பால் வாக்கர் மரணம் குறித்து போர்ஷ் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கு – விரிவான கண்ணோட்டம்
published on அக்டோபர் 05, 2015 02:13 pm by manish
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
பால் வாக்கரின் 16 வயது மகளான மெடோ வாக்கர், தனது தந்தையின் மரணத்திற்கு காரணம் போர்ஷ் காரில் பொருத்தப்பட்ட தவறான உபகரணங்களே, என்று கூறி 28 செப்டெம்பர் அன்று, ஜெர்மன் கார் தயாரிப்பாளரான போர்ஷ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். அந்த நடிகர் 2013 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உயிர் நீத்தார். அவரது மகள், தனது 40 வயதுடைய தந்தை கார் ஒட்டிக்கொண்டிருக்கும் போதும், ஒரு கம்பத்தின் மீது மோதும் போதும் உயிருடன்தான் இருந்தார் என்றும், கார் கம்பத்தில் மோதிய பின்பு, அவரால் பயணிகள் இருக்கையில் இருந்து விடுபட முடியாததுதான் தனது தந்தையின் மரணத்திற்கு காரணம், என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், அந்த காரில் உள்ள சீட் பெல்ட் பாலின் விலா மற்றும் இடுப்பு எலும்புகளை உடைத்துவிட்டதால் அவர் வெளியே வர முடியவில்லை. மேலும், கம்பத்தில் இடித்த 80 நிமிடத்திற்குள் அவர் சென்ற அந்த கார், எரிபொருள் கசிவு காரணமாக சுடர்விட்டு எரிய ஆரம்பித்துவிட்டது. இந்த விபத்தால், தீக்காயங்கள் பட்டதாலும், நுரையீரலில் புகை மண்டியதாலும், பால் அவதிப்பட்டு இறந்தார். எனவே, இந்த காரணங்களைக் குறிப்பிட்டு நடந்த மரணத்திற்காக மெடோ, போர்ஷ் நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
மெடோ வாக்கரின் வழக்கறிஞரான ஜெஃப் மிலம் தனது அறிக்கையில், “இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், போர்ஷ் நிறுவனத்தின் கர்ரெரா GT கார் மிகவும் அபாயகரமானது. இது சாலையில் செல்ல தகுந்தது அல்ல. இதனால், பால் வாக்கர் மற்றும் அவரது நண்பர் ரோஜர் ரோடாஸ் இருவரையும் நாங்கள் இந்த விபத்தில் இழந்து விட்டோம்,” என்று கூறினார்.
வழக்கு தாக்கலில், “நன்றாக வடிவமைக்கப்பட்ட பந்தைய கார்களில் பொருத்தப்பட வேண்டிய முறையான பாதுகாப்பு அம்சங்கள் அந்த காரில் இல்லை. போர்ஷ் நிறுவத்தின் மிகக் குறைந்த விலையில் வரும் சாதாரண சாலைகளில் செல்லக் கூடிய கார்களில் இடம் பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் கூட இதில் இல்லை. அப்படி இருந்திருந்தால், இத்தகைய விபத்தைத் தடுத்திருக்க முடியும். அல்லது, குறைந்த பட்சம் பால் வாக்கரின் உயிரையாவது காப்பாற்றியிருக்க முடியும்,” என்று குறிப்பிடுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் கௌண்ட்டியின் ஷெரீஃப்பின் கமாண்டரான மைக் பார்க்கர், 2014 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் இது பற்றி கூறும் போது, “தனியாக சென்று கொண்டிருந்த ஒரு வண்டி, அபாயகரமான விபத்தை சந்தித்திருப்பதற்கு முக்கிய காரணம் சாலையில் பாதுகாப்பாற்ற வேகத்தில் சென்றது, என்று விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர்,” என்று கூறினார். கலிபோர்னியாவில் உள்ள சான்டா கிலாரிட்டாவில் ஆஃபிஸ் பார்க் ரோடின் வேக வரம்பு மணிக்கு 45 மீட்டர்.
மேலும், போர்ஷ் நிறுவனம், இந்த வழக்கிற்கு ஊடகங்கள் மூலம் பதில் அறிக்கை கொடுத்திருக்கிறது. “நாங்கள், இதற்கு முன்பு கூறியதை மீண்டும் கூறுகிறோம். போர்ஷ் வாகனத்தில் பயணிக்கும் எந்த ஒரு நபர் காயப்பட்டாலும் நாங்கள் வருத்தப்படுகிறோம். ஆனால், இந்த துயரமான விபத்து, கவனக்குறைவாக வாகனத்தை ஒட்டியதாலும், அதிக வேகத்தை கையாண்டதாலும் ஏற்பட்டது என்பதை, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிக்கைகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.” என்று குறிப்பிடுகிறது.
இந்த விபத்தைப் போலவே, 1955 –ஆம் ஆண்டிலும் ஒரு மிகவும் பிரபலமாகாத சர்ச்சையில் போர்ஷ் நிறுவனம் மாட்டிக்கொண்டது. அப்போது, நடிகர் ஜேம்ஸ் டீன், போர்ஷ் 550 ஸ்பைடர் லிட்டில் பாஸ்டர்ட் காரின் சக்கரங்களுக்குள் சிக்கிக்கொண்டு இறந்து போனார். ஏற்கனவே, சுற்றுசூழல் கட்டுப்பாட்டு சோதனையில் ஏமாற்றியதால் கண்காணிப்பில் இருக்கும் வோக்ஸ்வேகன் குழுமம் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய ஜெர்மனி நிறுவனங்கள் மூலம் சரிவை சந்தித்துள்ள ஜெர்மனியின் வாகன தொழில் துறைக்கு, போர்ஷ் நிறுவனத்தின் மீது தொடுத்துள்ள இந்த வழக்கு மேலும் ஒரு பெரிய சோதனையாக உள்ளது.