2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: டோக்கியோ மோட்டார் ஷோவில் அரங்கேற்றம் காணும் கார்கள்

published on அக்டோபர் 29, 2015 02:20 pm by manish

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

2015 டோக்கியோ மோட்டார் ஷோ துவங்கியுள்ள நிலையில், நம்மை நோக்கி பல அற்புதமான கார்கள் வர உள்ளன. உலகம் முழுவதும் உள்ள வாகன தயாரிப்பாளர்கள், தங்களின் சிறந்த தயாரிப்புகளையும், அற்புதமான தொழில்நுட்பங்களையும், மீண்டும் ஒரு முறை உலகிற்கு காட்சிக்கு வைக்கின்றனர். எனவே, 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் நாம் காண இருக்கும் தயாரிப்புகளை குறித்த ஒரு கண்ணோட்டத்தை காண்போம்.

சுசுகி இக்னிஸ்

அடுத்து வர உள்ள சுசுகியின் இக்னிஸ் தொழில்நுட்பம், ஒரு கச்சிதமான காராகவும், தோற்றத்தில் உண்மையில் சிறப்பாகவும் உள்ளது. இது ஒரு ரெட்ரோ-மார்டன் உட்புறவியலை பெற்று, கவர்ச்சிகரமான கிரவுண்ட் கிளியரன்ஸையும் கொண்டு வெளி வருகிறது. எனவே தொல்லை தரும் குண்டும், குழியும் நிறைந்த சாலையை எதிர்கொள்ள இது கட்டாயம் உதவும். அதேபோல இந்த காரை, கரடுமுரடான சாலைகளுக்கான செயல்திறனை (ஆஃப்-ரோடிங் எபிளிட்டி) கொண்டு சுசுகி நிறுவனம் வடிவமைத்துள்ளதால், சவால் மிகுந்த நிலப்பகுதிகள் மற்றும் பனி படர்ந்த சாலைகள் ஆகியவற்றில் பயணித்து செல்ல இந்த காருக்கு ஏதுவாகிறது. இது கச்சிதமான-கிராஸ்ஓவர் வகையை சேர்ந்தது என்பதற்கு இந்த ஒரு காரியமும் சான்றாக அமைகிறது.

சுசுகி இக்னிஸ்-ட்ரையல் தொழில்நுட்பம்

ஜெனரல் ஆட்டோ-ஷோ பிரோட்டோகாலின் மூலம் இக்னிஸ் தொழில்நுட்பத்தின் ஒரு தொழில்நுட்ப பதிப்பை காட்சிக்கு வைக்க, சுசுகி நிறுவனம் எல்லா வகையிலும் தயாராக உள்ளது. இந்நிலையில், இக்னிஸ்-ட்ரையல் தொழில்நுட்பம் விரிவாக்கம் அடைந்து, பெரிய வீல்களை பெற்று, அவை தடித்த வீல்-ஆர்ச்சு மோல்டிங்குகள் உடன் பொருத்தப்பட்டு காணப்படுகிறது. மற்றபடி அழகியல் மேம்பாடுகளில் கூட நுட்பமான மாற்றங்களை உட்கொண்டு, முரண்பாடான நிறத் திட்டங்களை பெற்று, காரின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் அதிகரித்தும், எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது.

மினி கூப்பர் S கன்வர்டிபிள்

2015 டோக்கியோ மோட்டார் ஷோவில், தனது மினி கூப்பர் கன்வர்டிபிளை, மினி நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் இந்த காரின் விற்பனை துவங்க உள்ள நிலையில், இதன் விலை ஏறக்குறைய £18,475 ஆக இருக்கும் எனத் தெரிகிறது. கூப்பர் S மாடலின் உச்ச வரம்பு காரான இது, 2.0-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை பெற்று, 189bhp ஆற்றலை வெளியிடும். இந்த மேம்படுத்தப்பட்ட காரின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இது முழுமையான எலக்ட்ரிக் ரூஃப்பை கொண்டுள்ளது. முந்தைய பதிப்பில் இருந்து சீர்படுத்தப்பட்டுள்ள இது, மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்லும் போது, 18 விநாடிகளில் மடங்கிக் கொள்ளும் தன்மையை பெற்றுள்ளது. மேலும் இதில் ரோல்ஓவர் பாதுகாப்பு அமைப்பை மையமாக கொண்ட புதிய சென்ஸரை காண முடிகிறது.

BMW M4 GTS

2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் BMW M4 GTS, அதன் அரங்கேற்றத்தை பெற்றுள்ளது. BMW-வின் M பிரிவிலேயே அதிக செயல்திறன் கொண்ட தயாரிப்பான இந்த கார், 1,42,000 யூரோ என்ற அதிக விலை நிர்ணயத்தை கொண்டு, விலையில் BMW i8 கூட இதற்கு அடுத்ததாகவே உள்ளது. இந்த கார் 493bhp ஆற்றலை வெளிப்படுத்தி, 3.7 விநாடிகளில் 0-வில் இருந்து மணிக்கு 100 கி.மீ. வேகத்தை எட்டுகிறது. ஃப்ரோஸன் டார்க் க்ரே மெட்டாலிக், மினரல் க்ரே மெட்டாலிக், சாஃப்பைர் பிளாக் மெட்டாலிக் மற்றும் ஆல்பைன் வைட் ஆகிய நிறங்களில் இந்த கார் கிடைக்கிறது. ஆசிட் ஆரஞ்சு நிறம் பூசப்பட்ட 20-இன்ச் அலாய்களை கொண்டுள்ளது.

சிவிக் டைப் R

மிகவும் வேகமான ஃப்ரென்ட் வீல் டிரைவ் தயாரிப்பு வாகனத்தின் தயாரிப்பிற்கு குறிவைத்த ஹோண்டா நிறுவனம், அதன் சிவிக் டைப் R உடன் தொடர்புப்படுத்தி பணியாற்றியது. ஒரு ஸ்போர்ட்ஸ் காரின் தோற்றத்தை கொண்டு வரும் வகையில் அழகியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனித்தன்மை கொண்ட ஏரோடைனாமிக் தன்மைகளை கொண்டும் பராமரித்துள்ளது. இந்த காரில் ஒரு புதிய 2.0- L VTEC டர்போ என்ஜினை கொண்டு, 310bhp ஆற்றலையும், 400Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த ஆற்றலகம், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா NSX

ஹோண்டா நிறுவனம் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வகையில், சர்வதேச அளவில் மதிப்பிற்குரிய புதிய மாடலான NSX ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்க உள்ளது. முதல் தலைமுறை NSX-ல் இருந்த அதே DNA-வை இந்த கார் பெற்றிருந்தாலும், இன்னும் எடை குறைவான பாடியைக் கொண்டு, மிட்ஷிப் கான்ஃபிக்ரேஷனில் புதிய ட்வின்-டர்போசார்ஜ்டு இன்லைன் V6 என்ஜின் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில், ஒரு 3-மோட்டார் ஸ்போர்ட் ஹைபிரிடு SH-AWD® (சூப்பர் ஹேண்டிலிங் ஆல்-வீல் டிரைவ்) என்று அறியப்படும் பவர்ட்ரெயினை கொண்டு, டிரைவருக்கு ஒரு தனித்தன்மையுள்ள ஓட்டும் அனுபவத்தை உறுதி செய்து, சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்குகிறது. இந்த ஆற்றலகம், ஒரு 9-ஸ்பீடு இரட்டை கிளெச் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள ஒவ்வொரு வீலும், உயர் ஆற்றல் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் உடன் தனிப்பட்ட முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட முடுக்குவிசையை குறிப்பிட்ட இலக்கிற்கு அளிக்க பயன்படுத்தும் ஸ்போர்ட்ஸ் ஹைபிரிடு SH-AWD®, 4 வீல்களுக்கும் ஆற்றலை அளிக்கிறது.

F-பேஸ்

மற்றொரு தயாரிப்பான ஜாகுவாரின் SUV-யான F-பேஸ் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. இந்த கார் ஒரு கடினமான மற்றும் வலிமையுள்ள எடை குறைவான அலுமினியம் கட்டமைப்பை பெற்றுள்ளதால், செயல்திறன், வேகம் மற்றும் மெருகேற்றம் ஆகியவை கொண்ட பயணத்தை அளிக்க முடிகிறது. இந்த காரில் ஒரு சக்திவாய்ந்த வடிவமைப்பான F-டைப்பை தழுவிய சேசிஸ் தொழில்நுட்பம் மற்றும் கட்டிங்-எட்ஜ் டிரைவர் அசிஸ்டேன்ஸ் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இதமான அனுபவத்தை அளிக்க தேவையான அம்சங்கள் என்ற வகையில், உலகிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பான இன் கன்ட்ரோல் டச் ப்ரோ-வை, இந்த காரில் காண முடிகிறது.

ஸ்விஃப்ட் RS

கடைசியாக, ஆனால் மோசமானது என்ற கூற முடியாத வகையில், ஒரு முன் அறிமுகம் உள்ள தயாரிப்பான சுசுகி ஸ்விஃப்ட், தற்போது சுசுகி ஸ்விஃப்ட் RS என்ற அவதாரத்தை எடுத்துள்ளது. சிவப்பு நிறத் திட்டத்தை கொண்ட இந்த காரில், ஒரு புதிய கிரில், புதிய ஹெட்லெம்ப் கிளஸ்டர் உடன் கூடிய கருப்பான கேஸ்டிங், பிரோஜக்டர் ஹெட்லெம்ப்கள், ஃபேக்லெம்ப் கிளஸ்டரை சுற்றிலும் DRL-கள், சுற்றிலும் சைடு ஸ்கிர்ட்டிங்குகள், பின்பக்க ஸ்பாய்லர், ஒரு புதிய டெயில் லெம்ப் கிளஸ்டர் செட்அப் மற்றும் மாறுபட்ட அலாய் வீல்களின் ஜோடி ஆகியவற்றை கொண்டுள்ளது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, இந்த காரில் ஒரு உயர் கம்பிரஷ்சன் விகிதம் கொண்ட அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு, 91 PS@6000rpm மற்றும் 118Nm@4400rpm முடுக்குவிசையை வெளியிட உதவுகிறது.

இதையும் படியுங்கள்:

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience