இதை கவனியுங்கள் ! மெர்க் மற்றும் அகஸ்டா நிறுவனங்கள் தங்களது தொழில் முறை கூட்டாண்மையின் நினைவாக புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகப்படுத்தியது
ஜெய்பூர்: மெர்சிடீஸ் மற்றும் MV அகஸ்டா நிறுவனங்கள் தங்கள் கூட்டாண்மையின் நினைவாக F3 800 என்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்து தங்கள் உறவை கொண்டாடினர். இந்த மோட்டார் சைக்கிள் " செயல்திறன் மற்றும் கட்டுகடங்கா உணர்வின் மறுவடிவம் " என்று இந்நிறுவனங்களால் வர்ணிக்கப்படுகிறது.. இந்த மோட்டார் சைக்கிள் மெர்சிடீஸ் - AMG GT S காரின் அடிப்படையில் இருந்து தன் பாதிப்பை பெற்று உருவாகியுள்ளது. . இந்த மோட்டார் சைக்கிளுக்கும் AMG காரின் வெளிப்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதே கருப்பு கோடுகளுடன் கூடிய சூரிய ஒளியில் பிரகாசிக்கும் மஞ்சள் நிறம் கொடுக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. மேலும் AMG/MV அகஸ்டா என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது . AMG GT S கார்கள் நப்பா தோலினாலான ட்ரிம் களில் வெளிவரும் அதே வேளையில் இன்னொருபுறம் இந்த அகஸ்டா F3 800 மோட்டார் சைக்கிள்கள் கருப்பு நிறத்திலான சீட் கவர் மற்றும் அதற்கு எதிர்மறையான மஞ்சள் நிற தையல்கள் போடப்பட்டு படு நேர்த்தியான தோற்றத்துடன் வெளிவந்துள்ளது.
இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 4 .0 லிட்டர் V8 என்ஜின் மூலம் இந்த கார் சக்தியூட்டப்படுகிறது . இந்த என்ஜின் 1750 - 5000rpm என்ற அளவிலான சுழற்சியில் 503bhp அளவிலான சக்தியையும் 650Nm அளவிலான முடுக்கு விசையும் வெளிபடுத்த வல்லது. இந்த AMG GT S கார்களில் 7 - வேக இரட்டை - க்ளட்ச் கியர்பாக்ஸ் இன்ஜினுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் 0 – 100 கி.மீ. வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் இந்த கார் அடைந்து விடுகிறது.
இந்த AMG GT S அளவுக்கு ஞாபக சின்னமாக வெளியிடப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் சக்திபெற்றது இல்லை என்றாலும் தன்னுடைய 798 cc மூன்று - சிலிண்டர் என்ஜின் கொண்டு 148 ps ( 108 kV) என்ற அளவிலான சக்தியையும் 88 nm ( 65 lb - ft) என்ற அளவிலான முடுக்கு விசையையும் வெளிப்படுத்தி F3 800 அதிகபட்சமாக மணிக்கு 269 கி.மீ. ( 167.1 mph) வேகத்தை அடைந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள AMG GT S கார்களில் லேன் கீப் அசிஸ்ட், கொலிஷன் ப்ரிவென்ஷன் ( மோதுதல் தவிர்ப்பு ) மற்றும் ராடார் உதவியுடன் கூடிய க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த AMG GT S கார் ஓர் எடை குறைவான ( பாகங்கள் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதன் விளைவு ) கார். இந்த குறைந்த எடையினால் தான் இந்த கார் அசாத்தியமான சக்தியையும் அபரிமிதமான கையாளும் வசதியையும் பெற்று சீறி பாய்கிறது.