சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஜீப்பிற்கு பின் இணைய திருடர்களின் அடுத்த இலக்கு - டெஸ்லா மாடல் S

nabeel ஆல் ஆகஸ்ட் 10, 2015 09:45 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜீப்பிலுள்ள முக்கியமான அம்சங்கள் திருட்டு போன பின் 1.4 மில்லியனுக்கும் மேலான கார்களை திரும்பப் பெற வழிவகுத்ததற்கு பின், மீண்டும் வெற்றிகரமாக டெஸ்லா மாடல் S காரின் பலவகை அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இணைய திருடர்களால் திருடப்பட்டது. அவர்களால், காரின் மின்னணு கட்டுப்பாட்டை தங்கள் வசம் ஆக்கிக் கொள்ள முடிந்தது. எனவே, காரின் இயக்கத்தை வெற்றிகரமாக தொலைவில் இருந்தே நிறுத்த முடிந்தது.

முதலில், இந்த இணைய திருடர்கள், ஒரு காரை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து, இந்த காரின் மின்னணு கட்டுப்பாடுகளை ஒரு மடிக்கணினி (திருடும் போது உபயோகிக்கப்பட்டது) மூலம் கையாண்டு எளிமையாக தன் வசப்படுத்திக் கொண்டு, அந்த காரின் மொத்த கையாளும் அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டனர். அதன் பின்னர், சுலபமாக அவர்களால் டெஸ்லாவின் S தொடு திரை (டச் ஸ்கிரீன்) வழியாகவும், நுண்ணறிபேசி (ஸ்மார்ட் ஃபோன்) வழியாகவும் காரை முழுமையாக கட்டுப்படுத்த முடிந்தது. கிலௌட் பிளேரின் முதன்மை பாதுகாப்பு ஆய்வாளர், மார்க் ரோஜர்ஸ் கூறும் போது, “இது பற்றி டெஸ்லா நிறுவனத்திடம் நாங்கள் பேசி, மேலும் பல தகவல்களை பெற அனுமதி கோரியுள்ளோம். அந்த முக்கியமான தகவல்களில் இருந்து அடிப்படை உத்தியை அறிந்து கொண்டு, அனைத்து விதமான கணினி கட்டுப்பாடுகளையும் எங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தோம்” என்றார்.

லுக்அவுட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான கெவின் மகாப்ஃபே தனது வலைப்பதிவில் முழுமையாக டெஸ்லாவின் மாடல் S இன் திருட்டைப் பற்றி விவரிக்கிறார். டெஸ்லாவின் மாடல் S கார் ஒரு மணி நேரத்திற்கு 5 மைலுக்கு குறைவான வேகத்தில் சென்றால், இதன் அவசர கை நிறுத்தியை (எமர்ஜென்ஸி ஹேண்ட் ப்ரேக்) கையாள்வதன் மூலம் எளிதாகவும் முழுவதுமாகவும் இந்த காரை நிறுத்தி விடலாம். அதிக வேகத்தில் செல்லும் போது, இந்த வாகனத்தை இயந்திரத்தை நிறுத்துமாறு கட்டளை இடலாம். இதன் மூலம், கார் முழுமையாக நிற்கும் வரை, கார் ஓட்டுனரால் திசை மாற்றியையும் (ஸ்டியரிங்) மற்றும் நிறுத்தியையும் (ப்ரேக்) நேர்த்தியாக தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இணைய திருடர்களால், வேகமானியில் தவறான வேகத்தை காட்டவும், மின்னணு ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் கதவுகளை பூட்டவும், திறக்கவும் முடிந்தது. இந்த திருட்டில் நேரடியாக அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தாலும், இணைய திருடர்கள் எப்போதும் ஓட்டுனரின் பாதுகாப்பை விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்று மகாஃபே மற்றும் ரோஜர்ஸ் இருவரும், டெஸ்லா நிறுவனத்தை எச்சரித்துள்ளனர். இத்தகைய தாக்குதல் நடத்தியவர்கள், ஒரு வாகனத்தின் இன்ஃபோடைன்மெண்டில் உள்ள கணினி உலாவியை (பிரவுசர்) தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மேலும் ஆபத்தான முறையில் பிரேக்குகள், திசை மாற்றி (ஸ்டியரிங்), வேக முடுக்கி (அக்சிலரேஷன்) போன்ற பலவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அபாயம் இருக்கிறது,” என்றும் கூறினர்.

இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், டெஸ்லா ஏற்கனவே இவ்வித செயல்களை தடுப்பதற்கு ஒரு புதிய மென்பொருள் தொகுப்பை வெளியிட்டுள்ளது, இந்த மென்பொருள் புதுப்பித்தலை காற்று அலைவரிசை முறையில் வைஃபை அல்லது அலைபேசி இணையம் (செல்லுலார் நெட்வொர்க்) உதவியுடன் நாமாகவே எளிதாக தகவலிறக்கம் (டவுண்லோட்) செய்து கொள்ளலாம். மகஃப்பி தனது வலைபதிவில், ”தொடர்ந்து நடக்கின்ற இம்மாதிரி குழு அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு, கார் தயாரிப்பாளர்கள் காற்று அலைவரிசை முறையை ஒவ்வொரு இணைப்பு கார்களிலும் அமல்படுத்துவது அவசியமாகிறது. இதை போல ஒரு பாதுகாப்பு அமைப்பை டெஸ்லா நிறுவனம் வடிவமைத்துள்ளது என அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றும் கூறினார். மகஃப்பி மற்றும் ரோஜர்ஸ், டெஸ்லா நிறுவனம் ஏகப்பட்ட சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை டெஸ்லா மாடல் S இல் நிறுவியுள்ளது என உறுதி அளித்துள்ளனர். இணைய பாதுகாப்பு வல்லுனர்கள், லாஸ் வேகாவில் வெள்ளி கிழமை அன்று நடக்க உள்ள டெஃப் கோன் இணைய திருட்டைப் பற்றிய கருத்தரங்கில் (ஹேக்கிங்க் கான்பரன்ஸ்) - இல் தங்களது கண்டுபிடிப்புகளை விரிவாக எடுத்துரைப்பார்கள்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.30.40 - 37.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை