கார்தேகோ பெருமிதத்துடன் தன்னுடைய கார்பே வை மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் அறிமுகப்படுத்தியது.
published on ஜூலை 30, 2015 06:37 pm by cardekho
- 18 Views
- ஒரு கருத்தை எழுதுக
பல விருதுகளை வென்ற கார்பே இப்போது மலேசியா மற்றும் தாய்லாந்தில்
ஜெய்பூர்: இணையத்தளத்தில் வாகனங்கள் பற்றிய சூடான செய்திகளைத் தருவதில் முன்னோடியாக விளங்கி வரும் கிர்னார் சாப்ட்வேர் நிறுவனத்திற்கு சொந்தமான கார்தேகோ இப்போது CarBay.my மற்றும் Thailand.CarBay.com என்ற வலைத்தளங்களை முறையே மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்திய துணை கண்டத்தில் ஏராளமான விருதுகளை வென்றது மட்டுமன்றி '' வெப்சைட் ஆப் தி இயர்" என்ற பட்டத்தையும் கடந்து நான்கு ஆண்டுகளில் மூன்று முறை வென்று வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் கார்தேகோ வில் இருக்கும் அனைத்து சிறப்பம்சங்களும் இந்த இரண்டு புதிய வலைதளங்களிலும் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.
தாய்லாந்து நாட்டில் உள்ள அனைவரும் பயன் பெறும் விதத்தில் Thailand.CarBay.com வலைத்தளம் ஆங்கிலம் மற்றும் தாய் மொழியிலும் தகவல்களை தரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கார்பே வலைதலமானது கார் வாங்க நினைபவர்களின் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யும் விதத்தில் வாகனங்களைப் பற்றிய அனைத்து விதமான செய்தியையும் உள்ளடக்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வலைதளத்தை பயன்படுத்துவோர் தங்கள் நாட்டில் கிடைக்கக்கூடிய அனைத்து விதமான கார்களின் பிரமாண்ட அணிவகுப்பை காண முடியும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான கார் பிராண்டுகள், மாடல்கள் மற்றும் விலையின் அடிப்படையில் தரமான கார்களை தேர்வு செய்து கொள்ளவும் இந்த வலைத்தளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலுமே 2.5 சதவிகிதத்திற்கும் கூடுதலான சீரான ஜிடிபி வளர்ச்சி பதிவாகியுள்ளது மட்டுமின்றி தனி மனித வருமானமும் 6500$ என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சாதகமான சூழலில் குறைந்தது 10 % அளவிற்கு ஆசிய நாடுகளில் கார் விற்பனையானது இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் அதிகரித்து விடும் என்பதை நாம் நிச்சயம் நம்பலாம். இத்தகைய ஒரு சாதகமான சூழலில் கார் விற்பது மற்றும் வாங்குவதை கையாளக்கூடிய ஒரு சிறந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர் தங்கள் முழு ஆதிக்கத்தையும் நிலை நிறுத்திக்கொள்ள செய்ய முடியும்.