• English
  • Login / Register

டாக்டர். ப்ரிஜ்மோகன் லால் முன்ஜால் அவர்களின் மறைவு SIAM ற்கு பேரிழப்பு

published on நவ 03, 2015 10:59 am by sumit

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ குழுமத்தின் நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர். ப்ரிஜ்மோகன் லால் முன்ஜால் தன்னுடைய 92 ஆவது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார்.  அவர் தன்னுடைய காலத்தில் பல உயரிய பொறுப்புக்களை வகித்து வந்துள்ளார். AIAM/SIAM அமைப்புக்களுக்கு தலைவராகவும் பொருளாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.  அவரின் மரணத்திற்கு SIAM உட்பட பல அமைப்புக்களிடம் இருந்து இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : சஹாரா போர்ஸ் இந்தியா F1 அணி  ஏஸ்டன் மார்டின் ரேசிங் என்று அழைக்கப்படும்?!

டாக்டர். ப்ரிஜ்மோகன் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த வாகன உலகுக்கே பேரிழப்பு என்றும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும்  கூறியுள்ளார்.   இந்திய வாகன தயாரிப்பு தொழிலில் ஒரு விடிவெள்ளியாக திகழ்ந்தவர்.  உலக அளவில் இன்று இந்திய இரு சக்கர வாகன தயாரிப்புக்களுக்கு கிடைத்துள்ள  அங்கீகாரத்திற்கு மிக முக்கிய காரணமாக  விளங்கியவர்  ப்ரிஜ்மோகன்  அவர்கள்.  வாகன தொழிலில் பேரார்வம் மிக்க  திரு. ப்ரிஜ்மோகன் எப்படி ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக கட்டி எழுப்புவது என்பதை ஒரு அற்புதமான தலைவராக நின்று உலகுக்கு செய்துக் காட்டியவர்.

இதையும் படியுங்கள் : டேட்சன் இந்தியாவை தனது கோட்டையாக்க போகிறது, ஸிஇஒ சூசகம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தொடர்ச்சியாக 14 ஆவது ஆண்டு உலகத்தின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளர் என்ற பெருமையை தட்டி செல்வதற்கு ஒரே முக்கிய காரணமாக விளங்கியவர் ப்ரிஜ்மோகன் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வாகன  தொழிலின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு கணக்கில் அடங்காதது.  பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்குள் ஒருமித்த கருத்து உருவாவதற்கும் , ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றுமையான இந்திய வாகன தொழில் வளர்வதற்கும் அவர் செய்த முயற்சிகளை SIA M என்றும் நன்றியுடன் நினைவு கூறும் என்பது திண்ணம்.  நல்ல தொலைநோக்கு பார்வை கொண்டவரான திரு. ப்ரிஜ்மோகன் உலக வாகன தொழில்துறையில் இந்திய நிலையை வலுவாக்கியவர் என்று SIAM அமைப்பின் தலைவர் திரு. வினோத் தாசரி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். முன்னதாக இந்த வருட துவக்கத்தில் நடந்த SIAM அமைப்பின் பொதுக் குழு கூட்டத்தில் திரு. ப்ரிஜ்மோகன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வணிகம் மற்றும் தொழில்துறையில் ஆற்றிய பணிக்காக பத்மபூஷன் விருது வழங்கி இந்திய அரசாங்கமும்  அவரை கௌரவித்திருந்தது.  

இதையும் படியுங்கள் : இஸுசு இந்தியாவில் புதிய நிறுவனத்தை உருவாக்குகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience