• English
  • Login / Register

விபத்து சோதனையில் தோல்வியுறும் சிறிய கார்களுக்கு அசாமில் தடை: 140 மாடல்களுக்கு பாதிப்பு

published on ஆகஸ்ட் 20, 2015 04:11 pm by nabeel

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்படாத சிறிய வகை கார்களின் விற்பனை மற்றும் அறிமுகத்தை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளதால், அசாம் ஆட்டோமொபைல் உலகம் ஸ்தம்பித்து போயுள்ளது. சாலை பாதுகாப்பை வாகனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்பதை குறித்த ஒரு மனுவின் மீதான பதிலாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையின் மூலம் வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய வாகன சந்தையான அசாம் கடும் பாதிப்பை அடைந்துள்ளது. இந்த ஆணையின் மூலம் பெரிய வாகன தயாரிப்பாளர்களான மாருதி, ஹூண்டாய் மற்றும் ஹோண்டா ஆகியோரின் தயாரிப்புகளான ஸ்விஃப்ட், ஆல்டோ, i10, EON மற்றும் ஜாஸ் போன்ற பிரபல மாடல்களின் வாகன பதிவை, கவுகாத்தி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆனால் வாகனத்தின் முன் பகுதியில் ஏற்படும் தாக்கத்தை தாங்க கூடிய உறுதியான கட்டமைப்பை கொண்ட SUV மற்றும் MPV வாகனங்களுக்கு, இந்த ஆணையினால் எந்த பாதிப்பும் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவை சந்தித்து வந்த வாகன தொழில்துறை, இந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் 7% வளர்ச்சியை கண்டு வந்த நிலையில், இந்த ஆணை வாகன தயாரிப்பாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தியாக வந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பொறுத்த வரை, நம் நாட்டின் மொத்த கார் விற்பனையில் 12% வடகிழக்கு மாநிலங்களில் தான் நடக்கிறது.

இது குறித்து மனுதாரர்கள் தரப்பில் கூறியுள்ளதாவது, “அசாம் மாநிலம் மலைபாங்கான பகுதிகளை கொண்டது என்பதால், அங்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே அசாமில் விற்கப்படும் கார்களுக்கு கூட சர்வதேச புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (குளோபல் நியூ கார் அஸ்சிஸ்மெண்ட் ப்ரோகிராம் – NCAP) போன்ற விபத்து சோதனைகளுக்கு (க்ரஷ் டெஸ்ட்) உட்படுத்தி, இப்பகுதியில் உள்ள வாகனங்களுக்கு உயர்தர பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட வேண்டும். இது இப்பகுதியில் உள்ள எல்லா வாகனங்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி, விபத்து-சோதனை விதிமுறைகளுக்கு உட்படாத எல்லா வாகன தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளான சுமார் 140 மாடல்களுக்கு தடை விதித்தது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முன்பக்க விபத்து சோதனை விதிமுறைகளை, இந்தியாவில் உள்ள எல்லா வாகன தயாரிப்பாளர்களும் பின்பற்ற வேண்டும். கடந்த ஆண்டு NCAP தரப்பில் நடத்தப்பட்ட முன்பக்க ஆப்செட் விபத்து சோதனையின் மூலம் ஒரு வாகனத்தின் முன்புறத்தில் உள்ள சிறிய பகுதியின் மீது எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடிந்தது. இந்த சோதனை முன்பக்க விபத்து சோதனையை விட கடினமானது ஆகும். வளர்ந்த வாகன சந்தைகளில் தர நிர்ணயமாக வைக்கப்பட்டுள்ள இந்த சோதனைகளில், நம் நாட்டிலுள்ள மாருதி ஆல்டோ, ஹூண்டாய் i10, ஃபோர்டு ஃபிகோ மற்றும் டாட்சன் கோ ஆகியவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாகன பாதுகாப்பில் இந்தியாவும் கடும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில், “1,500 கிலோ எடைக்கும் குறைவான சிறிய வகை நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் குவான்ட்ரிசைக்கிள்ஸ் ஆகியவற்றில், விபத்து சோதனை மற்றும் மாசு கட்டுப்பாட்டு சோதனை போன்றவற்றிற்கு உட்படுத்தப்படாத வாகனங்களை, வாகன தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்தவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விபத்து-சோதனை விதிமுறைகளுக்கு உட்படாத எந்த வாகனத்தையும் விற்க வேண்டாம் என்று டீலர்களுக்கு, அசாம் மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அசாமில் புதிய வாகனங்களை பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.


இந்த நீதிமன்ற உத்தரவால் அதிருப்தி அடைந்துள்ள கார் தயாரிப்பாளர்கள், இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் (SIAM) மூலம் ஒருவர் பின் ஒருவராக, தங்கள் வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இந்த நீதிமன்ற உத்தரவால் ஹூண்டாய், மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் கூறுகையில், “தங்களின் எல்லா தயாரிப்புகளும், இந்திய விதிமுறைகளான முன்பக்க விபத்து சோதனை என்ற பெயரில் அறியப்படும் ஸ்டீரீங் இன்பெக்ட் டெஸ்ட்டிற்கு உட்பட்டுள்ளன. வரும் 2017 ஆம் ஆண்டில் இருந்து மட்டுமே, மிகவும் கடினமான முன்பக்க ஆப்செட் விபத்து சோதனைகளை கட்டாயமாக்க முடியும். அப்போது தான் அவை இந்தியாவில் வெற்றியடையும். தேவைப்படும் முன்பக்க விபத்து சோதனையின் எல்லா விதிமுறைகளுக்கும் கார்கள் உட்பட்டுள்ள நிலையில், விற்பனையை நிறுத்தவோ அல்லது பதிவு செய்வதை தடை செய்யவோ, எந்த வழக்கும் இல்லை” என்று கூறினர். சர்வதேச விபத்து விதிமுறைகளில் காணப்படும் தெளிவின்மை காரணமாக, அவற்றை தற்போது இந்தியாவில் கட்டாயமாக்க முடியாது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience