பிளேட்: 3டி அச்சு முறையில் உருவான இந்த கார், நீண்ட தயாரிப்பு முறைகளை குறைக்கும்

published on ஆகஸ்ட் 10, 2015 09:55 am by manish

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கலிஃபோர்னியாவில் உள்ள புதுமையை விரும்பும் ஒரு வாகன உற்பத்தியாளர், தனது முற்போக்கான பிளேட் கார் வடிவத்தை முன்மாதிரியாக கொண்டு கார் தயாரிக்கும் முறையை மாற்றி அமைக்க எண்ணி உள்ளார். இந்த புது உத்தியைக் கொண்டு தயாரிக்கப்படும் காரானது, நடைமுறையில் உள்ள நீண்ட நெடிய கார்களின் உதிரி பாகங்களை பொருத்தும் முறையைத் தவிர்த்து, புதுமையான 3D  அச்சு உதவியுடன் தயாரிக்க படுகிறது. தற்போதைய கார் தயாரிக்கும் முறையானது சுற்று புற சூழலை வெகுவாக பாதிக்கிறது என, வாகன துறையில் பல வருட அனுபவசாலியான, டிவெர்கெண்ட் மைக்ரோ –ஃபேக்டரீஸ் இன், கெவின் ஜிங்கர் முழுமையாக உணர்ந்தார்.

ஜிங்கர், “இந்த 3D   அச்சு மாடல் பெரிய அளவு மாற்றத்தை வாகன துறையில் ஊக்குவிக்கும். 3D  அச்சு மாடலை பார்க்கும் போது, அதன் முழு வடிவம் மட்டுமல்லாது தனிப்பட்ட விருப்பதிற்க்கு ஏற்ற வடிவமைப்பையும் உருவாக்க முடியும். மேலும், 3D  அச்சு மாடல் அனைத்தையும் மாற்ற கூடிய பரிணாம வளர்ச்சியை உண்டு பண்ணும்.” என உறுதி பட கூறினார்.

ஜிங்கர் கூறுகையில், வடிவமைப்பு உதிரி பாகங்களை மாற்றி கட்டுமான முறையை திருதுவதன் மூலம் 3D  அச்சு மாடல் கார்கள் அனைத்து வகையிலும் பரிணாம வளர்ச்சி அடையும். ஏறக்குறைய அனைத்து எரிபொருள் சிக்கன கார்களும் அளவில்லா கார்பன் மாசு காற்றை வெளியேற்றுகிறது, இதனை தொழிற்சாலையை விட்டு வெளி வரும் முன்னரே செய்கிறது, ஏனெனில் இவ்வித காரை உற்பத்தி செய்வதற்கு மிக பெரிய நீண்ட தொழிற்கூடங்கள் தேவை, அவை அனைத்தும் அதிக அளவு எரிசக்தியை உபயோகப்படுத்த கூடியவை. இதை போன்ற பெரிய தொழிற்சாலைகளின் பயன்பாட்டை குறைப்பதற்காக ஜிங்கர் மற்றும் அவருடைய உதவி குழுவும் இணைந்து, பிளேட் காரின் பிரதான அடி சட்டத்தை செய்ய பயன்படுத்திய கார்பன் பட்டைகளை இணைக்கும் ஒரு நவீன உதிரி பாகத்தை 3D  முறையில் வடிவமைத்தனர்.

இந்த திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளரான பிராட் பல்ஃஜர், “இந்த 3D  மாடல் அடி சட்டம் 102 பவுண்ட் எடை மட்டுமே உள்ளது, ஆனால் இரும்பினால் செய்த சட்டத்தை போலவே அதிக உறுதியையும், அதிக பாதுகாப்பையும் கொண்டதாக உள்ளது,” என அறிவித்துள்ளார்.

பிளேட், 3டி அச்சு மூலம் உருவான காரின் எடை மிகவும் குறைந்ததாக, 1400 பவுண்ட்கள் (635 கிலோ) மட்டுமே இருக்கிறது, ஏனெனில், இந்த கார் அலுமினியம் அல்லது எஃகு கொண்டு தயாரிக்காமல், காரீய இழைகளில் (கார்பன் ஃபைபர்) தயாரித்துள்ளனர். குறைந்த எடையிலுள்ள பிளேட், புகழ் பெற்ற புகாட்டி வெய்ரானின் எடை மற்றும் குதிரை திறன் விகிதாசாரத்தை விட இரு மடங்கு கூடுதலாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இந்த கார், 700 குதிரை சக்தியை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயு இயந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. இது, பெருமளவு கார்பன் உமிழ்வை (கார்பன் எமிசன்) குறைத்து சுற்று சூழலை பாதுகாக்கிறது.

இந்நிறுவனம், திட்டமிட்டே முதல் முறையாக இத்தகைய சுற்று சூழலுக்கு பாதுகாப்பான, முன் மாதிரியான சூப்பர் காரை வடிவமைத்ததாக பல்ஃஜர் தெளிவுபடுத்துகிறார். மேலும் அவர் கூறுகையில், “இந்த காரின் அழகை மெருகேற்ற அதிகப்படியான தனி கவனம் செலுத்தியுள்ளோம், ஏனெனில் மக்களின் புதுமையான கற்பனைகளுக்கு ஈடு கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, புதிய அடிப்படை இயல்விக்கும் தொழில்நுட்பத்தின் (கோர் எனேபிலிங் டெக்னாலஜீஸ்) மூலம் மாறுதல்களை கொண்டு வரவேண்டும் என்று பேசும்போது, மக்களின் விருப்பம் மிகவும் உயர்ந்ததாக மதிக்கப்படுகிறது” என்று எடுத்துரைத்தார்.

இந்த அடிப்படை இயல்விக்கும் தொழில்நுட்பம் (கோர் எனேப்லிங் டெக்னாலஜீஸ்) மூலம், காரின் உதிரிபாகங்களை 3D அச்சு எடுக்கும் முறை நடைமுறை படுத்தப்பட்டு, தற்போதைய நீண்ட நெடிய கார் தயாரிக்கும் முறையை மாற்றி, எளிதாக கார் உற்பத்தி செய்யும் முறை அமுலுக்கு வந்துவிடும் என்று கெவின் ஜிங்கர் எதிர்பார்க்கிறார். ஏனெனில், இந்த தொழில்நுட்பம் வழியாக, உதிரி பாகங்களை சுலபமாக பொருத்தி காரை முழுமையாக்குவது மிகவும் எளிமை ஆகிறது. இது போல தயாரிப்பு உத்தி மாறவில்லை என்றால், மின்சார கார்கள் வந்தால் கூட பசுமை குடில் உமிழ்வை (க்ரீன் ஹவுஸ் எமிசன்) நாம் தடுக்க முடியாது, ஏனெனில் உலகம் முழுவதும் கார்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது, என்று அவர் மேலும் கூறுகிறார். மின்சார கார்கள் உற்பத்தி செய்வதற்கு, தற்போதைய நிலையில் இருந்து ஒரு படி மேலே சென்று சரியான வழியில் செல்கிறோம் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
 
கெவின் மேலும் கூறுகையில், “கார்களை இந்த முறையில் உற்பத்தி செய்யும் போது, 85 மணி நேரம் மின்சார கார் தயாரிக்கும் போது ஏற்படும் சுற்று சூழல் மற்றும் சுகாதார மாசுபடுவதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவானதாக இருக்கிறது,” என்றார்.

பிராடும், கேவினும், தங்களது புதிய 3டி அச்சு முறையில் கார் தயாரிப்பு திறன், நிச்சயமாக எதிர்கால கார் உற்பத்தியில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience