• மெர்சிடீஸ் சி-கிளாஸ் முன்புறம் left side image
1/1
  • Mercedes-Benz C-Class
    + 23படங்கள்
  • Mercedes-Benz C-Class
    + 6நிறங்கள்
  • Mercedes-Benz C-Class

மெர்சிடீஸ் சி-கிளாஸ்

with rwd option. மெர்சிடீஸ் சி-கிளாஸ் Price starts from ₹ 58.60 லட்சம் & top model price goes upto ₹ 62.70 லட்சம். It offers 3 variants in the 1496 cc & 1993 cc engine options. The model is equipped with om654m engine that produces 197.13bhp@3600rpm and 440nm@1800-2800rpm of torque. It can reach 0-100 km in just 5.7 விநாடிகள் & delivers a top speed of 250 kmph.it's & | Its other key specifications include its boot space of 540 litres. This model is available in 6 colours.
change car
123 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.58.60 - 62.70 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
டீலர்களை தொடர்பு கொள்ள
இந்த மாதத்திற்கான சிறந்த ஆஃபர்களை தவறவிட்டு விடாதீர்கள்

மெர்சிடீஸ் சி-கிளாஸ் இன் முக்கிய அம்சங்கள்

engine1496 cc - 1993 cc
பவர்197.13 - 261.49 பிஹச்பி
torque550 Nm - 440 Nm
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
top வேகம்245 கிமீ/மணி
drive typerwd

சி-கிளாஸ் சமீபகால மேம்பாடு

லேட்டஸ்ட் அப்டேட்: புதிய தலைமுறை C-கிளாஸை மெர்சிடிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் விலை: செடான் விலை ரூ.55 லட்சம் முதல் ரூ.61 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்)

மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் விலை வேரியண்ட்கள்: இது C200, C220D மற்றும் C300D ஆகிய மூன்று டிரிம்களில் வழங்கப்படுகிறது.

மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன்: மெர்சிடிஸ் புதிய C-கிளாஸ் உடன் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் வழங்குகிறது. 2-லிட்டர் டீசல் இரண்டு டியூன் நிலைகளில் கிடைக்கிறது: 200PS/440Nm (C220d) மற்றும் 265PS/550Nm (C300d). பெட்ரோல் மில் 204PS/300Nm (C200) அவுட்புட் கொண்ட 1.5-லிட்டர் டர்போ யூனிட் ஆகும். அனைத்து பவர்டிரெய்ன்களும் 48V மைல்ட் ஹைப்ரிட் அமைப்பைப் பெறுகின்றன, இது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் விலை அம்சங்கள்: புதிய C-கிளாஸ் ஆனது மெர்சிடிஸ் -ன் சமீபத்திய MBUX தொழில்நுட்பத்துடன் கூடிய வெர்டிகல் 11.9 -இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பெரிய சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங்குகள், பிரீமியம் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சில அடிப்படை ADAS செயல்பாடுகளும் அடங்கும்.

மெர்சிடிஸ் - பென்ஸ் C-கிளாஸ் போட்டியாளர்கள்: செடான் ஆடி A4, BMW 3 சீரிஸ், ஜாகுவார் XE மற்றும் வால்வோ S60 ஆகியவற்றுடன் இது போட்டியிடுகிறது.

சி-கிளாஸ் சி 220டி(Base Model)1993 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 23 கேஎம்பிஎல்Rs.58.60 லட்சம்*
சி-கிளாஸ் சி 2001496 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.9 கேஎம்பிஎல்Rs.59.60 லட்சம்*
சி-கிளாஸ் சி 300டி(Top Model)1993 cc, ஆட்டோமெட்டிக், டீசல்Rs.62.70 லட்சம்*

ஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் சி-கிளாஸ் ஒப்பீடு

மெர்சிடீஸ் சி-கிளாஸ் விமர்சனம்

CarDekho Experts
""சி-கிளாஸ் அதன் உரிமையாளர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து வசதிகளுடன் ஒரு தினசரி வாகனத்துக்கான ஒரு சிறந்த தேர்வாகும்.""

overview

மெர்சிடிஸ் சி-கிளாஸ் நீண்ட பாரம்பரியம் கொண்டது. இது மிகவும் குறைவான விலை கொண்ட  மெர்சிடிஸ் ஆக இருந்தது தொடங்கி அதன் சமீபத்திய தலைமுறையில் 'பேபி எஸ்-கிளாஸ்' என்று மாறியது. பல ஆண்டுகளாக காரின் புகழ் மற்றும் அளவு மட்டும் உயரவில்லை அதன் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. காரின் லேட்டஸ்ட் வெர்ஷன் முன்பை விட பெரியது, அதிக திறன் கொண்டது, ஆடம்பரமானது மற்றும் தொழில்நுட்பம் நிறைந்ததாகவும் இருக்கின்றது. அது இந்த காரை சரியான ஆல்ரவுண்டராக ஆக்குகிறதா?

வெளி அமைப்பு

சி-கிளாஸின் வெளிப்புறம் அதிநவீனமாகவும் நன்கு வட்டமாகவும் ஆடம்பரமாகவும் தெரிகிறது. முன்பக்கத்தில் மையத்தில் மூன்று புள்ளிகள் கொண்ட பென்ஸ் நட்சத்திரத்துடன் கூடிய பெரிய இடைவெளி கொண்ட கிரில் உள்ளது. இது காருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது. பக்கவாட்டில் ஸ்வூப்பிங் லைன் அதை மிகவும் நேர்த்தியாகவும் Avantgarde வேரியன்ட் 17 இன்ச் சக்கரங்கள் மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுகின்றன. இந்த காரின் சிறந்த கோணம் பின்புற முக்கால் பின் கோணம். கண்ணீர்த் துளி வடிவ ஸ்பிளிட் LED டெயில் லைட்ஸ் பரபரப்பாகத் இருக்கின்றன மற்றும் கூபே போன்று கூரை சாய்வாக உள்ளது. புதிய சி-கிளாஸ் -க்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது. பின்பக்க பம்பரும் ஃபாக்ஸ் டிஃப்பியூசர் கட்டிங் விஷுவல் மாஸ் உடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

C300d ஆனது ஏஎம்ஜி-லைன் வேரியன்ட்டில் வருகிறது. இது ஒட்டுமொத்த வடிவமைப்பில் ஸ்போர்ட்டினஸ் தோற்றத்தை கொடுக்கின்றது. இது மிகவும் ஆக்ரோஷமாக தோற்றமளிக்கும் கிரில் மற்றும் முன்பக்க பம்பர் ஃபிளேர்ட் சைட் சில்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்களின் பெரிய செட் ஆகியவற்றைப் பெறுகிறது.

புதிய தலைமுறை மெர்சிடிஸ் சி-கிளாஸ் எஸ்-கிளாஸ் போன்ற அதே MRA II தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் முன்னோடியுடன் ஒப்பிடும் போது ​​இது 65 மி.மீ நீளம் 10 மி.மீ அகலம் மற்றும் 25 மி.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது. இது பின்புறத்தில் அதிக இடத்தை கொண்டதாக உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 7 மி.மீ அதிகரித்துள்ளது.

உள்ளமைப்பு

புதிய சி-கிளாஸின் வெளிப்புறம் உங்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரிந்தால் ஷோரூமை விட்டு வெளியே வராதீர்கள். ஏனெனில் அது கேபின் தான் இந்த காரின் உண்மையான சிறப்பம்சமாகும். புதிய S-கிளாஸால் ஈர்க்கப்படாமல் W206 மெர்சிடிஸ் C-கிளாஸ் ஆனது 11.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சென்ட் ஸ்டேஜில் உள்ள அதே பாணியிலான சென்ட்ரல் கன்சோலை கொண்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு பிரமிக்க வைக்கிறது மற்றும் மிகவும் அழகாக செயல்படுத்தப்பட்டுள்ளது. C-கிளாஸின் கேபின் இந்த விலையில் வேறு எந்த செடானுக்கும் இல்லாத சிறப்பான உணர்வைக் கொடுக்கின்றது.

லேயர்டு டேஷ் வடிவமைப்பு ஆடம்பரமாகத் தெரிகிறது. மரத்தைப் பயன்படுத்தியதன் காரணமாகவும் போர்-ஜெட் ஆஃப்டர் பர்னர்களால் ஈர்க்கப்பட்ட ஏர்-கான் வென்ட்கள் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு முறை நகர்த்தும் போதும் அவை திருப்திகரமான கிளிக்குகளுடன் செயல்படும் விதம் உங்களுக்குச் சொல்கிறது. 

சி-கிளாஸ் எஸ்-கிளாஸ் போன்ற அதே சியன்னா பிரவுன் அப்ஹோல்ஸ்டரியையும் பெறுகிறது. இது காரின் ஒட்டுமொத்த தோற்றத்தை அதிகரிக்கிறது. புதிய சி-கிளாஸ் கேபினின் வடிவமைப்பு மற்றும் சுற்றுப்புறம் இணையற்றதாக இருந்தாலும் தரத்தின் அடிப்படையில் மெர்சிடிஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துள்ளது. கேபினின் கீழ் பாதிப் பகுதியில் மெர்சிடிஸ் கடினமான பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் BMW 3 சீரிஸ் உடன் ஒப்பிடும் போது இது சீரான தோற்றத்தை கொண்டிருக்கவில்லை.

11.9 -இன்ச் ஹை ரெசல்யூஷன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சமீபத்திய எஸ்-கிளாஸில் நாம் பார்த்த சமீபத்திய MBUX டெக்னாலஜியை பயன்படுத்துகிறது. இது பெரிய ஐகான்களுடன் ஒரு பிரகாசமான துடிப்பான டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மற்றும் அதன் வேகமும் நன்றாகவே உள்ளது. இந்த அமைப்பில் ஆப்ஷனால சீட் லெவல் சவுண்ட் சிஸ்டம்கள் ஏர்-கான் செட்டப் மற்றும் சன்ஷேட் லெவல் ஆகியவற்றை கொடுக்கும் டிரைவர் புரொஃபலை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் 'ஹே மெர்சிடிஸ்' என்று கூறும்போது செயல்படுத்தப்படும் வாய்ஸ் அசிஸ்டன்ட் கமான்ட் செட்டப் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் பல காரின் நிறைய விஷயங்களை கட்டுப்படுத்தலாம்.

சாஃப்ட் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளேயையும் உள்ளது. நிறைய தகவல்களை உங்களுக்குக் காண்பிக்கும் மேலும் உங்கள் விருப்பப்படி அதைத் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். S-கிளாஸை போலவே இப்போது பல கன்ட்ரோல்கள் டச் பேஸ்டு 'நவீன' இன்டராக்டிவ் அடிப்படையிலானவை. ஸ்டியரிங் வீலில் பொருத்தப்பட்ட ORVM பட்டன்கள், அட்ஜஸ்ட்மென்ட் பட்டன்கள் மற்றும் சன்ரூஃப் ஓபனிங் ஸ்வைப் ஃபங்ஷன் போன்ற டச் கன்ட்ரோல்கள் நிறைய உள்ளன.

வசதியைப் பொறுத்தவரை முன் இருக்கைகள் பெரியவை, மற்றும் நீண்ட பயணங்களுக்கு கூட வசதியாக இருக்கும். ஸ்போர்ட்டி டிரைவிங் பொசிஷனுக்காக ஓட்டுநர் இருக்கையை மிகக் குறைவாக வைத்துக் கொள்ளலாம் அல்லது அதிக ட்ராஃபிக்கில் வாகனம் ஓட்டும்போது சிறந்த காட்சியைப் பெற விரும்பினால் உயரமாக அமைக்கலாம். தவறவிட்ட ஒரு விஷயம் என நாங்கள் நினைப்பது இந்த விலையில் வழங்கப்பட்டிருக்க வேண்டிய முன் சீட் வென்டிலேஷன் ஆகும்.

உண்மையான அப்டேட் பின்புறத்தில் நடந்துள்ளது. அதன் முன்னோடிகளைப் போலன்றி புதிய சி-கிளாஸ் ஒரு நல்ல முழங்கால் அறை மற்றும் ஹெட் ரூம் உடன் கூடிய விசாலமான பின் இருக்கையைக் கொண்டுள்ளது. இருக்கை கூட முதுகுக்கு நல்ல ஆதரவு மற்றும் தொடைக்கு கீழ் ஆதரவுடன் ஆதரவை கொடுக்கின்றது. ஒரே ஒரு எதிர்மறை விஷயம் இருக்கை மிகவும் தாழ்வாக வைக்கப்பட்டுள்ளதால் பின் இருக்கைக்கு உள்ளே செல்வதும் வெளியே வருவதும் எளிதானது அல்ல.

நடைமுறையின் அடிப்படையில் சி-கிளாஸ் சிறப்பாக செயல்படுகிறது. முன்பக்கத்தில் நீங்கள் நிறைய ஸ்டோரேஜ் கிடைக்கும். பின்பக்கத்திலும் அப்படியே இருக்கின்றது. போன் சார்ஜிங் போர்ட்கள் இல்லாததுதான் பின்பக்க பயணிகளுக்கு கவலையாக இருக்கும்.

வசதிகள்

வசதிகளைப் பொறுத்தவரை Avantgarde டிரிமில் உள்ள சி-கிளாஸ் மெமரி ஃபங்ஷன், பவர்டு ஸ்டீயரிங் அட்ஜஸ்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 11.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் கூடிய முன் இருக்கைகளுடன் வருகிறது.  பனோரமிக் சன்ரூஃப் ஆம்பியன்ட் லைட்ஸ் உள் 3D மேப் மற்றும் கனெக்டட் கார் வசதிகளும் உள்ளன. கூடுதலாக C300d AMG-Line இல் நீங்கள் லேசர் LED ஹெட்லேம்ப்கள் பெரிய 18-இன்ச் அலாய்கள் ஒரு பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. பாதுகாப்புக்காக அடிப்படையான ADAS ஃபங்ஷன் (ஆக்டிவ் பிரேக்கிங் அசிஸ்ட்) 6 ஏர்பேக்குகள் ESP மற்றும் பல உள்ளன.

பாதுகாப்பு

புதிய சி-கிளாஸின் பூட் பெரியது மற்றும் ஓபனிங் போதுமானதாக உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஸ்பேஸ்-சேவர் ஸ்பேர் டயரை வைக்க இடம் இல்லை. இது கணிசமான அளவு பூட் ஸ்பேஸை எடுத்துக் கொள்கின்றது. எனவே நீங்கள் நிறைய சாமான்களை எடுத்துச் செல்ல விரும்பினால் ஸ்பேர் டயரை வீட்டிலேயே விட்டுவிட வேண்டும். ஆனால் இது சில சமயங்களில் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

செயல்பாடு

புதிய சி-கிளாஸ் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 265 PS 2.0 டீசல் இன்ஜினுடன் வரும் C300d மிகவும் சக்தி வாய்ந்தது அதே நேரத்தில் C220d அதே திறன் கொண்ட டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது ஆனால் அதிக 200 PS அவுட்புட்டை கொடுக்கின்றது. இதன் ரேஞ்சில் மிகவும் விலை குறைவான மாடல் C200 ஆகும் இது 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அட்டகாசமான 204 PS அவுட்புட்டை கொடுக்கின்றது. இந்த இன்ஜின்கள் அனைத்தும் மைல்ட்-ஹைப்ரிட் டெக்னாலஜியுடன் வருகின்றன. 48-வோல்ட் சிஸ்டம் 20PS வரை மற்றும் 200Nm டார்க்கை வழங்கக்கூடிய திறன் கொண்டவை. இந்த எங்களுக்கு பெட்ரோல் பதிப்பை மட்டுமே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சிறிய டிஸ்பிளேஸ்மென்ட் இருந்தபோதிலும் மோட்டார் நன்றாக ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது. மேலும் C200 குறைந்த வேகத்தில் பெப்பியான உணர்வை கொடுக்கின்றது. இது குறைந்த 1800rpm -ல் வரும் அதிகபட்ச டார்க் மற்றும் மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பத்தால் பூஸ்ட் கிடைக்கின்றது. அதிக RPM -களில் இயங்கும் போது போது கூட இது ஒரு ரீஃபைன்மென்ட் யூனிட் ஆக உள்ளது. 0-100kmph நேரம் 7.3 வினாடிகள் வேகமானது ஆனால் 1.5 வினாடிகள் வேகமான மற்றும் அதே விலையில் இருக்கும் BMW 330i போல நிச்சயமாக உற்சாகமாக இல்லை. நீங்கள் வேகமான புதிய சி-கிளாஸை வாங்க விரும்பினால் நீங்கள் டீசல் C300d வெர்ஷனை வாங்க வேண்டும். இது அதிக டார்க் மற்றும் 61 ஹார்ஸ்பவர் அவுட்புட்டை கொண்டதாக உள்ளது.

பெட்ரோல் இன்ஜினின் சிறிய டிஸ்பிளேஸ்மென்ட்டை மட்டும் இங்கு குற்றம் சாட்ட முடியாது. ஆனால் 9-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனையும் கூட ஒரு காரணம் ஆகும். இது ஒரு ஸ்மூத்-ஷிஃப்டிங் யூனிட் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் சக்தியை வழங்குவதற்கு முன் ஒரு சிறிய இடைவெளியை கொடுப்பதால் த்ராட்டில் பெடலில் துண்டிக்கப்பட்ட உணர்வு உள்ளது. கியர் ஷிஃப்ட்களும் சற்று லேக் ஆகவே உள்ளன. இது வேடிக்கையான விஷயத்தில் இருந்து விலகிச் செல்கிறது.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

சி-கிளாஸில் ஆடம்பரத்தின் உண்மையான உணர்வு அதன் சஸ்பென்ஷன் அமைப்பிலிருந்து கிடைக்கின்றது. நன்கு மதிப்பிடப்பட்ட ஸ்பிரிங் ரேட்கள் இந்த ஜெர்மன் காரை மிருதுவாக உணர உதவுகின்றன. பழுதடைந்த பரப்புகளில் கூட சஸ்பென்ஷன் வியக்கத்தக்க வகையில் கிராஷ் இல்லாத பம்ப்பை கொண்டுள்ளது. மேலும் நீங்கள் பெரும்பாலான குறைபாடுகளை உணர மாட்டீர்கள். ஆம் குறைந்த வேகத்தில் சில இடங்களில் இறுக்கம் உள்ளது. ஆனால் அது ஒருபோதும் அசௌகரியத்தை உணரும் நிலைக்கு வராது. அதிக வேகத்தில் கூட சி-கிளாஸ் நல்ல அமைதியைக் காட்டுகிறது. மேலும் இது ஒரு இனிமையான நெடுஞ்சாலைத் துணையாக அமைகிறது.

கையாளுதலின் அடிப்படையில் சி-கிளாஸ் பாதுகாப்பானது, யூகிக்கக்கூடியது மற்றும் வேடிக்கையானது என்பதை நிரூபிக்கிறது. கடினமாக தள்ளப்பட்டாலும் அது நிலையானதாக உணர்கிறது மற்றும் சேசிஸ் திசையை மாற்ற ஆர்வமாக இருக்கின்றது. இது சி-கிளாஸை ஓட்டுவதற்கு மிகவும் பிடித்த விஷயமாக மாற்றுகிறது. புதிய சி-கிளாஸ் மட்டும் அதிக ஆற்றல் வாய்ந்த இன்ஜினை கொண்டிருந்தால் காரின் ஃபன்-டிரைவிங் அளவு இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வெர்டிக்ட்

புதிய மெர்சிடிஸ் சி-கிளாஸ் முந்தைய காரின் பலத்தை அப்படியே கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல இப்போது ஒரு வலிமையான தொகுப்பாக இது மாறியுள்ளது. புதிய கார் நன்கு தோற்றம் கொண்டதாகவும் , அதிக பிரீமியம் ஆனதாகவும், விசாலமானதாகவும், நன்கு பொருத்தப்பட்டதாகவும் உணரப்படுவதால் இது எல்லா வகையிலும் பெரியது மற்றும் சிறந்ததாக உள்ளது. இது ஓட்டுவதற்கு எளிதான கார் மற்றும் வளைவுகளில் ஓட்டுவது ஃபன் ஆக இருக்கும். ஆனால் கார் ஆர்வலர்கள் பெட்ரோல் இன்ஜின் காரணமாக சி-கிளாஸ் ஓட்டுவதற்கு சற்று மந்தமாக இருப்பதாக உணர்வார்கள்.

சிறிய 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் தினசரி  பயணத்துக்கு ஏற்ற போதுமான பவரை கொண்டுள்ளது. ஆனால் வெளிப்படையான செயல்திறனின் அடிப்படையில் குறிப்பாக சிலிர்ப்பாக இல்லை. ஆனால் நீங்கள் சாஃபர்-டிரைவிங் மற்றும் எப்போதாவது மட்டுமே காரை எடுக்கப் போகிறீர்கள் என்றால் C200 ஒவ்வொரு பெட்டியையும் சரியாக டிக் செய்கிறது. "சி-கிளாஸ் அதன் உரிமையாளர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து வசதிகளுடன் ஒரு தினசரி வாகனத்துக்கான ஒரு சிறந்த தேர்வாகும். ரூ. 55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலை பேக்கேஜை கருத்தில் கொண்டு பார்க்கையில் இது சரியாகத் தெரிகிறது.

மெர்சிடீஸ் சி-கிளாஸ் இன் சாதகம் & பாதகங்கள்

    நாம் விரும்பும் விஷயங்கள்

  • வெளிப்புறம் நேர்த்தியானது
  • கண்ணைக் கவரும் கேபின் வடிவமைப்பு
  • ரீஃபைன்மென்ட் ஆன பெட்ரோல் இன்ஜின்

    நாம் விரும்பாத விஷயங்கள்

  • பெட்ரோல் இன்ஜினில் தேவைப்படும் சக்தி இல்லை
  • சில வசதிகள் கொடுக்கப்படவில்லை

இதே போன்ற கார்களை சி-கிளாஸ் உடன் ஒப்பிடுக

Car Nameமெர்சிடீஸ் சி-கிளாஸ்பிஎன்டபில்யூ 3 சீரிஸ்ஸ்கோடா சூப்பர்ப்மெர்சிடீஸ் ஜிஎல்ஏடொயோட்டா காம்ரிக்யா ev6ஜீப் வாங்குலர்லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்ஆடி ஏ6ஜாகுவார் எஃப்-பேஸ்
டிரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்ஆட்டோமெட்டிக்
Rating
123 மதிப்பீடுகள்
100 மதிப்பீடுகள்
8 மதிப்பீடுகள்
52 மதிப்பீடுகள்
151 மதிப்பீடுகள்
109 மதிப்பீடுகள்
6 மதிப்பீடுகள்
54 மதிப்பீடுகள்
119 மதிப்பீடுகள்
113 மதிப்பீடுகள்
என்ஜின்1496 cc - 1993 cc 2998 cc1984 cc1332 cc - 1950 cc2487 cc -1995 cc1997 cc 1984 cc1997 cc
எரிபொருள்டீசல் / பெட்ரோல்பெட்ரோல்பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல்எலக்ட்ரிக்பெட்ரோல்டீசல் / பெட்ரோல்பெட்ரோல்டீசல் / பெட்ரோல்
எக்ஸ்-ஷோரூம் விலை58.60 - 62.70 லட்சம்72.90 லட்சம்54 லட்சம்50.50 - 58.15 லட்சம்46.17 லட்சம்60.95 - 65.95 லட்சம்67.65 - 71.65 லட்சம்67.90 லட்சம்64.09 - 70.44 லட்சம்72.90 லட்சம்
ஏர்பேக்குகள்769-986-66
Power197.13 - 261.49 பிஹச்பி368.78 பிஹச்பி187.74 பிஹச்பி160.92 - 187.74 பிஹச்பி175.67 பிஹச்பி225.86 - 320.55 பிஹச்பி268.2 பிஹச்பி-241.3 பிஹச்பி201.15 - 246.74 பிஹச்பி
மைலேஜ்23 கேஎம்பிஎல்13.02 கேஎம்பிஎல்-17.4 க்கு 18.9 கேஎம்பிஎல்-708 km10.6 க்கு 11.4 கேஎம்பிஎல்-14.11 கேஎம்பிஎல்19.3 கேஎம்பிஎல்

மெர்சிடீஸ் சி-கிளாஸ் கார் செய்திகள் & அப்டேட்கள்

  • ரோடு டெஸ்ட்
  • 2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது
    2024 Mercedes-Benz GLS: பெரியது, நிச்சயமாக சிறப்பானது

    மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய எஸ்யூவி -க்கு மிகவும் நவீனமானதாகத் தோன்றும் வகையில் சமீபத்தில் ஒரு மிட்லைஃப் அப்டேட்டை கொடுத்தது. ஆனால் பழைய வெர்ஷனின் சிறப்புகளை அது இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா? அதை கண்டுபிடிப்பதற்கான நேரம் இது. 

    By rohitMay 15, 2024
  • 2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?
    2024 Mercedes-Benz GLA Facelift: இது என்ட்ரி லெவல் கார்தானா ?

    GLA ஆனது கால ஓட்டத்துக்கு ஏற்றபடி ட்ரெண்டிங்கில் இருக்க உதவும் வேரியன்ட்யில் சிறிய அப்டேட்டை பெறுகிறது. இந்த சிறிய அப்டேட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா?

    By nabeelMay 10, 2024
  • Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ
    Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

    மெர்சிடிஸ் EQE காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் உடனடி செயல்திறன் ஆகியவை ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

    By arunMay 07, 2024

மெர்சிடீஸ் சி-கிளாஸ் பயனர் மதிப்புரைகள்

4.2/5
அடிப்படையிலான123 பயனாளர் விமர்சனங்கள்

    Mentions பிரபலம்

  • ஆல் (123)
  • Looks (35)
  • Comfort (71)
  • Mileage (16)
  • Engine (40)
  • Interior (51)
  • Space (18)
  • Price (15)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • A
    ashutosh on May 21, 2024
    4

    Mercedes C-Class Offers A Great Driving Experience

    My dear friend has a Me­rcedes-Benz C-Class car. It looks sleek and sporty on the outside. The­ interiors are comfortable and makes driving fun. The 2.0 litre diesel e­ngine is powerful. It works well...மேலும் படிக்க

  • K
    kiran on May 13, 2024
    4

    Mercedes-Benz C-lass Is Compact Yet Classy

    The Mercedes-Benz C-Class is compact yet classy, the C-Class is the perfect blend of style and efficiency. With respectable mileage 17 kmpl, it is ideal for city drives without sacrificing comfort. In...மேலும் படிக்க

  • R
    roop on May 06, 2024
    4

    Mercedes C-Class Offers A Premium Feel With A Powerful Engine

    We recently bought the Mercedes-Benz C-Class at a price yag of Rs 75 lakh, it truly is a great investment. The car looks stunning, the design is sleek and modern. The interiors are spacious and luxuri...மேலும் படிக்க

  • S
    sunil on Apr 26, 2024
    4

    Mercedes-Benz C-class Is Really One Of A Kind

    The Mercedes-Benz C-class is really one of a kind. It is truly a masterpiece produced by mercedes. From its premium cabin to its striking looks and from its driving experience to its ambiance everythi...மேலும் படிக்க

  • V
    vivek on Apr 18, 2024
    4

    A Car That Delivers A Dynamic Driving Experience

    Safety is a main concern for Mercedes-Benz, and the C-Class comes furnished with a far reaching set-up of cutting edge security elements and driver help frameworks. From versatile journey control to p...மேலும் படிக்க

  • அனைத்து சி-கிளாஸ் மதிப்பீடுகள் பார்க்க

மெர்சிடீஸ் சி-கிளாஸ் மைலேஜ்

இந்த ஆட்டோமெட்டிக் டீசல் வேரியன்ட்டின் மைலேஜ் 23 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 16.9 கேஎம்பிஎல்.

மேலும் படிக்க
எரிபொருள் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் mileage
டீசல்ஆட்டோமெட்டிக்23 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்16.9 கேஎம்பிஎல்

மெர்சிடீஸ் சி-கிளாஸ் நிறங்கள்

  • selenite சாம்பல்
    selenite சாம்பல்
  • உயர் tech வெள்ளி
    உயர் tech வெள்ளி
  • manufaktur opalite வெள்ளை bright
    manufaktur opalite வெள்ளை bright
  • மொஜாவே வெள்ளி
    மொஜாவே வெள்ளி
  • அப்சிடியன் பிளாக்
    அப்சிடியன் பிளாக்
  • கேவன்சைட் ப்ளூ
    கேவன்சைட் ப்ளூ

மெர்சிடீஸ் சி-கிளாஸ் படங்கள்

  • Mercedes-Benz C-Class Front Left Side Image
  • Mercedes-Benz C-Class Grille Image
  • Mercedes-Benz C-Class Headlight Image
  • Mercedes-Benz C-Class Taillight Image
  • Mercedes-Benz C-Class Wheel Image
  • Mercedes-Benz C-Class Exterior Image Image
  • Mercedes-Benz C-Class Exterior Image Image
  • Mercedes-Benz C-Class Exterior Image Image
கருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்
Ask QuestionAre you confused?

48 hours இல் Ask anything & get answer

கேள்விகளும் பதில்களும்

  • சமீபத்திய கேள்விகள்

What is the boot space of Mercedes-Benz C-class?

Anmol asked on 28 Apr 2024

The Mercedes-Benz C-Class has boot space of 540 litres.

By CarDekho Experts on 28 Apr 2024

How many cylinders are there in Mercedes-Benz C-class?

Anmol asked on 19 Apr 2024

The Mercedes-Benz C-Class has 4 cylinder engine.

By CarDekho Experts on 19 Apr 2024

What is the body type of Mercedes-Benz C-class?

Anmol asked on 11 Apr 2024

The Mercedes-Benz C-Class comes under the category of sedan car.

By CarDekho Experts on 11 Apr 2024

What is the fuel type of Mercedes-Benz C-class?

Anmol asked on 6 Apr 2024

The Mercedes-Benz C-Class is available in Petrol and Diesel variants.

By CarDekho Experts on 6 Apr 2024

What is the drive type of Mercedes-Benz C-class?

Devyani asked on 5 Apr 2024

The drive type of Mercedes-Benz C-class is RWD.

By CarDekho Experts on 5 Apr 2024
space Image
மெர்சிடீஸ் சி-கிளாஸ் brochure
download brochure for detailed information of specs, பிட்டுறேஸ் & prices.
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs. 73.45 - 78.56 லட்சம்
மும்பைRs. 70.26 - 75.44 லட்சம்
புனேRs. 70.90 - 75.44 லட்சம்
ஐதராபாத்Rs. 72.29 - 77.32 லட்சம்
சென்னைRs. 73.46 - 78.58 லட்சம்
அகமதாபாத்Rs. 65.25 - 69.80 லட்சம்
லக்னோRs. 67.53 - 72.24 லட்சம்
ஜெய்ப்பூர்Rs. 69.19 - 74.47 லட்சம்
சண்டிகர்Rs. 66.36 - 70.98 லட்சம்
கொச்சிRs. 74.57 - 79.76 லட்சம்
உங்கள் நகரத்தை தேர்ந்தெடு
space Image

போக்கு மெர்சிடீஸ் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

பிரபலமானவை ஆடம்பர கார்கள்

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

view மே offer
டீலர்களை தொடர்பு கொள்ள
Did you find this information helpful?
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience