ஒரு SMS அனுப்பி பயன்படுத்தப்பட்ட காரின் நம்பகத்தன்மையை சோதனை செய்யலாம்
published on டிசம்பர் 30, 2015 12:25 pm by sumit
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
பயன்படுத்தப்பட்ட கார் வாங்க நினைப்பவர் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் போது ஏற்படும் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், அதன் நம்பகத்தன்மையை சோதனை செய்வதாகும். தற்போது, போக்குவரத்து அமைச்சகத்தின் முயற்சியால் நமக்கு ஒரு எளிமையான தீர்வு கிடைத்துள்ளது. 7738299899 என்ற தொலைபேசி எண்ணிற்கு ஒரு SMS அனுப்புவதன் மூலம், ஒரு காரின் முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த ஹெல்ப்லைன் எண்ணை மக்களுக்காக வெளியிட்டுள்ளது. சமீபத்தில், ‘ஃபேம் இந்தியா எக்கோ ட்ரைவ்’ என்னும் நிகழ்ச்சியை, இந்திய அரசாங்கம் கனரக தொழில் அமைச்சகத்தின் கீழ் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மின்சார வாகனங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதாகும். மேலும், எரிபொருள் சிக்கனத்தின் முக்கியத்துவத்தையும், இந்த நிகழ்ச்சி மக்களுக்கு சுட்டிக் காட்டியது.
ஒரு குறிப்பிட்ட காரின் விவரங்களை சேகரிக்க அரசாங்க அதிகாரிகள் பிரயாசைப் படும்போது, இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்த ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய தொழில்நுட்பத்தில் உருவான, இணையம் சார்ந்த ஒரு அப்ளிகேஷன் இந்த தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு கார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து இன்று வரை, அந்த காரின் முழுமையான வரலாறை இந்த அப்ளிகேஷன் கண்டுபிடித்துத் தந்துவிடும். இந்த புதிய ஆப்பை அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் உபயோகப்படுத்தி, சந்தேகத்திற்குரிய லைசென்ஸ் உண்மையானதா இல்லை போலியா என்பதை, இந்த ஆப் மூலம் உடனடியாக சோதனை செய்து, அதன் நம்பகத்தன்மையை உறுதிபடுத்திக் கொள்ளலாம். அரசாங்கத்தின் வரவேற்கத்தக்க இந்த முயற்சியில் சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த சேவை நமக்கு இலவசமாக தரப்படுகிறது.
போக்குவரத்துத் துறையின் இணைச் செயலரான அப்பே டம்லே, இந்த திட்டத்தின் விவரங்களை வெளியிடும் போது, “கார் வாங்கும் போது குறிப்பிட்ட வாகனம் மற்றும் அந்த வாகனத்தை ஓட்டும் டிரைவரைப் பற்றிய விவரங்களை நாம் சோதனை செய்து கொள்ளலாம். மேலும், இந்த சேவை போலி ஆவணங்களைக் கண்டறிய அமலாக்க ஏஜென்சிகளுக்கு உதவும்,” என்று உற்சாகத்துடன் கூறினார்.
“RTO அலுவலகத்தில் கிடைக்கும் தகவல்களை நாங்கள் இந்த ஆப்பில் இணைத்துள்ளோம். அது மட்டுமல்ல, மேலும் அதை போலீஸ் ரெகார்ட்டுடன் இணைத்துள்ளதால், அந்த குறிப்பிட்ட கார் விபத்துகளில் சிக்கி இருந்தால், அதுவும் நம் கவனத்திற்கு வந்துவிடும்,” என்று மற்றொரு அரசு அதிகாரி தெரிவித்தார்.
பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் நம்பகத்தன்மை குறித்து பல புகார்கள் போக்குவரத்து அமைச்சகத்திற்கு வந்ததால், இத்தகைய அதிநவீன SMS சார்ந்த சேவை மற்றும் ஆப் போன்றவற்றை, தேசிய தகவலியல் மையம் போது மக்களுக்காக உருவாக்கியுள்ளது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful