றை ஏற்கனவே சேடன்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த ஹைபிரிடு ஆற்றலகம் மூலம் ஆற்றலின் உயர் வரிசையை அடைகிறது! அடுத்துவரவுள்ள எண்ணற்ற D2 சேடன்கள் விரைவில், காம்ரியின் ஹைபிரிடு களத்திற்குள் வர உள்ளன.
இதன் துவக்கமாக, நம் நாட்டில் அக்கார்ட் காரை ஹோண்டா நிறுவனம் மறுஅறிமுகம் செய்ய உள்ளது. இதில் ஒரு ஹைபிரிடு தேர்வு இடம்பெறும். 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட 9வது தலைமுறையைச் சேர்ந்த அக்கார்ட், இந்தாண்டு நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில், இந்த ஹைபிரிடு பதிப்பு, சர்வதேச அளவில் புதுப்பிக்கப்படவில்லை. ஆனால் இதே போன்ற ஆற்றலகத்துடன் கூடிய மேம்பாடு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஒரு 2.0-லிட்டர் யூனிட் உடன் இணைந்த ஒரு எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு ஆற்றல் பெறப்படுகிறது. இவற்றின் ஒருங்கிணைந்த வெளியீடு 196 குதிரை சக்திகள் ஆகும். மேலும் இந்த ஹைபிரிடு அமைப்பு, ஒரு E-CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயலாற்றும்.
அடுத்தப்படியாக சோனாட்டாவின் மறுஅறிமுகம் குறித்து பார்ப்போம். இந்த எக்ஸ்போவில் பிளெக்-இன் ஹைபிரிடு பதிப்பான நவீன தலைமுறையைச் சேர்ந்த சோனாட்டாவை, ஹூண்டாய் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. இந்தாண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோ இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், நம் நாட்டிற்கு ஹைபிரிடு ஆற்றலகம் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. சோனாட்டா ஹைபிரிடு காருக்கு, ஒரு 2.0 லிட்டர் GDI 4-சிலிண்டர் கியஸோலைன் என்ஜின் உடன் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் இணைந்து செயல்பட்டு ஆற்றலை அளிக்கிறது. இவற்றின் ஒருங்கிணைப்பில் 6000 rpm-ல் 202 HP என்ற அதிகபட்ச ஆற்றலை கிடைக்கிறது. இது ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியர்களான வோல்க்ஸ்வேகனை குறித்து பார்த்தால், புதிய பாஸ்அட் காரின் பிளெக்-இன் ஹைபிரிடு பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், எந்தவிதமான ஹைபிரிடு தொழிற்நுட்பங்களும் இல்லாமல் தான் அது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல அடுத்துவரவுள்ள சூப்பர்ப் காரின் அறிமுகமும் அப்படியே அமையலாம். மேற்கண்ட இவ்விரு வாகனங்களும், இந்தாண்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம், ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் டொயோட்டாவின் அடுத்த தலைமுறை ‘இன்னோவா கிரிஸ்டா’