சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

தில்லி அரசாங்கம் அறிவிப்பு: 10 வருடத்திற்கும் மேற்பட்ட கார்களை விற்க ரூபாய். 1.5 லட்சம் வரை தள்ளுபடி

published on அக்டோபர் 07, 2015 04:53 pm by manish

தில்லி அரசாங்கம் 10 வருடத்திற்கும் மேற்பட்ட கார்கள் மீதான தடையை, மக்கள் எவ்வாறு எளிதாக கையாள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பல விதமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. புது டெல்லியில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட டீசல் கார்களை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நேஷனல் க்ரீன் ட்ரிப்யூனல் கேட்டுக் கொண்டது.

சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்ட இந்தத் தடை தற்போது நடைமுறையில் இல்லை என்றாலும், மக்கள் தங்கள் பழைய கார்களை உபயோகப்படுத்தும் நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும் என்பதை, டெல்லி அரசாங்கம் பல்வேறு விதமாக அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த விளக்க முறைகளைத் தவிர, 10 வருடத்திற்கும் மேற்பட்ட கார்களையோ மற்ற வர்த்தக வாகனங்களையோ விற்பனை செய்யும் பொதுமக்களுக்கு, பல விதமான நிதி சலுகைகளை அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல திட்டங்களை வகுத்து வருகிறது. சாலை போக்குவரத்து துறை அமைச்சர், இந்த திட்டத்தை அறிவித்தார்.

தங்களது 10 வருடத்திற்கும் மேற்பட்ட பழைய கார் மாடல்களை விற்ற பின், அரசாங்கத்திடம் ஒரு சிறப்பு சான்றிதழை மக்கள் பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் மீண்டும் புதிய காரை வாங்கும் போது, இந்த சான்றிதழை உபயோகித்து புதிய காரின் விலையில் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம். இந்த அரசாங்க சான்றிதழ்கள், பரவலாக அனைத்து விதமான கார் ஷோரூம்களிலும் செல்லுபடி ஆகும். எனினும், தள்ளுபடி விலை பல காரணிகளுக்கு ஏற்றபடி மாறும். அதாவது, காரின் அளவு மற்றும் காரின் நிலையைப் பொறுத்து, கார் உரிமையாளர்கள் ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் ஒன்றரை லட்சம் வரை விலைத் தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம்.

கட்காரி இது பற்றி கூறும் போது, சிறிய ரக கார் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பட்சத்தில், இந்த தள்ளுபடி விலை ரூபாய். 30 ஆயிரம் வரை குறையும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார். இது வரை, டெல்லி அரசாங்கம் இந்த திட்டங்களை அமலுக்கு கொண்டு வரவில்லை. தற்போது, இந்த திட்டம் பூர்வாங்க நிலையிலேயே (பிரோபோசல் ஸ்டேஜ்) இருக்கிறது. பழைய மலிவான கார்களை தடை செய்யும் திட்டம் அமுலுக்கு வந்தால், இத்தகைய கார்கள் டெல்லியில் அருகிலுள்ள அண்டைய மாநிலங்களில் விற்கப்படும். ஆனால், புதிய காருக்கு தள்ளுபடி வழங்கும் திட்டம் மூலம், அவ்வாறு பதுக்கப்படும் கார்களின் எண்ணிக்கை, மிகக் கணிசமாக குறைந்து விடும்.

m
வெளியிட்டவர்

manish

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை