நாளை அறிமுமாகிறது பாரத் NCAP: என்ன எதிர்பார்க்கலாம் ?
published on ஆகஸ்ட் 21, 2023 09:34 pm by rohit
- 31 Views
- ஒரு கருத்தை எழுதுக
பாரத் NCAP, பெரியவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் புதிய கார்களுக்கு கிராஷ்-டெஸ்ட் மதிப்பீட்டை வழங்கும்.
-
குளோபல் NCAP மற்றும் லத்தீன் NCAP போன்ற சர்வதேச புதிய கார் மதிப்பீட்டு திட்டங்களைப் போலவே பாரத் NCAP -ம் இருக்கும்.
-
கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களை 3.5 டன்கள் வரை தன்னார்வத்தின் அடிப்படையில் சோதனைக்கு அனுப்ப வேண்டும்.
-
இந்த மதிப்பீடுகளை நடத்த புதிய சோதனை கூடமும் அமைக்கப்பட வாய்ப்புள்ளது.
-
சில இந்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களிடமுள்ள சில கார்கள் பெற்ற பாரத் NCAP மதிப்பீடுகளை கூட அறிவிக்க வாய்ப்புள்ளது.
நமது நாட்டின் வாகன துறையானது உள்நாட்டுக்கு ஏற்ற வகையில் கிராஸ் டெஸ்ட் மதிப்பீடுகளை உருவாக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. குளோபல் NCAP, யுரோ NCAP மற்றும் லத்தீன் NCAP போன்ற பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் புதிய கார் மதிப்பீட்டு திட்டங்களை (NCAP கள்) வைத்துள்ளன, அவை புதிய கார்களை கடுமையான பாதுகாப்பு சோதனைகள் மூலம் சோதித்து அவற்றின் செயல்திறனின் அடிப்படையில் மதிப்பெண் மற்றும் மதிப்பீட்டை வழங்குகின்றன. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அரசாங்கம் நமது சொந்த NCAP (பாரத் NCAP என அழைக்கப்படும்) திட்டத்தை உருவாக்குவதற்கான அறிக்கையை ஆன்லைனில் வெளியிட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 2023, ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று பாரத் NCAP -யை அறிமுகப்படுத்துவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
என்ன அறிவிக்கப்பட உள்ளது?
பாரத் NCAP -க்கான விவரங்கள் மற்றும் விதிமுறைகள் மட்டுமல்லாமல், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய சோதனை கூடத்ம் பற்றிய தகவல்களையும் போக்குவரத்து அமைச்சகம் வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். ஒன்று அல்லது பல மாடல்களின் பாரத் NCAP கிராஷ்-சோதனை மதிப்பீடுகளை இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் அல்லது இருவர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். போக்குவரத்து அமைச்சகம் இந்த சோதனைகளில் இருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் விவரிக்க வாய்ப்புள்ளது.
உலகளாவிய தரநிலைகளுக்கு இணையானது
2022 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பின்வருமாறு தெரிவித்தார், “பாரத் NCAP யின் சோதனை விதிமுறைகளானது, தற்போதுள்ள இந்திய விதிமுறைகளில் உள்ள குளோபல் கிராஷ் டெஸ்ட் புரோட்டோகால்களுடன் இணைந்திருக்கும், இதனால் OEM -கள் அவர்களது வாகனங்களை இந்தியாவின் சொந்த உள் சோதனை இருப்பிடங்களில் சோதனை செய்து கொள்ளலாம். ” எனக் கூறினார்.
மேலும் படிக்க: இதுவரை 2023 -ஆண்டை பசுமையாக்கிய 6 எலக்ட்ரிக் கார்கள்
பாரத் NCAP விவரங்கள்
புதிய இந்திய கிராஷ்-டெஸ்ட் மதிப்பீட்டுத் திட்டம் 3.5 டன் அல்லது 3,500 கிலோ எடையுள்ள வாகனங்களின் பாதுகாப்பு அளாவீடுகளை கணக்கிடும். முன்மொழியப்பட்ட ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்ட்ஸ் 197 (AIS-197) ஆவணத்தின்படி, கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் கார்களை தானாக முன்வந்து சோதனை செய்து கொள்ளலாம். AIS-197 இன் படி, பாரத் NCAP ஆனது ஆஃப்செட் முன்புற இம்பாக்ட் சோதனை, பக்கவாட்டு இம்பாக்ட் சோதனை மற்றும் போல் சைடு இம்பாக்ட் சோதனை ஆகியவற்றை உள்ளடக்கும். சோதனைகள் அவர்களுக்கு பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்கான நட்சத்திர மதிப்பீடுகள் (AOP) மற்றும் குழந்தை பயணிகளின் பாதுகாப்பு (COP) ஆகியவற்றை வழங்கும்.
ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் இருக்கை பெல்ட்கள் மற்றும் அட்வான்ஸ்டு எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டம் போன்ற கட்டாய அம்சங்களின் மதிப்பீடுகள் உள்ளடக்கியதாக இருக்கும் என முந்தைய அரசாங்க ஆவணம் பரிந்துரைத்திருந்தது. எனவே, சோதனைக்கு உட்படுத்தப்படும் காரில் இந்த அம்சங்கள் நிலையானதாக இருந்தால், அது சிறந்த மதிப்பீடுகளைப் பெறக்கூடும்.
தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள்
இப்போதைக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து கார்களிலும் இரட்டை முன்புற ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ரியர் பார்க்கிங் அசிஸ்ட், முன்புற சீட்பெல்ட் நினைவூட்டல் மற்றும் ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை இருக்க வேண்டும். எட்டு பயணிகள் வரை அமரக்கூடிய கார்களில் ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் ஏற்கனவே திட்டமிட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) -களை ஸ்டாண்டர்டாக மாற்றுவதற்கும் திட்டமிட்டு வருகிறது.
மேலும் படிக்க: மஹிந்திரா ஸ்கார்பியோ N-அடிப்படையிலான குளோபல் பிக் அப் கான்செப்டில் இருந்து 5 முக்கிய டேக்அவேக்கள்
0 out of 0 found this helpful