பிரிட்டிஷ் வாகன தயாரிப்பாளரான ஆஸ்டன் மார்டின், சீன கன்ஸ்யூமர் எலக்டிரானிக்ஸ் நிறுவனமான லீகோவுடன் (முன்னர் Letv என்று அழைப்பட்டது) இணைந்து தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்க, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவித்தது. ஆஸ்டன் மார்டின், லீகோ மற்றும் பாரடே ஃப்யூச்சர் நிறுவனங்களின் ஏனைய மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு முன்பு, ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் ராப்பிட் E எலக்ட்ரிக் வாகன கான்செப்ட்டைத் தயாரிப்பதுதான் இந்த கூட்டுமுயற்சியின் முதல் திட்டமாகும்.
ஒரு மதுக்கடைக்கு நடந்து சென்று ஆக்ஸிமோரோனிக் “வோட்கா மார்டினி”-யை குலுக்கியதாக, ஆனால் கலக்கப்படாத நிலையில் அளிக்குமாறு குறிப்பாக கூறி பெற்றுக் கொள்ள நினைக்கும் போது, ஒரு இயற்கைக்கு பொருந்தாத நிலையிலான சிரிப்பை வெளிப்படுத்தும் முகங்களை பெறும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கான நற்செய்தி இதோ! ஜேம்ஸ்பாண்டு ஓட்டிய ஆஸ்டன் மார்டின் DB10 கார், சாலையில் செல்வதை நீங்கள் கண்டு, அந்த காரின் உரிமையாளர் ஆண்/ பெண் ஆக இருக்க, நீங்கள் அவரை வசீகரிக்கும் பட்சத்தில், உங்களை வைத்து ஓட்டிச் செல்லவும் கூடும். ஏனெனில் ஜேம்ஸ்பாண்டின் 24வது திரைப்படமான ஸ்பெக்சர் படத்திற்காக உருவாக்கப்பட்ட 10 ஆஸ்டன் மார்டின் DB10 கார்களில் ஒன்றை, ஆஸ்டன் மார்டின் நிறுவனம் ஏலத்தில் விடப் ப ோகிறது.
தனது முதல்தரமான DB11 GT காரின் அதிகாரபூர்வமான முதல் படம் (டீஸர்), பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரின் ஒரு வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இக்காரின் இதயத்தை (ஆற்றலகம்) குறித்த ஒரு கண்ணோட்டத்தை பெற முடிகிறது. ஒரு ஓட்டுநரின் மூலம் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் அழுத்தப்பட்டதாக துவங்கும் இந்த வீடியோ, மின்னும் சிவப்பு ஒளியில் நனைவதற்கு அழைப்பதை போன்று உள்ளது. இது வெளியிடும் அசுரத்தனமான ஆற்றலை வைத்து பார்க்கும் போது, அது ஒரு சிவப்பு ஒளி என்பதற்கு ஏற்றதாக அமைந்து, இந்த குறிப்பிட்ட ஆஸ்டன் மார்டின் காருக்கு DB11 என்று பெயரிடப்படலாம் என்று தெரிகிறது. அதில் அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், ஒரு ட்வின்-டர்போசார்ஜ்டு V12 என்ஜினை கொண்டிருப்பது தெரிகிறது.
அடுத்த தலைமுறைக்கான எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதில், பீஜிங்கை சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனமான லெட்வ் உடன், ஆஸ்டன் மார்டின் நிறுவனம் கைகோர்த்துள்ளது. சீனாவை சேர்ந்த இந்த நிறுவனம், தனது எலக்ட்ரிக் கார் தயாரிப்பை குறித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பின் போது, லெட்வ் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க உள்ளது; இந்த செயல்திட்டம் SEE (சூப்பர் எலக்ட்ரிக் ஈகோ-சிஸ்டம்) என்று அழைக்கப்படும் என இந்நிறுவனத்தின் நிறுவுனரான திரு.ஜியாயூவிடிங் தெரிவித்தார். லெட்வ் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் வாகனத்தின் உருவாக்கத்திற்காக, ஆஸ்டின் மார்டின் மற்றும் BAIC மோட்டார் கார்ப்ரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. ஆட்டோ சீனா 2016-ல் இந்த வாகனம் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
ஜெய்பூர்: ஆஸ்டன் மார்டின் காருக்கும் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரத்திற்கும் இடையேயான நீண்ட நெடு நாளைய உறவு மேலும் வலுப்பெறும் விதமாக தனது DB வரிசை கார்களில் புதிதாக DB9 GT பான்ட் எடிஷன் கார்களை ஆஸ்டன் மார்டின் அறிமுகப்படுத்தியது. வெறும் 150 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர் தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக உணரும் விதத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. DB9 வரிசையில் இதுவே இறுதியான வெளியீடாக இருக்கும். 2016 முதல் DB11 வரிசை கார்கள் வெளியாகும்.