நமது எண்ணங்களை வைத்து இயங்கும் ஒரு கார்! இது உண்மையா?
published on டிசம்பர் 10, 2015 05:26 pm by sumit
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
நான்கை பல்கலை கழகத்தை சேர்ந்த சீன விஞ்ஞானிகளை கொண்ட ஒரு குழுவினர், முழுமையாக மனித எண்ணங்களை கொண்டு இயங்கக் கூடிய ஒரு “மூளையினால் இயங்கும் காரை” (பிரைன் பவர்டு கார்) வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். தியான்ஜின் நகரை சேர்ந்த இந்த குழுவினர், ஏறக்குறைய 2 ஆண்டுகள் செலவழித்து இந்த காரை உருவாக்கி உள்ளனர்.
ஓட்டுநரின் நினைவுகளை பயன்படுத்தி இந்த காரை முன்நோக்கி, பின்நோக்கி இயக்குதல், நிறுத்தம் செய்தல், லாக் மற்றும் அன் லாக் செய்தல் ஆகியவற்றை செய்ய முடியும். ஆராய்ச்சியாளரான ஜாங் ஜாவோவின் கூறுகையில், டிரைவரின் மூளையில் இருந்து வெளியாகும் பல்வேறு EEG (எலக்ட்ரோஎன்சிஃபாலோகிராம்) சமிக்ஞைகளை (சிக்னல்கள்) கண்டறியும் 16 சென்ஸர்களை கொண்ட மூளை சமிக்ஞைகளை அறியும் கருவி, இந்த காரில் பயன்படுத்தப்படுகிறது. அதன்பிறகு ஒரு மேம்பட்ட கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மூலம் இந்த சமிக்ஞைகள் மொழிபெயர்க்கப்பட்டு, காரை இயக்கும் பணியில் ஈடுபட உதவுகிறது. இது குறித்து ஜாங் மேலும் கூறுகையில், “சோதனைக்கான EEG சமிக்ஞைகளை எடுத்து கொண்ட இந்த கருவி (மூளை சமிக்ஞைகள் வாசிப்பு கருவி), அவற்றை வயர்லெஸ் முறையில் கம்ப்யூட்டருக்கு அனுப்பி வைத்தது. இந்த சமிக்ஞைகளை கம்ப்யூட்டர் தரம் பிரித்து, மனிதர்களின் எண்ணங்களை கண்டறிந்து, பிறகு காரை இயக்குவதற்கு ஏற்ற கட்டளைகளாக மொழிப்பெயர்த்து கொடுக்கிறது. இதில் முழு முதற்பணியான EEG சமிக்ஞைகளை கண்டறியும் பணியை, கம்ப்யூட்டர் மூலம் செயல்படுத்தப்படுகிறது” என்றார்.
இந்த குழுவை வழிநடத்தும் இணைப் பேராசிரியர் டுவன் பின்ங் இது குறித்து விளக்கம் அளித்த போது, மனிதக் குலத்திற்கு சிறப்பான சேவையை அளிப்பதை இந்த தொழில்நுட்பம் இலக்காக கொண்டுள்ளது. எனவே விரைவில் மூளையினால் இயக்கப்படும் தொழில்நுட்பம் மற்றும் ஓட்டுநர் தேவையில்லாத கார்கள் ஆகிய இரண்டும் இணைந்து செயலாற்றுவது சாத்தியப்பட வாய்ப்புள்ளது, என்றார். அவர் மேலும் கூறுகையில், “ஓட்டுநர் தேவையில்லாத கார்களின்’ அடுத்தக்கட்ட வளர்ச்சி, நமக்கு அதிகளவிலான நன்மைகளை அளிக்கலாம் என்பதால், ஓட்டுநர் தேவையில்லாத கார்களின் பிளாட்பாமின் உதவியுடன் மூளை தொடர்பான இயக்கும் செயல்பாடுகளை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும். முடிவாக, கார்கள் ஓட்டுநர் தேவையில்லாத நிலையில் இருந்தாலும் சரி அல்லது அப்படி இல்லாவிட்டாலும் சரி, இயந்திரங்கள் மனிதனுக்கு உதவியாக இருக்கின்றன. இது போன்ற சூழ்நிலைகளில், மனிதர்களின் எண்ணங்களை நாம் கண்டறிய வேண்டியது அவசியம். எங்களின் இந்த பிராஜெக்ட்டின் மூலம், மனிதக் குலத்திற்கு சிறந்த சேவையை கார்கள் அளிக்கின்றன” என்று விளக்கினார்.
இந்த பிராஜெக்ட்டிற்கு பின்னால் உள்ள நோக்கம் குறித்து ஜாங் கூறுகையில், “இந்த பிராஜெக்ட்டிற்கு இரு துவக்க புள்ளிகள் காணப்படுகின்றன. முதலாவதாக சிரமமின்றி நடமாட முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் கைகள் அல்லது கால்களை பயன்படுத்தாமல் டிரைவிங் செய்யும் முறையை அளிப்பது, இரண்டாவதாக நல்ல உடல்நிலை கொண்ட மக்களுக்கான ஒரு புதிய மற்றும் அதிக அறிவுசார்ந்த டிரைவிங் முறையை அளிப்பது” என்றார்.
தற்சமயத்திற்கு, இந்த கார் மனித எண்ணங்களின் கட்டளைகளை ஏற்று இயங்கும் வகையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த “மூளையினால் இயங்கும் கார்களின்” தயாரிப்பு குறித்த எந்த திட்டமும் இல்லை.
மேலும் படிக்க
- 50 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் MIT மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகம் உடன் கைகோர்த்து சுயமாக ஓட்டும் கார் தயாரிப்பில் டொயோட்டா களமிறங்குகிறது
- சுயமாக ஓட்டும் (செல்ஃப்-டிரைவிங்) கார்கள் தயாரிக்கும் தனது கம்பெனியின் பெயரை கூகுள் நிறுவனம் அறிவித்தது
0 out of 0 found this helpful