CarDekho மற்றும் Coverfox இணைந்து, வாடிக்கையாளர்கள் 5 நிமிடத்திற்குள் கார் இன்சூரன்சைஃப் பெற உதவுகின்றனர்
published on அக்டோபர் 29, 2015 11:51 am by cardekho
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
Cardekho.com தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் டீலெர்களுக்கு, கவர்ஃபாக்சின் தனியுரிமை இன்சூரன்ஸ் பிளாட்பார்மை சுலபமாக்கி எளிமைப்படுத்தித் தருகிறது.
இணையதளத்தில் இன்சூரன்ஸ் விநியோகம் செய்யும் நிறுவனமான கவர்ஃபாக்ஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி வாகன இணையதளமான carDekho.com –வும் இணைந்து ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படப் போவதைப் பற்றிய மகிழ்ச்சியான செய்தியை இன்று அறிவித்தனர். இதன்படி, CarDekho.com தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்களுக்கு, கவர்ஃபாக்ஸ் கார் இன்சூரன்ஸ் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், CarDekho.com -வில் கார்களைப் பற்றி கொடுக்கப்படும் தகவல்களும், தனது பிற சேவைகளும் முழுமை பெறவேண்டும் என்ற தனது உறுதியான நோக்கத்தை cardekho நிறைவேற்றிக்கொள்ளவிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்திற்கு பின், CarDekho -வின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சிறந்த காப்பீட்டை, அனைத்து முன்னணி காப்பீட்டு நிறுவனங்களின் திட்டங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, நேரடியாக கவர்ஃபாக்ஸ் பிளாட்பார்ம் மூலம் பயனடைய உதவுவது; மற்றும் உடனடியாக கார் இன்சூரன்சை புதுப்பிக்க உதவுவது போன்ற சேவைகளை cardekho –வில் இணைப்பத்தோடு மட்டுமல்லாமல், cardekho.com-வின் கார் டீலர் நெட்வொர்க்கில் உள்ள டீலர்கள், கார் வாங்கும் போதே எளிதாக கவர்ஃபாக்ஸ் இன்சூரன்ஸ் திட்டத்தை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பை, இந்த கூட்டணி வழங்குகிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு காப்பீடு வாங்கும்போது மேற்கொள்ளப்படும் கடுமையான விதிமுறைகளையும், எக்கச்சக்கமான ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறைகளையும் குறைத்து, எளிமைப்படுத்தி, எந்தவித சிரமும் இல்லாமல் வாகன காப்பீட்டை வழங்க கவர்ஃபாக்ஸ் பிளாட்பார்ம் உதவுகிறது.
CarDekho.com –இன் தலைமை நிர்வாக அதிகாரியான அமித் ஜெய்ன், “CarDekho.com கார்களை வகைப்படுத்துவத்திலும், பட்டியலிடுவதிலும் ஒரு சிறந்த வலைதளமாக இருந்தாலும், இதன் சேவை அத்துடன் நிற்கவில்லை. எங்களது வாடிக்கையாளர்களுக்கு முழு நிலவைப் போன்ற முழுமையான அனுபவத்தை உருவாக்க உத்தேசித்துள்ளோம். எங்களது வலைதளம் அவர்கள் கார் தேர்வு செய்யும் முறையை எளிதாக்குகிறது. ஆனால், வாகனக் காப்பீட்டை கடுமையான பழமையான முறைப்படி அனைத்து ஆவனங்களையும் சமர்பித்து வாங்குவது அவர்களுக்கு மிகவும் தொல்லையாக இருக்கிறது. கவர்ஃபாக்ஸ் நிறுவனத்துடனான எங்களின் கூட்டு முயற்சி, எங்கள் பயன்படுத்தப்பட்ட கார் டீலர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும், நிச்சயமாக மிகவும் நன்மை தரக் கூடிய விதத்தில் இருக்கும். ஏனெனில், நாங்கள் காப்பீடு வாங்கும் முறையை எளிமைப்படுத்தி உடனடியாக பெற்றுக் கொள்ளும் விதத்தில் ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று கூறினார்.
தற்போது, இந்தியாவில் புதிய கார்களின் சந்தையை விட பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையே பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் படி, இந்தியாவில் 100 புதிய கார்கள் விற்கும் அதே நேரத்தில், 110 பயன்படுத்திய கார்கள் விற்கப்படுகின்றன. இது ஒரு சுவாரஸ்யமான தகவலாகும். மேலும், பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை கிட்டத்தட்ட 20 – 25 சதவிகிதம் என்ற அளவில் CAGR -இல் வளர்ந்து வருகிறது. IBEF கணிப்பின்படி, இந்த நிலை மேலும் வளர்ந்து, அடுத்த 4 வருடத்தில் நான்கு மடங்கு உயர்ந்து விடும். புதிய பயணிகள் வாகன தயாரிப்பு FY20 –இல் 10 மில்லியன் கார்களில் இருந்து FY15 –இல் 3.2 மில்லியன் வரை உயரும் வாய்ப்புள்ளதாக IBEF –இன் கணிப்பு தெரிவிக்கிறது.
கவர்ஃபாக்சின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வருண் துவா, இந்த ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப் பற்றி கூறும் போது, “பொதுவாக, பயன்படுத்தப்பட்ட கார் அல்லது புதிய கார் வாங்கும் நடவடிக்கை ஒரு முதலீடாகக் கருதப்படுகிறது. மிகவும் முக்கியமான காப்பீட்டு திட்டம், உங்களது மிகப் பெரிய முதலீட்டைக் காப்பதற்கான ஒரு முக்கிய கருவி. எனினும், நடைமுறையில் இதைப் பெறுவது மிகவும் நீளமான குழப்பமான முறையாக உள்ளது. வாடிக்கையாளர்களின் மிக நீண்ட காப்பீடு வாங்கும் பயணத்தில் நாங்கள் பங்கெடுத்து, இதனை எளிமையாகவும், பிரச்சனை இல்லாமலும் வாங்க, எங்களது தொழில்நுட்பத்தையும், வாடிக்கையாளர்களை முன்னிறுத்திய எங்கள் இலக்கையும் கொண்டு முழுமையாக உதவுவோம். CarDekho.com –உடனான எங்களது உடன்படிக்கை நிச்சயமாக வாடிக்கையாளர்களை ஒரு சிறந்த இன்சூரன்ஸ் திட்டத்தை மிக விரைவாக, துல்லியமாக மற்றும் நம்பகமான முறையில் தேர்ந்தெடுக்க உதவும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். இன்று வெளியிடப்பட்ட இந்த ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப் வாகன சந்தையில் ஒரு முக்கியமான செய்தியாகும். ஏனெனில், இதன் மூலம் Cardekho.com மற்றும் கவர்ஃபாக்ஸ் என்ற இரு பெரிய நிறுவனங்களும் தங்களது நற்பெயரை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். அதாவது, வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும், புதுமையான தயாரிப்புகள் மற்றும் புதிய சேவைகளை, இரு நிறுவனங்களுமே தங்களது வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப் மூலம் கொடுக்க முடியும்.
இத்தகைய ஸ்ட்ராடெஜிக் பார்ட்னர்ஷிப் கவர்ஃபாக்சுக்கு மிகவும் முக்கியமான விஷமாகும். ஏனெனில், இந்த கூட்டு முயற்சி மூலம், மக்கள் வாகன காப்பீடு வாங்குவதையும், அதனை நிர்வகிப்பதையும் எளிதாகவும், வெளிப்படையாகவும், உள்ளுணர்வு சார்ந்ததாகவும், ஆக்கிவிட முடியும். எனவே, இத்தகைய மாற்றம் இந்திய காப்பீட்டு சந்தையில் உள்ள இடைவெளியை நிரப்ப மிகவும் உதவியாக இருக்கும். CarDekho.com உடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கூட்டாண்மை வழியாக, அவர்கள் தங்களது புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்டான காப்பீட்டு ஆப்ஷங்களை, கார் வாங்கும் போது தர முடியும். இன்சூரன்ஸ் வாங்குவது, இவர்களது வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் மிகவும் எளிதான மற்றும் அருமையான விஷயமாகிவிடும்.
0 out of 0 found this helpful