தீபாவளிக்கான சிறப்பு தொகுப்பு: கார் வாங்குவதற்கான கையேடு

published on நவ 09, 2015 02:57 pm by cardekho

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது ஒரு கார் காலம் என்று குறிப்பிடும் அளவிற்கு, வாகன சந்தை டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. ஒரு வருடத்தின் பெரும்பாலான விற்பனை இந்த பண்டிகை காலங்களிலேயே நடைபெறுகிறது. விழாக் காலத்திற்கான ஸ்பெஷல் எடிஷன்கள் மற்றும் பலவிதமான புதிய கார்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருப்பது, வாகன உலகம் முழுமையாக விழாக் கோலம் பூண்டுள்ளதைத் தெரிவிக்கிறது. புதிய அறிமுகங்களைப் பற்றி பேசும் போது, ஒரு சில மாடல்கள் முன்பதிவு காலங்களிலேயே அதிகப்படியான வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற்று நெத்தியடி அடித்து தங்களது நிறுவனத்திற்கு பெருமை சேர்த்தன. அவற்றில், கிவிட், கிரேட்டா மற்றும் பலீனோ ஆகிய கார்களை முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? கவலையை விடுங்கள். நாங்கள் உங்களுக்காக, தெளிவாக வரையறுக்கப்பட்ட பல விதமான பர்சேஸ் கையேடுகளின் முழு தொகுப்பை இங்கே தருகிறோம். இந்த பர்சேஸ் கைடுகள், ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் வரம்பிற்குள் வரையறுக்கப்பட்டவையாகும்.

வாங்குவதற்கான கையேடு: ரூ. 2 – 4 லட்சம் விலையில் கிடைக்கும் சிறந்த கார்கள்

Renault KWID

அடிப்படை நிலையில் உள்ள என்ட்ரி லெவல் ஹாட்ச் பேக் கார்கள் 4 பேர் அமர்ந்து பயணம் செய்ய மிகவும் சிறந்ததாக உள்ளன. இவற்றில், அடிப்படை அம்சங்களான குளிர் சாதன வசதி மற்றும் திடமாகவும் சீராகவும் உள்ள இவற்றின் அமைப்பு, காரின் வெளியே மாறிக் கொண்டிருக்கும் சீதோசன நிலையில் இருந்து உங்களை நிச்சயமாக காப்பாற்றும். இது தவிர, இந்த பிரிவு கார்கள், நான்கு சக்கர வாகன உலகத்திற்குள் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த உணர்வைக் கொடுக்கவல்லதாக இருக்கின்றன. தீபாவளி மிக நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பிரிவில் உள்ள, நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டிய கார்களைப் பற்றி இங்கு காண்போம்.

  • ரினால்ட் கிவிட் விலை – ரூ. 2.56 – 3.53 லட்சம்
  • மாருதி அல்டோ 800 விலை – ரூ. 2.89 – 3.47 லட்சம்
  • மாருதி அல்டோ K10 விலை – ரூ. 3.19 – 4.05 லட்சம்
  • ஹுண்டாய் EON 0.8 லிட்டர் விலை – ரூ. 3.10 – 4.13 லட்சம்
  • டாட்சன் GO   விலை - ரூ. 3.23 – 4.19 லட்சம்

வாங்குவதற்கான கையேடு: ரூ. 4.0 – 6.0 லட்சம் விலையில் கிடைக்கும் சிறந்த கார்கள்

Hyundai Grand i10

ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 6 லட்சம் வரை உங்கள் கார் பட்ஜெட் இருந்தால், உங்களுக்கு பலவிதமான சாய்ஸ்கள் உண்டு. என்ட்ரி லெவல் ஹாட்ச் பேக் கார்களை ஒப்பிடும் போது, இந்த பிரிவில் வரும் கார்களின் அளவு பெரிதாக உள்ளது. எனவே, அதிகமான கொள்ளளவையும், அருமையான சிறப்பம்சங்களையும், சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும்  பெற்று கம்பீரமாக வலம் வருகின்றன. நமது வாகன சந்தையில், இந்த B  செக்மெண்ட் எப்போதும் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. எதை வாங்குவது என்று உங்களைத் திக்கு முக்காடச் செய்யும் அளவிற்கு  பல  விதமான மாடல்கள் இந்த பிரிவில் உள்ளன. இவை தவிர, வெளிநாட்டு ஃபிராண்ட்களான ஹோண்டா மற்றும் நிஸ்ஸான் நிறுவனங்கள், தங்களது  படைப்புகளை இந்த பிரிவில் வெளியிட்டுள்ளன.

  • ஹுண்டாய் கிராண்ட் i10 விலை – ரூ. 4.70 – 6.70 லட்சம்
  • மாருதி சுசூக்கி வேகன் ஆர் விலை – ரூ. 3.70 – 4.80 லட்சம்
  • ஹோண்டா பிரியோ விலை – ரூ. 4.30 – 6.80 லட்சம்
  • செவ்ரோலெட் பீட் விலை – ரூ. 4.30 – 6.40 லட்சம்
  • ஃபோர்ட் பிகோ விலை – ரூ. 4.3 – 7.4 லட்சம்

வாங்குவதற்கான கையேடு: ரூ. 6.0 – 8.0 லட்சம் விலையில் கிடைக்கும் சிறந்த கார்கள்

இந்த பிரிவு கார்கள் திடீரென்று நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டன. இவற்றை விரும்பி வாங்குவதற்கான முக்கிய காரணம், இந்திய அரசாங்கம் 4 மீட்டருக்கும் குறைவான நீளமுடைய வாகனங்களுக்கு வரிச் சலுகை தருவதே ஆகும். நீங்கள், ஒரு சேடான் காரில் உள்ள இட வசதியையும், காம்பாக்ட் ஹாட்ச் பேக் காரில் வரும் நடைமுறை பயன்களையும் ஒரு சேரப் பெற வேண்டும் என்று நினைத்தால், இந்த பிரிவில் உள்ள கார்களில் ஒன்றை தாராளமாகத் தேர்ந்தெடுக்கலாம். இந்த விலையில் வரும் சிறந்த கார்களை உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.  

  • ஹோண்டா அமேஸ் விலை – ரூ. 5.2 – 8.3 லட்சம்
  • மாருதி சுசுகி ஸ்விஃப்ட் விலை – ரூ. 4.6 – 7.3 லட்சம்
  • மாருதி சுசுகி ஸ்விஃப்ட் டிசயர் விலை – 5.20 – 7.90 லட்சம்
  • ஹுண்டாய் எலைட் விலை – ரூ. 5.30 – 8.20 லட்சம்

வாங்குவதற்கான கையேடு: ரூ. 8.0 – 10.0 லட்சம் விலையில் கிடைக்கும் சிறந்த கார்கள்

எக்கச்சக்கமான ஆப்ஷங்களை உள்ளடக்கியுள்ள இந்த சேடான் பிரிவில், உங்களுக்கான சிறந்த காரைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே கடினமான செயலாகும். ஒவ்வொரு காரிலும் நன்மைகளும் சிரமங்களும் உள்ளன. எனவே, பல விதமான கார்கள் முன்னின்று, சிறந்த கார் வாங்க நினைக்கும் உங்களை குழப்பி விடாமல் இருப்பதற்காக, நாங்கள் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் விலையில் உள்ள சிறந்த கார்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

  • ஹோண்டா சிட்டி விலை – ரூ. 7.6 – 11.9 லட்சம்
  • மாருதி சியாஸ் விலை – ரூ. 7.3 – 10.2 லட்சம்
  • ஹுண்டாய் வெர்ணா விலை – ரூ. 7.8 – 12.3 லட்சம்
  • வோக்ஸ்வேகன் வெண்டோ விலை – ரூ. 7.8 – 11.9 லட்சம்

ரூ. 15 லட்சத்திற்கு உட்பட்ட செயல்திறன் மிக்க வாகனங்கள்

நமது வாகன சந்தை, செயல்திறன் மிக்க வாகன பிரிவில் சமீபத்தில் ஒரு பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த அபார வளர்ச்சிக்கு காரணம், எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் கச்சிதமான SUV பிரிவு கார்களையே சேரும். ரினால்ட் நிறுவனம் இந்த பிரிவில் மாபெரும் வெற்றியை தனது டஸ்டர் கார்களின் மூலம் பெற்றுள்ளது. ஹுண்டாய்யின் சமீபத்திய வரவான கிரேட்டாவும், இந்த கொரியன் கார் தயாரிப்பாளருக்கு அருமையான வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் புதிய கார் அறிமுகங்களால், கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். ரூ. 15 லட்சத்திற்கு குறைவான செயல்திறன் மிக்க கார்களில், நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய கார்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

  • ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் விலை – ரூ. 6.8 – ரூ. 10.5 லட்சம்
  • ரினால்ட் டஸ்டர் விலை – ரூ. 8.3 – 13.5 லட்சம்
  • ஹுண்டாய் கிரேட்டா – ரூ. 8.6 – 13.6 லட்சம்
  • மஹிந்த்ரா TUV 300 விலை – ரூ. 7.0 – 9.2 லட்சம்
  • மஹிந்த்ரா ஸ்கார்பியோ விலை – ரூ. 8.4 – 14.5 லட்சம்

வாங்குவதற்கான கையேடு: ரூ. 15.0 – 30.0 லட்சம் விலையில் கிடைக்கும் சிறந்த SUV கார்கள்

ரூ. 30 லட்சத்திற்கு குறைவான உயர்தர SUV பிரிவில் உள்ள கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? உங்களை குழப்புவதற்காகவே சந்தையில் பல விதமான கார்கள் உள்ளன. ஃபார்ச்சூனரின் நம்பகத்தன்மை வேண்டுமா அல்லது டிரைல் பிளேசரின் சக்தி வேண்டுமா என்பதை நீங்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும். உங்களுக்கான சிறந்த காரை எளிதாகத் தேர்ந்தெடுக்க முன்னணியில் உள்ள உயர்தர SUV  கார்களில் ஐந்தை மட்டும் இங்கே திறனாய்ந்து கொடுத்துள்ளோம்.

  • டொயோடா ஃபார்ச்யூனர் விலை – ரூ. 24.2 – 27.0 லட்சம்
  • மஹிந்த்ரா XUV 500 விலை – ரூ. 11.5 – 16.4 லட்சம்
  • செவ்ரோலெட் டிரைல் பிளேசர்  விலை – ரூ. 26.4 லட்சம்
  • ஹோண்டா CR –V விலை – ரூ. 21.1 – 25.1 லட்சம்
  • ஹுண்டாய் சாண்டா ஃபே விலை - ரூ. 27.1 – 30. 4 லட்சம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience