ஆட்டோ ஷோ 2015 ரேட்ரோஸ்பேக்ட்
published on நவ 09, 2015 02:32 pm by sumit
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
கடந்த அக்டோபர் மாதம் 29 முதல் 31 ஆம் தேதி வரை, 2015 ஆம் ஆண்டிற்கான தனது முதல் ஆட்டோ ஷோவை, மணிப்பூர் பல்கலைக் கழகம் ஜெய்ப்பூர் (MUJ) வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்த நான்கு வயது பல்கலைக் கழகம் நடத்திய இந்த கண்காட்சியில், பல வகையான வாகன தயாரிப்பாளர்களின் விண்டேஜ் கார்களில் உட்பட்ட அனைத்து விதமான நிலப்பகுதிகளுக்கும் ஏற்ற வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சிக்கு ஆதரவாளராக (ஸ்பான்ஸர்) மாருதி சுசுகி நிறுவனம் இருந்தது. இந்த கண்காட்சியில் ஸ்கோடா, ரெனால்ட், ஹோண்டா, ஹூண்டாய், ட்ரிம்ப், பினில்லி, ராயல் என்ஃபில்டு ஆகிய நிறுவனங்களின் வாகன தயாரிப்புகளை பரவலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஸ்கோடா நிறுவனத்தின் மூலம் ஆக்டிவா, ராபிட் மற்றும் எட்டி ஆகியவையும், மாருதியின் மூலம் ஸ்விஃப்ட், எர்டிகா, சியஸ் மற்றும் ஸ்விஃப்ட் டிசையர் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதை தவிர, ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் மற்றும் லாட்ஜி ஆகியவையும், ஹோண்டாவின் ஜாஸ் மற்றும் சிட்டி ஆகியவையும் காட்சிக்கு இருந்தன.
இதில் சில பாரம்பரியமான வாகனங்கள், பார்வையாளர்களை தங்களிடத்திற்கு ஈர்த்து கொண்டன. அதில் 2 விண்டேஜ் கார்கள், அதிக கவர்ச்சியாக அமைந்து, பெரும்பாலும் எல்லா பார்வையாளர்களையும் கவர்ந்து இழுத்தன. இதில் ஒரு விண்டேஜ் காரான, ஃபோர்டு GT டோரினோ, ஒரு 4.9 லிட்டர் என்ஜினையும், ஒரிஜினல் பாகங்களையும் கொண்டிருந்தது.
இந்த ஷோவில் பங்கேற்றவர்களுக்கு, எல்லா நிலப்பகுதிகளுக்கும் ஏற்ற வாகனங்களை (ஆல் டிரென் வெஹிக்கிள்ஸ் - ATV) ஓட்டி பார்க்கவும், ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கார்களின் கண்காட்சி மட்டுமின்றி, பார்வையாளர்களை தொடர்ந்து உற்சாகத்தோடு வைக்கும் வகையில், இசைக் குழுவினரின் நிகழ்ச்சி மற்றும் இருபுற கருத்து பரிமாற்ற (இன்டர்ஆக்டிவ்) விளையாட்டுகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில், பல்கலைக் கழக தலைவரான டாக்டர் சந்தீப் சன்சிதி முன்னிலை வகிக்க, MNIT-ன் இயக்குநரான டாக்டர் I.K.பட் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி, ஃபார்முலா ஸ்டூடண்ட் இந்தியா உடன் போட்டியிட விரும்பும், MUJ-வின் “டீம் வார்டெக்ஸ்” என்ற கார் அணியின் சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.
இதையும் படியுங்கள் : 2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: மாஸ்டா மற்றும் டொயோட்டா ஆகியவை, தங்களின் ஸ்போர்ட்ஸ் தொழில்நுட்பங்களை ( கான்சப்ட்) காட்சிக்கு வைத்தன
0 out of 0 found this helpful