கௌஹாத்தி உயர்நீதி மன்றம் சிறிய கார் விற்பனையை மீண்டும் துவக்க அனுமதி வழங்கியது
nabeel ஆல் ஆகஸ்ட் 27, 2015 12:45 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
பல சர்ச்சைகளுக்கு பிறகு கௌஹாத்தி உயர்நீதி மன்றம் ஒரு வழியாக அரசாங்கத்தால் செய்யப்படும் விபத்து சோதனையையும் எமிஷன் சோதனையையும் வெற்றிகரமாக முடிக்கும் 1500 கிலோவிற்கு குறைவான கார்களை விற்பனை செய்யலாமென்று அனுமதி வழங்கி உள்ளது. இது ஏற்கனவே பதிவோ விற்பனையோ செய்யக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட பல கார் தயாரிப்பாளர்களுடைய 140 மாடல் கார்கள் மீதான தடை உத்தரவை ரத்து செய்கிறது. முந்தைய தடை உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த பல கார் தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு மகத்தான நற்செய்தியாகும். ஏனெனில் வடகிழக்கு இந்தியாவில் மிக முக்கிய கார் சந்தையாக அஸ்ஸாம் விளங்குகிறது. மாதத்திற்கு சுமார் 5000 கார்கள் வரை இங்கே விற்பனை ஆகிறது. முந்தைய நீதிமன்ற தடை உத்தரவு முழுமையாக வாகன உற்பத்தியை பாதித்திருந்தது.இந்த வழக்கில் மேலும் விசாரணை வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிகிறது.
முன்னதாக அஸ்ஸாம் மாநில போக்குவரத்து துறை நீதிமன்றத்தில் இருந்து ஸ்விப்ட், ஆல்டோ, ஐ10 ஜாஸ் போன்ற கார்களை விற்கக்கூடாது என்று பெற்றிருந்த தடை உத்தரவை எதிர்த்து SIAM ஒரு பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில் EuroNCAP அதாவது ஐரோப்பிய நாடுகளில் செய்யப்படும் புதிய கார்களை சோதனை செய்யும் அமைப்பின் முறை படி இங்கே வாகனங்கள் சோதிக்கப்பட வேண்டும் என்று கோர்ட் ஆர்டரில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கே அந்த முறை பழக்கத்தில் இல்லை. மேலும் SIAM தன் மனுவில்" இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் பரிந்துரை செய்துள்ள அனைத்து விபத்து மற்றும் எமிஷன் சோதனைகளை வெற்றிகரமாக கடந்த பின்னரே கார்கள் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ARAI போன்ற இந்திய வாகன ஆராய்ச்சி அமைப்பின் வல்லுனர்களாலும் சோதிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்ட பின்பே வாகனங்கள் விற்பனைக்கு செல்லுகின்றன என்று கூறியுள்ளது.
நீதிமன்றம் தனது தடை நீக்க உத்தரவில் .” 1500 கிலோவிற்கு குறைவான எடை உடைய வாகனங்கள் பதிவு செய்யப்படவோ விற்பனை செய்யப்படவோ விதிக்கப்பட்ட தடை இந்தா உத்தரவின் மூலம் தளர்த்தப்படுகிறது. விற்பனைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் முறையான அரசு செய்துள்ள பரிந்துரைகளின் படி சமந்தப்பட்ட உயர் அதிகாரிகளாலும் அமைப்பினாலும் முழுமையான விபத்து மற்றும் எமிஷன் சோதனைகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகிறது' என்று கூறியுள்ளது.