முடிவுக்கு வருகின்றதா டோல் பிளாசாக்களின் காலம் !... செயற்கைக்கோள் தரவின் அடிப்படையில் சாலை கட்டணம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வருகின்றதா ?
published on ஏப்ரல் 02, 2024 03:36 pm by sonu
- 99 Views
- ஒரு கருத்தை எழுதுக
டோல் பிளாசாக்களில் நீண்ட வரிசை ஏற்படுவதை குறைக்க ஃபாஸ்டாக் போதுமான பலனளிக்கவில்லை என்பதால் நிதின் கட்கரி அடுத்த கட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம் என நினைக்கிறார்.
2014 ஆம் ஆண்டு ஃபாஸ்ட்டேக்குகள் (FASTag) அறிமுகப்படுத்தப்படும் வரை நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் என்பது பணமாகவோ அல்லது கார்டு மூலமாகவோ வசூலிக்கப்பட்டு வந்தது. ஃபாஸ்ட்டேக்குகள் அறிமுகமானது டோல் செலுத்தும் செயல்முறையை விரைவாகவும் தடையற்றதாகவும் மாற்றியது. 2021 முதல் சுங்கச்சாவடி மற்றும் சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதற்கு ஃபாஸ்ட்டேக்குகள் ஒவ்வொரு வாகனத்துக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும் இப்போது புதிய செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் வசூல் அமைப்பு மூலம் ஃபாஸ்டேக் மற்றும் டோல் பிளாசாக்களை முற்றிலும் வழக்கத்தில் இருந்து அகற்றுவதற்கு போக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டமிட்டுள்ளார். இந்த ஸ்பேஸ் ஏஜ் சிஸ்டம் என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி இந்த விரிவான கட்டுரையில் பார்க்கலாம்.
ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் என்றால் என்ன ?
டோல் சாலை/ நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தை செலுத்துவதற்காக இப்போது டோல் வசூல் பிளாசா முறை நடைமுறையில் உள்ளது. இது அதிக செலவில் கட்டப்பட்ட ஒரு பெரிய கட்டமைப்பாகும். மேலும் செயல்பட அதிக நபர்கள் தேவைப்படுகிறார்கள். FASTag இருந்தாலும் டோல் கட்டணத்தை ஸ்கேன் செய்ய வாகனங்கள் கணிசமாக வேகத்தைக் குறைக்க வேண்டும். இதுவும் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலை உருவாக்குகிறது. குறிப்பாக பெரிய நகரங்களில் இதை பார்க்கலாம். இப்போது நிதின் கட்கரி கூறியுள்ள ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் கட்டணம் செலுத்தும் முறையில் கார்களில் நிறுவப்பட்டுள்ள கருவியானது செயற்கைக்கோள்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. அவை உங்கள் கார் பயணித்த தூரத்தை அளவிடும் மற்றும் கடந்து செல்லும் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க: ஹைபிரிட் கார்கள் இந்தியாவில் விலை குறைவதற்கான 3 வழிகள்
இது எப்படி வேலை செய்யும்
இந்த புதிய முறையை செயல்படுத்துவது எளிதானத விஷயம் அல்ல. மேலும் ஒவ்வொரு வாகனத்திலும் இந்த தொழில்நுட்பத்தை பொருத்துவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். இருப்பினும் இந்த திட்டம் வெற்றிகரமாக அமலுக்கு வந்தால் அது எப்படி செயல்படும் என்பது இங்கே
-
கார்களில் OBU (ஆன்-போர்டு யூனிட்) கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இது டோல் வசூல் அமைப்பிற்கான கண்காணிப்பு சாதனமாக செயல்படுகிறது.
-
நீங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் வாகனம் ஓட்டும்போது OBU கருவி கோ ஆர்டினேட் புள்ளி மூலமாக காரை கண்காணிக்கும். மேலும் நீங்கள் பயணித்த தூரத்தைக் கணக்கிட அந்த விவரங்கள் செயற்கைக்கோளுடன் பகிரப்படும்.
-
இந்த அமைப்பு GPS (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) பயன்படுத்தி வேலை செய்யும். இது GNSS (குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்) அடிப்படையில் செயல்படும். இது தொலைதூர கணக்கீட்டில் துல்லியத்தை பராமரிக்க உதவும்.
-
கார் பயணித்த தூரம் சரியாக அளவிடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த நெடுஞ்சாலைகளில் கேமராக்கள் வைக்கப்பட்டு கார் படம் பிடிக்கப்பட்டு முந்தைய தரவுடன் ஒப்பிடப்படும். சாட்டிலைட் டிராக்கிங் மற்றும் டோல் வசூல் தரவுகளுடன் நம்பர் பிளேட்களை இயக்குவதன் மூலம் எந்தெந்த கார்களில் OBU இல்லை அல்லது முடக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டறியவும் கேமரா உதவும்.
-
முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள சில முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் மட்டுமே இந்த கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும்.
செயற்கைக்கோள்கள் மற்றும் கண்காணிப்பு சாஃப்ட்வேர் போலவே OBU -களும் இந்த அமைப்பிற்கு முக்கியமானவை. இருப்பினும் இது இப்போதுள்ள கார்களில் இல்லை. ஆகவே இதை வெளிச் சந்தையில் இருந்து வாங்கியே காரில் பொருத்த வேண்டும். இப்போதைக்கு இந்த OBU களை எப்படி எங்கு வாங்கலாம் என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆனால் அவை ஃபாஸ்ட்டேக் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது போலவே இருக்கலாம். ஆகவே இது அமல்படுத்தப்பட்ட முறையும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.
-
ஃபாஸ்ட்டேக் -களை போலவே இந்த OBU -களும் அரசாங்க இணையதளங்கள் மூலம் கிடைக்கும். உங்கள் காரின் பதிவு எண்ணை உள்ளிட்டு KYC ஐப் பூர்த்தி செய்வதன் மூலம் அவற்றை ஆர்டர் செய்ய முடியும்.
-
நீங்கள் OBU -க்கு விண்ணப்பித்தவுடன் அதை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.
-
இந்த டோல் வசூல் முறையை நடைமுறைப்படுத்திய பிறகு கார் உற்பத்தியாளர்கள் கார்களை டெலிவரி ஏற்கனவே நிறுவப்பட்ட OBU -களுடன் விற்பனை செய்யக்கூடும். அதை பின்னர் நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கலாம்.
-
ஃபாஸ்ட்டேக் - களை போலவே வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் OBU -களை விற்கத் தொடங்கலாம்.
-
காரில் OBU கருவியை நிறுவிய பிறகு பயணித்த தூரத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை தானாகவே கழிக்கப்படும்.
ஜிபிஎஸ் டோல் சேகரிப்பின் நன்மைகள்
இந்தச் செயல்பாட்டில் கண்காணிப்புச் சாதனத்தில் உள்ள தரவு நேரடியாக செயற்கைக்கோளுடன் பகிரப்படுவதால் டோல் பிளாசாக்கள் தேவைப்படாது. இது பயணத்தை இன்னும் வசதியாக்கும். மேலும் நீங்கள் காத்திருக்க வேண்டிய நேரத்தைச் சேமிக்கவும் உதவும்.
இந்த அமைப்பால் வழங்கப்படும் மற்றொரு நன்மை என்னவென்றால் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் நெடுஞ்சாலைகளின் பகுதிக்கு மட்டுமே பணம் செலுத்துகிறார்கள். தற்போது டோல் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளை கண்காணிப்பது கடினமாக இருக்கின்றது. மேலும் நீங்கள் டோல் பிளாசாக்களுக்கு இடையே உள்ள முழு நீளத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜிபிஎஸ்-அடிப்படையிலான அமைப்பு இந்த செலவுகளைக் குறைக்கும். இது குறிப்பாக மாநிலங்களுக்கு இடையேயான வணிகப் பயணங்களை எளிதாக்கும்.
இது இந்தியாவில் வேலை செய்யுமா?
ஏற்கனவே ஜெர்மனி சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் வசூல் முறை முற்றிலும் புதியது அல்ல. இந்தியாவில் மிகப்பெரிய சவாலானதாக இருக்கும். இந்த அமைப்பால் கண்காணிக்கப்பட வேண்டிய சாலைகளின் தூரம் மற்றும் பல்வேறு வகையான விஷயங்கள் உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் செலவு சேமிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுவதில் இந்தியா ஏற்கனவே மிகவும் திறமையாக செயல்பட்டு வருகின்றது.
மேலும் படிக்க: டாடா நானோ EV வெளியீடு: ஃபேக்ட் Vs ஃபிக்ஷன்
இருப்பினும் இதைச் செய்ய ஃபாஸ்ட்டேக் அமைப்பை சுற்றியுள்ள தற்போதைய உள்கட்டமைப்பு அகற்றப்பட வேண்டும். மேலும் புதிய உள்கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு சில காலம் ஆகலாம். ஆனால் இந்த திட்டத்துக்கான செலவு மிக உயர்ந்ததாக இருக்கும். முழு உள்கட்டமைப்பையும் செயல்படுத்துவதற்காக செலவானது டோல் கட்டணத்தின் உயர்வு வடிவத்தில் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வரும்.
தற்போதைய நிலவரப்படி GPS-அடிப்படையிலான சுங்கவரி வசூல் அமைப்பானது புதிய தொழில்நுட்பங்களுடன் இந்தியாவை அப்டேட் ஆக வைத்திருக்க ஒரு நல்ல யோசனையாகத் தெரிகிறது. இருப்பினும் ஃபாஸ்ட்டேக் மூலம் கட்டணம் வசூலிப்பது போல் இதை செயல்படுத்துவதும் மற்றும் ஏற்றுக்கொள்வதும் எளிதானது அல்ல. இறுதியில் அரசாங்கம் இப்போது அதைச் செய்யத் தொடங்கினால் இது நாடு முழுவதும் அமலுக்கு வர சுமார் பத்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.
0 out of 0 found this helpful