முதல் முறையாக மெக்சிகோவிற்கு பீட் காரை ஏற்றுமதி செய்கிறது GM இந்தியா
published on செப் 02, 2015 07:54 pm by raunak
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
மெக்சிகோவை தனது முக்கிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்க வாகன தயாரிப்பாளர் நிறுவனம் அறிவித்துள்ளது
ஜெய்ப்பூர்: செவ்ரோலேட் இந்தியா நிறுவனம், மகாராஷ்டிராவின் டெலேகான் பகுதியில் உள்ள அதன் தயாரிப்பு நிலையத்தில் இருந்து பரவலாக காணப்படும் அறிமுக பீட் காரை, மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. மெக்சிகோவில் பீட் காரின் விற்பனையை இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் துவங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வாகனங்களை மெக்சிகோவிற்கு கொண்டு செல்லும் பணிகளை அடுத்த மாதத்தில் இருந்து துவக்கப்பட உள்ளது. தற்போது உலகம் எங்கும் உள்ள 70க்கும் மேற்பட்ட சந்தைகளில் கிடைக்கும் செவ்ரோலேட் பீட், முதன்மையாக செவ்ரோலேட் ஸ்பார்க் என்றே அறியப்படுகிறது. உலகமெங்கும் ஸ்பார்க் மற்றும் பீட் வாகனங்களை இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமாக செவ்ரோலேட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டெலேகான் தயாரிப்பு நிலையம் மூலம் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து சிலி நாட்டிற்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதை GM இந்தியா நிறுவனம் துவக்கியது. கடந்த ஆண்டு சுமார் 1,000 வாகனங்களை ஏற்றுமதி செய்த நிலையில், இந்தாண்டு 19,000 வாகனங்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது குறித்து GM இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அரவிந்த் சக்சேனா கூறுகையில், “எங்களின் அர்ப்பணிப்பைக் கொண்டு இந்தியாவில் தயாரிப்பு திட்டத்தை வகுத்து, மெக்சிகோ சந்தைக்கு செவ்ரோலேட் வாகனங்களை தயாரித்து அளிப்பதில் பெருமை அடைகிறோம். ஏற்றுமதி என்பது முக்கியமானது. அதே நேரத்தில் எங்களின் பெருகி வரும் வியாபாரத்தின் ஒரு பகுதியாகவும் காணப்படுகிறது. உலக அளவிலான ஒரு ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்றுவதில், இது GM நிறுவனத்தின் ஒரு யுக்தி ஆகும். இன்னும் கூடுதலாக ஏற்றுமதி சந்தைகளை கண்டறிய முயன்று வருகிறோம். இதன்மூலம் எங்களின் டெலேகான் தயாரிப்பு நிலையத்தின் தயாரிப்பு திறனை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்” என்றார்.
இந்நிறுவனத்தின் இனி வெளிவர உள்ள தயாரிப்புகளை குறித்து பார்க்கும் போது, ட்ரெயில்பிளேஸர் SUV மற்றும் ஸ்பின் MPV ஆகியவை சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டது. அடுத்த மாதத்தில் இருந்து ட்ரெயில்பிளேஸர் SUV விற்பனைக்கு வர உள்ளது. வரும் 2017 ஆம் ஆண்டு ஸ்பின் MPV இந்தியாவிற்கு வர உள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, GM நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மேரி பார்ரா, உள்ளூர் சந்தையில் (செவ்ரோலேட் இந்தியா) 1 பில்லியன் டாலரை புதிதாக முதலீடு செய்வதாக அறிவித்தார். தற்போது டெலேகான் தயாரிப்பு நிலையம் ஆண்டுக்கு 1,30,000 வாகனங்களை தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது. இதை வரும் 2025 ஆம் ஆண்டிற்குள், ஆண்டிதோறும் 2,22,000 வாகனங்களை தயாரிக்கும் வகையில் அதிகரிக்கப்பட உள்ளது. இந்தியாவிற்கு வெளியே உள்ள சந்தைகளுக்கான 30 சதவீதம் வரையிலான ஆண்டு தயாரிப்பு திட்டத்தின் மூலம், இந்த தயாரிப்பு நிலையம் GM நிறுவனத்தின் உலக அளவிலான ஒரு ஏற்றுமதி மையமாக மாறிவிடும்.
0 out of 0 found this helpful