புதிய கார் குடும்பத்தில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது ஜிஎம்
published on ஜூலை 30, 2015 02:12 pm by nabeel
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:சீனாவின் சைய்க் மோட்டார் உடன் இணைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ், புதிய கார்கள் தயாரிப்பிற்காக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. சீனா, நேபாள், பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்ட நான்கு முக்கிய இடங்களில், இந்த கார்களின் தயாரிப்பு நடைபெறும். இந்த கார்கள் புதிய என்ஜின் மற்றும் புதிய கட்டமைப்பை கொண்டிருக்கும். செவ்ரோலெட் டேக்(பெயருடன்) உடன் வெளியாக உள்ள இந்த கார்கள், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஆனால் அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிற்கு இந்த வாகனங்களை ஏற்றுமதி செய்யும் எந்த திட்டமும் இல்லை.
தற்போது முதல் 2030க்குள் பயணிகள் காரின் விற்பனை வளர்ச்சி 88 சதவீதம் வரை எட்டுவதை உலகம் காண போகிறது என்று ஜெனரல் மோட்டார்ஸ் கருதுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் டென் அம்மான் கூறுகையில், எதிர்கால கார் விற்பனை சந்தையில், “வெற்றிக்கான சரியான சூத்திரதை கண்டறிந்து செயல்படுவது என்பதையே எங்கள் நிறுவனம் குறிகோளாக வைத்துள்ளது. அவர் மேலும் கூறுகையில், இதெல்லாம் உண்மையில் வளர்ச்சி மிகுந்த சந்தைகளில் வேகமாக மாறி வரும் நுகர்வோரின் தேவையை சரியான முறையில் சந்திப்பதற்கே ஆகும். மேலும் சரியான வளர்ச்சியை அடைய நாங்கள் எங்கள் புதிய தயாரிப்புகளை மிகக் சரியான நேரத்தில் தெளிவாக சந்தைபடுத்துவது மிகமிக அவசியம் என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம்.
இந்த புதிய கார்கள் வரும் 2019 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்து ஆண்டிற்கு சுமார் 2 மில்லியன் என்ற விற்பனை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட தயாரிப்பு யூனிட்களை பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி செலவை கட்டுக்குள் வைக்கலாம் என்று இந்நிறுவனம் நம்புகிறது.
0 out of 0 found this helpful