டில்லியில் டீசல் கார் தடை பற்றி வாகன தொழில்துறையின் கருத்துக்கள்
published on டிசம்பர் 18, 2015 02:59 pm by nabeel
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
டில்லியில் டீசல் கார்களை தடை செய்ய பிறப்பித்துள்ள உத்தரவைப் பற்றிய கவலைகளையும் கருத்துக்களையும், பல்வேறு கார் உற்பத்தியாளர்கள், தங்கள் உத்தியோகபூர்வ அறிக்கைகளில் பதிவு செய்துள்ளனர்.
டில்லியில் டீசல் கார்களுக்கான தடையின் தாக்கம் வெவ்வேறு விதமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றுசூழல் ஆர்வலர்கள் தங்கள் பரம திருப்தியை தெரிவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், வாகன தொழில்த்துறை ‘இது முறையல்ல’ என்று முறையிடுகிறது. நன்கு ஸ்தாபனமான நிறுவனங்களின் ஏராளமான முன்னணி மாடல் கார்கள், இந்த தடை உத்தரவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, கார் தயாரிப்பாளர்கள், இந்த தடை உத்தரவைப் பற்றிய வலுவான அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். எந்த கார் தயாரிப்பாளரும் இந்த தடை உத்தரவைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை என்றாலும், இந்த புதிய கட்டுப்பாடுகளை சமாளிக்க பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உத்திகளை மறுபரிசீலனை செய்யவேண்டி இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ்
டீசல் கார்களுக்கான புதிய தடை காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட கார் தயாரிப்பாளர்களில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர், தனது அனைத்து டீசல் மாடல்களிலும் 2 லிட்டர் அல்லது அதற்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட இஞ்ஜினையே பொறுத்தியுள்ளார். எனவே, இந்த தடையின் காரணமாக மெர்சிடிஸ் ஒரு நல்ல மாற்று நிலையை கையாள வேண்டிய சூழலில் உள்ளது, ஏனெனில், தற்போது NCR பகுதியில் மட்டும் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 10 டீலர்ஷிப்கள் உள்ளன. புதிய விதியின் படி, இந்த 10 டீலர்ஷிப்களில் இடம்பெற்றுள்ள 11 மாடல்களை NCR பகுதியில் விற்பனை செய்ய முடியாது.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த நிலையைப் பற்றி குறிப்பிடும் போது, “இந்த முடிவு வாகன தொழில்த்துறையைச் சார்ந்த அனைவரையும் கடுமையாக பாதித்து, ஒரு சமத்துவமற்ற நிலை உருவாக ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம். டீசல் இஞ்ஜின்களின் மேல் உள்ள இந்த தடை உத்தரவு, வாகன துறையில் ஒரு நிச்சயமற்ற சூழலை உருவாக்குகிறது. இந்திய சந்தையில், எங்கள் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்கள் மற்றும் எதிர்கால முதலீடுகள் ஆகியவற்றை, இது கடுமையாக பாதிக்கும். மேலும், இந்த முடிவின் காரணமாக டீலர்ஷிப்களிலும், டீசல் இஞ்ஜின் தயாரிப்பு ஆலைகளிலும் ஏற்படும் வேலை இழப்பு மற்றும் எங்களது பணிக்குழுவில் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்றை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று வருத்ததுடன் கூறினார்.
டொயோடா
டொயோடா நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்நிறுவனத்தின் 8 சதவிகித விற்பனை NCR (டில்லி, ஃபரிதாபாத், காஸியாபாத், நொய்டா மற்றும் குர்கான்) பகுதியில் நடைபெறுகிறது. அவற்றில், 80 சதவிகித பெருமான விற்பனை அளவு, டீசல் கார்களின் மூலம் உருவாக்கப்பட்டது என்பதுதான் வேதனையான உண்மை. டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவரான திரு. விக்ரம் கிர்லோஸ்கர், டில்லியின் காற்று தரத்தை பராமரிக்க வேறு விதமான அணுகுமுறையை கையாண்டிருக்க வேண்டும் என்று, தனது கருத்தைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, “டில்லியில் காற்றின் தரம் சீரழிந்து போவதைப் பற்றி நாங்களும் கவலை கொள்கிறோம். அதனால்தான், மேம்பட்ட தொழில்நுட்பங்களான ஹைபிரிட் கார்கள் போன்றவற்றை வழங்குவதில் எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. நாங்கள் எப்போதும் வாகனங்களுக்கான ஒழுங்கு விதிகளுக்கு இணங்கியே செயல்பட்டு வருகிறோம். மாசுபாட்டை செம்மையாக குறைக்கக் கூடிய வாகனங்களைத் தயாரிப்பதே டொயோடா நிறுவனத்தின் சர்வதேச நோக்கமாகும். மாசுபாட்டை உருவாக்கும் பல்வேறு காரணிகளை, ஒரு அறிவியல் பூர்வமான பகிர்மான ஆய்வு மூலம் அளவிட முடியும்,” என்று கூறிய அவர், “வாகன ஒழுங்கு மூலம் காற்றின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொண்டால், மாசுபாட்டை உருவாக்கும் பல தரப்பட்ட காரணிகளை, ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும். இந்த காரணிகளை பலவகைப் படுத்தலாம். அதாவது, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் மற்றும் ஆலைகள் ஏற்படுத்தும் உட்கட்டமைப்பு தொடர்பான மாசு; போக்குவரத்தை ஒழுங்கு படுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களால் விளையும் உபயோகப்டுத்துதல் தொடர்பான மாசு; மற்றும் வாகனம் தொடர்பான மாசு கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்படுதல் என்று நாம் இந்த காரணிகளைப் பிரிக்கலாம். மூல காரணிகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, காற்றின் தரத்தை மேம்படுத்த ஒரு நிலையான, பொருத்தமான செயல்திட்டதை கொண்டு வரவேண்டும்,” என்று சிரத்தையுடன் கூறினார்.
மஹிந்த்ரா
இந்தியாவில், SUV கார்களின் விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் மஹிந்த்ரா & மஹிந்த்ராவும் ஒன்றாகும். மஹிந்த்ராவின் அதிக விற்பனையாகும் SUV காரான போலேரோ, கடந்த அக்டோபர் மாதத்தின் SUV விற்பனை பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. இது தவிர, ஸ்கார்பியோ, ஸ்கார்பியோ கெட்அவே, தார், ஜைலோ மற்றும் XUV 500 போன்ற அனைத்து கார்களிலும், தற்போது தடை செய்யப்பட்டுள்ள இஞ்ஜின்களே பொருத்தப்பட்டுள்ளன என்பது, கவலை தரும் செய்தியாகும்.
“நீதித்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டாளர்கள் இந்த தடை விதித்ததானால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் ஒவ்வொரு நடவடிக்கையின் ஒட்டுமொத்த தாக்கங்களையும் ஆராய்ந்து பார்த்து, இந்த இடைக்கால தடை முடியும் மார்ச் 31, 2016 அன்று, டில்லியில் காற்றி தரத்தை மேம்படுத்த ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் இந்த பிரச்சனையைப் அணுகுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். குறுகிய கால கண்ணோட்டத்தில் பார்த்தால், இன்று பிறபித்துள்ள மாண்புமிகு நீதிமன்ற உத்தரவின் காரணமாக, NCR பகுதியில், எங்கள் நிறுவனத்தின் சில மாடல்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் ஒரு மாத விற்பனையில் சுமார் 2 சதவிகித விற்பனை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள கட்டமைப்பிற்குள் எவ்வாறு வேலை செய்யலாம் என்று எங்கள் நிறுவனம் தற்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறது,” என்று மஹிந்த்ரா & மஹிந்த்ரா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிக்கை குறிப்பிடுகிறது.
மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான திரு. ஆனந்த் மஹிந்த்ராவும் இந்த பிரச்சனை பற்றிய தனது கவலையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர், “நாங்கள் எப்போதும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றை சமாளித்து மேலே எழுவோம். கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கும் எங்களது அசாத்திய ஆற்றலைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்படப் போவது உறுதி, ஏனெனில், கடந்த 10 வருடங்களில் இது போன்ற சூழ்நிலையை நாங்கள் பல முறை கையாண்டிருக்கிறோம். மஹிந்த்ராவின் மரபணுவின் மையத்தில், அசைக்க முடியாத நம்பிக்கையாக, ‘பாதை கடுமையாக இருந்தாலும், மஹிந்த்ரா எளிதாக சென்றுவிடும்’ என்ற முழக்கத்தைக் கொண்டுள்ளது. டீசல் வாகனங்கள் மீதான முடிவு உகந்ததாக இல்லை என்று நாங்கள் நம்பினாலும், அதை நாங்கள் மதிக்கிறோம். அந்த நிபந்தனைகளுக்கு இணங்க எங்கள் வாகனங்களை உருவாக்குவோம். உச்ச நீதிமன்றமானது இந்தியாவின் சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையைத் தாங்கி நிற்கும் ஒரு சமூக நிறுவனம் என்று நான் எப்போதும் நம்பி வருகிறேன்,” என்று ட்வீட் செய்துள்ளார்.
டாடா
டாடா நிறுவனம் டீசல் வாகன தடை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாலும், அதன் பெட்ரோல் வேரியண்ட்களை விற்பனை செய்து மீண்டெழுந்து விடும்.
டாடா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ள 3 மாத காலத்தில், எங்கள் நிறுவனத்தின் விற்பனை சற்றே பாதிப்படைந்தாலும், அண்மையில் தொடர்ந்து வெளியான எங்களது பெட்ரோல் பிரிவு கார்கள், இந்த காலகட்டத்தில் எங்களுக்கு கைகொடுக்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சுற்று சூழலில் அக்கறை கொண்டுள்ளது, ஆனால், இதை வெறும் ஒரு காலாண்டு கால கண்ணோட்டத்தில் பார்க்காமல், சற்றே பெரிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். பரந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போதுதான், ஒரு முழுமையான அணுகுமுறையில் மாசுபாட்டை உருவாக்கும் அனைத்து காரணிகளையும் ஆராய்ந்து, சுற்று சூழலை பாதுகாக்க அனைத்து மட்டங்களிலும் தகுந்த நடவடிக்கைகளை உறுதியாக எடுக்க முடியும். இதற்கு முன்பு சொன்னது போலவே, நீண்ட கால சுற்றுசூழல் கட்டுப்பாடானது, எந்த ஒரு குறிப்பிட்ட எரிபொருளையோ அல்லது தொழில்நுட்பத்தையோ குறி வைக்காமல், ஒட்டுமொத்த மாசு கட்டுப்பாட்டு திட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும்,” என்று கூறுகிறார்.
ஆதாரம்: Autocar வல்லுனர்
மேலும் வாசிக்க