மறைந்த எப்1 கார் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்ஷி யில் நினைவாக கார் நம்பர் 17 க்கு ஓய்வு - எப்ஐஎ முடிவு.
published on ஜூலை 23, 2015 12:27 pm by sourabh
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: பார்முலா ஒன் கார் பந்தயங்களுக்கான நிர்வாக வாரியமான எப்ஐஎ (பெடரேஷன்இன்டர்நேஷனல் டி ல'ஆடோமொபில்) ஜூல்ஸ் பியான்ஷி பயன்படுத்திய 17 என்ற இலக்கம் கொண்ட பார்முலா காருக்கு மறைந்த ஜூல்ஸ் பியான்ஷிக்கு மரியாதை செலுத்தும் முகமாக ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது. 25 வயதான இந்த பிரெஞ்சு நாட்டு கார் பந்தய வீரர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி நடந்த ஜப்பானீஸ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின்போது கொடூரமான விபத்தை சந்தித்து மூளையில் பலத்த காயம் அடைந்தார். மூன்றுமுறை உலக சாம்பியனான அய்ர்டன் சென்னா என்ற வீரர் 1994- ம் வருடம் சான் மரியானோ கிராண்ட் பிரிக்ஸ்ஸின்போது மரணமடைந்ததற்கு பிறகு F1 கார் பந்தயங்களில்இப்போது மரணம் அடைந்துள்ள ஜூல்ஸ் பியான்ஷி தான் இத்தகைய சோக முடிவுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் மட்டும் 15 முறை பல்வேறு பந்தயங்களில் ஜூல்ஸ் பியான்ஷி தான் விரும்பி தேர்ந்தெடுத்த 17 என்ற எண்ணை தன்னுடைய காருக்கு பயன்படுத்தினார். F1 பந்தய வீரர்களுக்கு அவர்களுக்கு பிடித்த எண்ணை தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டு வருகிறது என்பது கூடுதல் செய்தியாகும்.
ஜோன் டோட், பெடரேஷன் இன்டர்நேஷனல் டி ல'ஆடோமொபில் லின் தலைவர் ஜான் டோட் இந்த சம்பவம் குறித்து பேசும் போது பின்வருமாறு கூறினார். “17 என்ற இலக்கம் கொண்ட பார்முலா காருக்கு மறைந்த ஜூல்ஸ் பியான்ஷிக்கு மரியாதை செலுத்தும் முகமாக ஓய்வு அளிக்க முடிவு எப்ஐஎ செய்துள்ளது. இதன் காரணமாக இந்த 17 எண்ணை இனிமேல் எப்ஐஎ பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்த 17 எண் கொண்ட காரை பார்க்கமுடியாது" என்று கூறினார்.
ஜூல்ஸ் பியான்ஷி இந்த கோர விபத்திற்கு பிறகு சுமார் 9 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். அதன் பிறகே அவர் இன்னுயிர் பிரிந்தது. முன்னதாக அந்த பந்தயத்தின் போது அதி வேகத்தில் அவரது கார் விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்கும் கிரேன் மீது படு பயங்கரமாக மோதியதாலேயே இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருடைய இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான நைசில் செயின்ட் ரிபாரடி சதுக்கத்தில் நடந்தேறியது.