திரிஷ்ய360s நிறுவனம், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் வீடியோ தயாரிப்பு போன்ற சேவைகளில் பிரசித்தி பெற்ற ஒரு முதன்மையான நிறுவனமாகும்
published on டிசம்பர் 23, 2015 09:33 am by cardekho
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
CarDekho.com, Zigwheels.com மற்றும் Gaadi.com போன்ற இணையதளங்களின் மூல நிறுவனமான கிர்னார் சாஃப்ட், சமீபத்தில் Drishya360s சாஃப்ட்வேர் நிறுவனத்தை கேஷ்-பிளஸ்-ஸ்டாக் ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த ஒப்பந்தப்படி, திரிஷ்யா360s நிறுவனத்தின் பணியாளர்கள் அனைவரும் கிர்னார் சாஃப்ட் நிறுவனத்தில் இணைவார்கள்.
ஷாஷங்கா அடிகா என்பவரால் 2010 –ஆம் வருடத்தில் நிறுவப்பட்ட திரிஷ்ய360s நிறுவனம், புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்பு, ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்சுவல் ரியாலிட்டி மற்றும் வலைதள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங் போன்ற பல விதமான சேவைகளில் பிரசித்தி பெற்ற ஒரு முதன்மையான நிறுவனமாகும். இத்தகைய நிறுவனத்தை வாங்கியதன் மூலம், கிர்னார் சாஃப்ட் தனது CarDekho, Gaadi, BikeDekho போன்ற இணையத்தளங்களை சிறந்த இன்டராக்டிவ் விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி பிளாட்பார்மாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர, அடிகா மற்றும் அவரது குழுவின் அனுபவத்தை, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளம்பரங்களை உருவாக்க கிர்னார் சாஃப்ட் பயன்படுத்திக் கொள்ளும்.
கிர்னார் சாஃப்ட்டின் ஸ்ட்ராடஜி டைரக்டரான ராகுல் யாதவ் அவர்களிடம் அடிகா தனது அறிக்கைகளை சமர்பிப்பார்.
யாதவ் இந்த கையகப்படுத்தல் பற்றி பேசும் போது, “பலதரப்பட்ட வித்யாசமான ஆப்ஷங்கள் மற்றும் புதுமையான அம்ஸங்களையும் எங்களது வலைத்தளங்களில் புகுத்தி இருந்தாலும், நாங்கள் எப்போதும் எங்கள் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி வேலை செய்து கொண்டே இருக்கிறோம். திரிஷ்யா360s நிறுவனத்தை எங்களுடன் இணைத்துக் கொண்டது, எங்களின் நீண்ட கால வளர்ச்சி திட்டத்தில் ஒரு மைல் கல்லாகும். ஏனெனில், இதன் மூலம் எங்களது போர்டல்களுக்கு இன்டர்ஆக்டிவ் விர்சுவல் ரியாலிட்டி தீர்வுகளை ஏற்படுத்த முடியும். திரிஷ்யா360s நிறுவனத்தின் தற்போதைய தொழில்நுட்ப இன்டர்ஃபேஸை அப்படியே உபயோகப்படுத்துவதாலும், சற்றே மேம்படுத்தி உபயோகப்படுத்துவதாலும், எங்களது வெப்சைட்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை தர முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்று கூறினார்.
ஷாஷங்கா அடிகா இது பற்றி கூறும் போது, “திரிஷ்யா360s நிறுவனம், டிஜிட்டல் இடைநிலை வழியாக நிஜமான வாழ்க்கை அனுபவம் போலவே விர்சுவல் ரியாலிட்டி இன்டர்ஃபேஸ் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிர்னார் சாஃப்ட் நிறுவனத்துடன் இணைவது மூலம், எங்களது தற்போதைய தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளை அவர்களது வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்புடன் இணைத்து, சர்வதேச தரத்தில் ஆக்மென்டட் ரியாலிட்டி தீர்வுகளை பல தொழில்களுக்கு அளிக்க முடியும்,” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
கிர்னார் சாஃப்ட் நிறுவனம், தனது அதிகாரத்தின் கீழ் வரும் CarDekho.com, BikeDekho.com, ZigWheels.com மற்றும் TruckDekho.com போன்ற வலைதளங்களை விர்சுவல் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்குவதன் மூலம், இந்த வலைதளங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் யூசர் எக்ஸ்பீரியன்ஸை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதால், அவற்றை செயல்படுத்த முழுமூச்சுடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் CarDekho ‘ஃபீல் தி கார்’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
0 out of 0 found this helpful