• English
  • Login / Register

அப்போலோ டயர்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் விரிவாக்கம், ஜோர்டான் நாட்டில் கால் பதித்தது

published on அக்டோபர் 28, 2015 05:19 pm by manish

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தனது சர்வதேச சந்தையை சில டீலர்ஷிப் மையங்களை ஜோர்டான் நாட்டின் பிரசித்தி பெற்ற  அம்மான் நகரில் துவக்கியுள்ளதன் மூலம் விரிவாக்கம் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையை குறிவைத்தே இந்த டீலர்ஷிப் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அபோல்லோ சோன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மையங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான வியாபார அனுபவத்தை தரும் பொருட்டு தங்களது அனைத்து விதமான ப்ராடக்ட்களையும் இந்த டீலர்ஷிப் மையங்களில் காட்சிக்கு வைத்துள்ளனர். பயணிகள் கார், பேருந்து மற்றும்  ட்ரக் டயர்கள்  மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்களின் டயர்கள் போன்ற  தங்களது ஏராளமான தயாரிப்புக்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.  இந்த புதிதாக திறக்கப்பட்டுள்ள டீலர்ஷிப் மையங்களைத் தவிர மேலும் 5 ப்ரேன்ட்டட்  அவுட்லெட் மையங்களை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

"ஜோர்டான் நாட்டில் தற்போது பயணிகள் வாகனத்திற்கான சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் எங்களது டயர்களின்   வணிகமும் நன்றாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுடைய 13 வருட கால தேர்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுபவம் வாடிக்கையாளர் மத்தியில் எங்கள் தயாரிப்புக்களுக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று தந்துள்ளது.” என்று மத்திய கிழக்கு , ஆசிய பஸிபிக் மற்றும் ஆப்ரிக்க (APMEA ) பிராந்தியங்களுக்கான அப்போலோ டயர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சதீஷ் ஷர்மா கூறினார்.

மேலும் அவர் , “ மாதத்திற்கு சுமார் 1,00,000  டயர்கள் வரை விற்பனையாகும் ஜோர்டான் சந்தையில் எங்களது பலவகை  தயாரிப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் வாடிக்கையாளர் மனங்களில் விதைப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம். இந்த புதிதாக திறக்கப்பட்டுள்ள அப்போலோ சோன்ஸ் மையங்கள் எங்கள் தயாரிப்புக்களை நுணுக்கமாக பார்வையிட வாடிக்கையார்களுக்கு பெரிதும் உதவுவதுடன் நாங்கள் வழங்கும் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புக்கள் மீதும் எங்கள் சேவையின் மீதும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் " என்றும் கூறினார்.

இதையும் படியுங்கள் :

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience