2016 ஆட்டோ எக்ஸ்போவில் 80 புதிய வாகனங்கள் அறிமுகம்
published on ஜனவரி 18, 2016 05:34 pm by nabeel
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிதாகப் பிறந்துள்ள இந்த 2016 -ஆம் வருடம், பதிமூன்றாவ்து இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியால் சிறப்படைகிறது என்றால் அது மிகை ஆகாது. இதற்கு முன் நடைபெற்ற 12 கண்காட்சிகளைவிட, இந்த வருடம் மிகவும் பெரிதாகவும், மிகவும் சிறந்ததாகவும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 2016 ஆட்டோ எக்ஸ்போவில் எண்பதிற்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் அறிமுகமாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 20 நாடுகளில் இருந்து வரும் 1500 -க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று, தங்களது புதிய தொழில்நுட்பங்களை 2016 காம்பனன்ட் ஷோவில் காட்சிப்படுத்த உள்ளனர், இவற்றில், 900 -க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் மற்றும் 600 சர்வதேச பங்களிப்பாளர்கள் மற்றும் 50 புதிய நிறுவனங்களும் அடங்கும்.
க்ரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் இந்த மோட்டார் ஷோ நடைபெறும். 2014 -ஆம் ஆண்டு நடந்த 12 -வது ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியை விட கூடுதலாக 4,000 சதுர மீட்டர் அதிகமான இடத்தில், இந்த முறை நடைபெறுகிறது, அதாவது 13 -ஆம் வருட ஆட்டோ எக்ஸ்போ 73,000 சதுர மீட்டர் அளவு பரப்பளவில் நடைபெறும். பார்வையாளர்களுக்கு மேலும் திருப்தி தருவதற்காக, 6 பெரிய அரங்குகள் கட்டப்பட்டு கார்பெட் ஏரியா அதிகப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையான குளிர் சாதன வசதி மற்றும் தேவையான மின்சார கேபிள்கள் போன்றவை பொருத்தப்பட்டு மகத்தான கட்டுமானப் பணி இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (SIAM) தலைவரான திரு. வினோத் தசாரி, "வழக்கமாக, வாகனத் துறையினர் மிகவும் விரும்பும் பிளாட்பார்ம்களில் ஒன்றாக ஆட்டோ எக்ஸ்போ திகழ்கிறது. மொத்தத்தில், இந்தத் துறைக்குத் தேவையான உற்சாகம் மற்றும் உந்து சக்தியை ஆட்டோ எக்ஸ்போ கொடுக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இதில் பங்கேற்கும் அனைத்து பிராண்ட்களும் உலகளவில் கவனிக்கப்படுகின்றன என்பதுவும் உறுதி. 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியை மிகப்பெரியதாகவும், மிகச்சிறந்ததாகவும், அதிக உற்சாகத்துடனும் நடத்த உழைக்கும் அனைவரையும் நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம். இந்த கண்காட்சியை சுமுகமாக நடத்தவும், ஒவ்வொரு நிமிடமும் சிறப்பாக கவனித்துச் செயல்படவும் இந்த குழு ஓரணியாகத் திரண்டு ஒற்றுமையாக செயல்பட்டுள்ளது,” என்று கூறினார்.
அதே நேரத்தில், இன்றைய இளைஞர்கள் மத்தியில் புதுமையை நோக்கிச் செல்லும் மனப்போக்கை ஊக்குவிக்க, காம்பனன்ட் ஷோவில், ‘பாஷன் ஃபார் இன்னொவேஷன்’ என்னும் தலைப்பில், பொறியியல் மாணவர்களுக்காக ஒரு போட்டி நடத்தப்படுகிறது. பிரகதி மைதானத்தில், 80,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த கண்காட்சி நடைபெறும். ACMA சங்கத்தின் தலைவரான திரு. அரவிந்த் பாலாஜி, கூட்டத்தில் பேசும் போது, “வாகன உபகரண தொழில்துறை, ஏற்கனவே இருக்கும் பழைய தொழில்நுட்பத்தைக் கொண்டு உற்பத்தி செய்வதை விட்டுவிட்டு, புதுமையான தொழிநுட்பத்தை உருவாக்கும் நிலைக்கு விழிப்புணர்வுடன் சென்று கொண்டிருக்கிறது. ‘மேக் க்வாலிட்டி அண்ட் டெக்னாலஜி இன் இந்தியா’ என்னும் ACMA –வின் இந்த வருட கருப்பொருளுக்கேற்ப, ஒரு புது விதமான ‘இன்னொவேஷன் பெவிலியான்’ இந்த ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் உருவாக்கப்படும். இங்கு இடம்பெறும் அனைத்து வாகன உபகரணங்களும், இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் இந்தியாவிலேயே சரிபார்க்கப்பட்டவையாக இருக்கும். இந்தியாவில், உதிரி பாகங்கள் துறையின் உற்பத்தி அபிவிருத்தி திறனை வெளிப்படுத்தவும், அதன் மூலம், வாகன சந்தையின் வேல்யூ சங்கிலியின் மதிப்பைக் கூட்டுவதும் இந்த பெவிலியானின் முக்கிய நோக்கமாகும். ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஸ்டால்களில் ஏராளமான புதிய உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘இது மிகவும் வித்தியாசமான மற்றும் சிறப்பான நிகழ்ச்சி’ என்று இந்த ஆட்டோ எக்ஸ்போவைப் பற்றி குறிப்பிட்ட CII –யின் டைரக்டர் ஜெனரலான திரு. சந்திரஜித் பானெர்ஜீ, “கடந்த 30 ஆண்டுகளில், ஆட்டோ எக்ஸ்போ 10 மடங்கு வளார்ச்சி அடைந்துள்ளது. அதாவது, 152 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்ற நிலை மாறி, இப்போது 2016 –ஆம் ஆண்டில் 1580 நிறுவனங்கள் பங்கேற்கும் நிலை வந்துள்ளது. இது ஒரு அபார வளர்ச்சி ஆகும். ஒரு முறைக்கு ஒரு முறை இந்த கண்காட்சி வலிமை பெற்றுள்ளது,” என்று அவர் விவரித்தார். மேலும், திரு. சந்திராஜித் பனேர்ஜி, ‘இந்த ஆட்டோ எக்ஸ்போவில் 80 புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும்’ என்று கணித்திருப்பதாகக் கூறினார். CII வர்த்தக கண்காட்சி கவுன்சிலின் சேர்மனான திரு. தீப் கபூரியா, “வாகன தொழில் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள், ஆராய்ச்சி & மேம்பாட்டுத் துறை மற்றும் புதிய தொழில்நுட்பங்களாகும். உதிரிபாக தயாரிப்பாளர்கள், OEM-கள், இயந்திரங்களுக்கான கருவிகளை சப்ளை செய்பவர்கள் மற்றும் மூலப் பொருள்களை உருவாக்கும் துறை போன்ற, வாகன துறையின் வேல்யூ சங்கிலியில் உள்ள பல்வேறு மூலகங்களையும் இணைக்கும் கருவியாக ஆட்டோ எக்ஸ்போ செயல்படும். நாங்கள் உள்நாட்டில் மாட்டுமல்லாது உலக அரங்கில் போட்டி போடுவதற்கு வளர வேண்டும் என்றால், எங்களது உறவு வணிக ரீதியாக மட்டுமல்லாது, ஒற்றுமையாகவும், ஒருவரை ஒருவர் சார்ந்தும் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful