• English
  • Login / Register

100,000 கார்களை மெக்ஸிகோ நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது வோல்க்ஸ்வேகன் இந்தியா நிறுவனம்

manish ஆல் ஆகஸ்ட் 21, 2015 02:35 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்:  மெக்ஸிகோ நாட்டிற்கு புனே அருகில் அமைந்துள்ள தன்னுடைய சக்கன் தொழிற்சாலையில் இருந்து இந்தியாவில் தயாரான 100,000 வோல்க்ஸ்வேகன் கார்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்தது. இந்தியாவில் இருந்து மெக்சிகோவிற்கு கார் ஏற்றுமதியை தொடங்கிய இரண்டு ஆண்டுக்குள் இந்த ஒரு லட்சம் என்ற மைல் கல்லை சக்கன் தொழிற்சாலை  அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மெக்ஸிகோ சந்தையில் இருக்கும் ஜெட்டா கிலாசிகோ மாடல் கார்களுக்கு மாற்றாக  இந்த புனேயில்  தயாரான வெண்டோ கார்கள் அமையும். வோல்க்ஸ்வேகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி 2015 ஆம் ஆண்டின் முதல் பாதி வரை  கணக்கெடுத்தால் மெக்சிகோவில் விற்பனையான பிரபலமான கார்களில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியாவில் தயாரான வெண்டோ வும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

 சாக்கன் தொழிற்சாலையில் தயாரான  வோல்க்ஸ்வேகன் போலோ கார்களும் 2014 ஆம் ஆண்டு இறுதி முதல் மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் புனே தொழிற்சாலையில் தயாராகும்  வோல்க்வேகன் நிறுவனத்தின்  அத்தனை மாடல் கார்களும் மெக்சிகோவிற்கு ஏற்றுமதியாகிறது..ஆசியா , ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் உள்ள 32 நாடுகளுக்கு வெண்டோ மற்றும் போலோ கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் கார்களில் வலப்புறம் மற்றும் இடப்புற ஸ்டீரிங் அமைப்புகளை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அமைத்துள்ளது.

கார்ஸ்டன் கோரான்ஷ், நிர்வாக இயக்குனர் - லாஜிஸ்டிக்ஸ் பிரிவு, வோல்க்ஸ்வேகன்   இந்தியா பின்வருமாறு கூறினார். “ இந்தியாவின் உள்ளூர் சந்தையின் மீது  தான் நாங்கள் அதிகம் கவனம் செலுத்துகிறோம்.”. அவர் மேலும் கூறுகையில், “ ஏற்றுமதி சந்தையில் கால் பதிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க பட்டவுடன் எங்களது இந்திய செயல்பாடுகளை விரிவு படுத்தியதோடு பொருளாதார ரீதியில் தாக்குப்பிடிக்கும் திறனையும் மேம்படுத்தியுள்ளோம்..” மெக்ஸிகோ போன்ற ஒரு முக்கியமான சந்தையில் எங்களது உயர்ரக கார்கள்  வெற்றி பெற்றுள்ளதைப் பார்க்கும் போது இன்னும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வைப்பு பிரகாசமாக இருப்பதாகவே நினைக்கிறோம்.”.
மூலம்: எகனாமிக் டைம்ஸ்

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience