• English
  • Login / Register

டெல்லியின் ஒற்றை-இரட்டை திட்டத்தை குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

published on டிசம்பர் 29, 2015 09:31 am by sumit

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதுடெல்லி:

Everything About Odd-Even Policy

ஒற்றை-இரட்டை திட்டத்தை (ஆடு-ஈவன் பாலிசி) அமல்படுத்துவதற்கான ப்ளூபிரிண்ட்டை, டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதுமையான விதிமுறையை சோதனை முறையில் 15 நாட்கள் நடைமுறைப்படுத்தி, அதற்கான வரவேற்பு எவ்விதத்தில் உள்ளது என்பது பதிவு செய்யப்படும். அதன்பிறகு இந்த திட்டத்திற்கான விதிமுறைகளில் காலஅளவு மட்டுமே வேறுபடுமே தவிர, மற்ற விபரங்கள் அனைத்தும் பெரும்பாலும் அப்படியே செயல்படுத்தப்படும். முன்பு, வார நாட்களின் (பதிவெண் பிளேட்களில் ஒற்றைப் படை எண்களை கொண்ட கார்கள், திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும், இரட்டைப் படை எண்களை கொண்ட கார்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களிலும்) அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற யூகம் நிலவிய நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ளூபிரிண்ட்டில் விதிமுறைகளில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒற்றைப் படை கார்கள் ஓடும் என்று குறிப்பிட்ட நாட்களில் இரட்டைப் படை கார்களும், இரட்டைப் படை கார்களின் நாட்களில் ஒற்றைப் படை கார்களும் ஓடும். ஞாயிற்றுக்கிழமைகளில் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

AAP அரசு மூலம் வெளியிடப்பட்டுள்ள ப்ளூபிரிண்ட்டை குறித்து நமது வாசகர்களுக்காக நாங்கள் ஒரு ஆய்வு நடத்தி, கடந்த 24 ஆம் தேதி (2015 டிசம்பர்) அன்று வெளியிட்டிருந்தோம்.

1. திட்ட அமலாக்க காலம்: ஜனவரி 1 – ஜனவரி 15, 2016

2016 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. முதல் அறிவிப்பிற்கு பிறகு எழுந்த எதிர்ப்புகளை தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்பை பாதுகாப்பது மற்றும் பொது மக்களை ஆறுதல்படுத்துவது ஆகிய இரண்டையும் சரிசமமாக மதிக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டதால், இத்திட்டத்தை சோதனை நடைமுறையில் அமல்படுத்தும் காலத்தை 15 நாட்களாக குறைக்கப்பட்டது. இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறுகையில், இந்த சோதனை காலஅளவில் கிடைக்கும் வரவேற்பை பதிவு செய்து கொண்டு, அதற்கு ஏற்ப அடுத்தக்கட்ட பரிந்துரைகள் எடுக்கப்படும் என்றார். அவர் கூறுகையில், “இந்த 15 நாட்களின் முடிவில் ஒரு மதிப்பீட்டை நாங்கள் நடத்த உள்ளோம். இத்திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை கொண்டு வருவது குறித்து நாங்கள் ஆலோசிப்போம். உயர் மாசுப்படுதல் அளவை எதிர்கொள்ள, பல நாடுகளிலும் இது போன்ற  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

2. ஒற்றை எண் கார்களுக்கு ஒற்றை தேதிகள் மற்றும் நேர்எதிரானது

Odd Cars on Odd Dates and Vice-Versa

முந்தைய யூகங்களை விட்டு விலகி, ஒற்றை எண்களை கொண்ட கார்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இயக்க அனுமதிக்கப்படாமல், ஒற்றை தேதிகளில் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இரட்டை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்களில் இயக்க அனுமதிக்கப்படாமல், இரட்டை தேதிகளில் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

3. கட்டுப்பாட்டிற்கான நேரம் – காலை 8 முதல் மாலை 8 வரை

இத்திட்டத்தின் கட்டுப்பாட்டிற்கான நேரம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஆகும். இரவில் பயணிப்போரின் பாதுகாப்பையும், அந்நேரத்தில் பொது வாகனங்களின் எண்ணிக்கை குறைவு என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

4. பெண்களுக்கு (தனியாக பயணிப்போர்) விதிவிலக்கு

தனியாக பயணிக்கும் பெண்கள் அல்லது ஒரு குழந்தையுடன் (12 வயதிற்கு குறைவான) பயணிக்கும் பெண்கள், இந்த கட்டுப்பாடுகளை குறித்து கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அவர்கள் இதில் உட்படுவதில்லை.

5. ஞாயிற்றுக் கிழமை விதிவிலக்கு

இந்த விதிமுறை வேலை நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) மட்டுமே கடைப்பிடிக்கப்படும் என்பதால், விடுமுறை நாட்களை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

6. அபராதம் – ரூ.2,000

இந்த விதிமுறையை மீறியவர்களாக கண்டுபிடிக்கப்படும் நபர்களிடம், டெல்லி போலீசார் அதிகபட்சமாக ரூ.2,000 அபராதம் வசூலிக்க உள்ளனர்.

7. மற்ற மாநிலங்களின் வாகனங்களுக்கும் இது பொருந்தும்

மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட கார்களும் இந்த விதிமுறையின் கீழ் கொண்டு வரப்படும். ஏனெனில் உத்தரபிரதேசம் (நொய்டா) மற்றும் ஹரியானா (குர்காவுன்) ஆகிய மாநிலங்களின் மூலம் தான் டெல்லியில் கூடுதல் வாகன நெரிசல் ஏற்படுகிறது என்பதே இதன் மிக முக்கிய காரணமாகும்.

8. வி..பி.க்கள் வரம்பிற்கு வெளியே

இந்த திட்டத்திற்குள் உட்படுத்தப்படாத விஐபிக்களின் ஒரு நீண்ட பட்டியல், இந்த ப்ளூபிரிண்டில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்களின் விபரம் பின்வருமாறு:

  • இந்திய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி
  • இந்திய பிரதமர்
  • இந்திய தலைமை நீதிபதி
  • லோக்சபாவின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்
  • ராஜ்யசபாவின் தலைவர் (துணை ஜனாதிபதி) மற்றும் துணை தலைவர்
  • லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் மத்திய அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள்
  • டெல்லியை தவிர, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள்.
  • மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் லேப்டினன் கவர்னர்கள்
  • உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் லோக்ஆயுதா நீதிபதிகள்

திகைப்பிற்கு இடமளிக்காமல், டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் (இத்திட்டத்தை வடிவமைத்தவர்), இந்த வரம்பிற்குட்படாதவர்களின் பட்டியலில் இருந்து தனது பெயரை விலக்கி வைத்துள்ளார்.

9. வரம்பிற்கு உட்படாத வாகனங்கள்

மேற்கூறிய விதிமுறைகளுக்கு உட்படாத வாகனங்களின் மற்றொரு பட்டியல், இதனோடு சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அவையாவன:

  • துணை ராணுவப் படைகள் மற்றும் பாதுகாப்புத் துறையை சேர்ந்த வாகனங்கள்
  • சிறப்பு பாதுகாப்பு குழுக்களின் வாகனங்கள்
  • தூதரகப் படையின் பதிவெண்களை கொண்ட வாகனங்கள்
  • இரு சக்கர வாகனங்கள்
  • CNG கார்கள்
  • அவசர (எமர்ஜென்ஸி) வாகனங்கள்
  • மாற்றுத் திறனாளிகளால் ஓட்டப்படும் வாகனங்கள்
  • எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்கள்

ஒரு வாகனம் ஆம்புலன்ஸாக இல்லாத பட்சத்திலும், மக்கள் அவசர நிலையில் இருந்தால், அதை டெல்லி போலீசார் புரிந்து கொள்ள வேண்டும். ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது, மஹிந்திரா (ரிவா) போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஒரு நற்செய்தி ஆகும். ஏனெனில் இதனால் அதன் வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Pollution

இந்த திட்டம் வெற்றிப் பெறுவதன் பொறுப்பை குடிமக்களின் மீது டெல்லி அரசு வைத்துள்ளது. திரு.கேஜ்ரிவால் கூறுகையில், மக்களால் முடிந்த ஒரு அதிக நடைமுறை கொண்ட தீர்வு என்பது, காரை அசட்டை செய்வது தான். அதிகரித்து வரும் பளுவை தீர்ப்பதில், மக்களின் போக்குவரத்து மட்டும் ஒரு தீர்வாக அமையாது என்றார்.

டெல்லியில் காற்று மாசுப்படுதலில் ஒரு நம்பிக்கையில்லாத நிலை ஏற்பட்ட போது, அதை களைய வேண்டும் என்பதன் விருப்பத்தின் விளைவாக மேற்கூறிய காரியங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்றம் மூலம் டெல்லி பகுதியில் டீசல் கார்களின் (2,000cc என்ஜின் செயல்திறன் அல்லது அதற்கு அதிகமாக) விற்பனைக்கு 3 மாதங்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கார்களின் பட்டியலில் உட்படும்

ஸ்கார்பியோ, XUV500, சைலோ போன்ற கார்களின் உற்பத்தியாளர், இந்திய கார் தயாரிப்பாளரான மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஆகும். மேலும் அனைத்து டேக்ஸிகளும் வரும் 2016 மார்ச் மாதத்திற்குள் நவீன CNG-க்கு,

மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience