• English
  • Login / Register

“டாப் கியரை” தூக்கியெறிந்துவிட்டு, அமேசானின் “கியர் நாப்ஸில்” தோன்றும் நட்சத்திரங்கள்

published on செப் 21, 2015 03:02 pm by manish

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: பிபிசி 2 ஸ்லாட்டிடம் இருந்து விடைபெற்று வந்த ஜெர்மி கிளார்க்சன், ரிச்சார்ட் ஹேமண்ட் மற்றும் ஜேம்ஸ் மே ஆகியோர், தற்போது அமேசானிற்காக பணியாற்ற மும்முரமாக உள்ளனர். இம்மூன்று பேரும் சேர்ந்து ஒரு புதிய ஷோவில் தோன்ற உள்ளனர். இந்த புதிய ஷோவை “கியர் நாப்ஸ்” என்று அழைக்க போவதாக, பஸ்ஃபீடு வெளியிட்ட சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நாப்ஸ்” என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் தரக்குறைவான முறையில் மொழிப்பெயர்த்தால், முட்டாள்களை குறிக்க உபயோகிக்கும் சொல்லாகும். முந்தைய ஷோவின் தயாரிப்பாளர் ஒருவருக்கும், ஜெர்மிக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தை தொடர்ந்து, அந்த ஷோவில் இருந்து ஜெர்மி விலகினார். இந்த வாக்குவாதத்திற்கு பிறகு, ஜெர்மி கிளார்க்சன் ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, மே மற்றும் ஹேமண்ட ஆகியோரும் வெளியேறினர்.

இந்த வெளியேற்றத்திற்கு பிறகு அமேசான் பிரேமில் தோன்ற உள்ள இவர்களுடன், ஸ்டிக் இடம் பெறாது என சில தகவல்கள் தெரிவித்தன. இது குறித்து சமீபத்தில் ஜெர்மி, “அமேசானின் எங்கள் நிகழ்ச்சியில் ஸ்டிக் இடம் பெறாது. ஏனெனில் ஸ்டிக் என்ற கதாபாத்திரம், பிபிசி-க்கு சொந்தமானது” என்று கருத்து தெரிவித்தார். டாப் கியர் நிகழ்ச்சியின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்த இம்மூவரும், இந்த புதிய ஷோவிற்காக, 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்.

“கியர் நாப்ஸ்” என்ற பெயரை சட்டப்படி பதிவு செய்து, அதன் டிரேடுமார்க்கை ஜெர்மி கிளார்க்சன் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்த டிவி ஷோவின் முழு உரிமை மற்றும் விற்பனை உரிமை ஆகியவை அவரையே சார்ந்திருக்கும். அமேசான் உடனான ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கு, சில வாரங்களுக்கு முன் இவையெல்லாம் நடந்தேறி உள்ளது. அதேபோல “ஸ்பீடுபேர்டு” என்ற பெயரும் அதே சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு டிரேடுமார்க் பெறப்பட்டுள்ள நிலையில், இம்மூன்று பேருக்கும் உதவும் கதாபாத்திரமாக இருந்த “ஸ்டிக்”கிற்கு பதிலாக, இது புதிய ஷோவின் ஓட்டுநராக செயல்படலாம் என்று பஸ்ஃபீடு, ஊகிப்பு கருத்தை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய ஒப்பந்தத்தின்படி, இந்நிகழ்ச்சி மொத்தம் 3 தொடர்களை கொண்டிருக்கும். அவை 36 பாகங்களைக் கொண்டது.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience