பயன்பாட்டு வாகனங்கள் பெரிய அளவிலான விலை தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது
published on டிசம்பர் 22, 2015 10:25 am by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்
யுடிலிடி வெஹிகல் என்று அழைக்கப்படும் பயன்பாட்டு வாகனங்களை இப்போது சொந்தமாக்கி கொள்வது மிகவும் எளிதாகி உள்ளது. இதற்கு காரணம் இந்த பயன்பாட்டு வாகனங்கள் மீது ஏராளமான விலை சலுகைகளை பல்வேறு வாகன தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளதே ஆகும். ஆகவே எந்தெந்த வாகனங்கள் மீது எத்தகைய விலை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்காக வரும் பத்திகளில் பட்டியலிட்டுள்ளோம்.
1.ரெனால்ட் டஸ்டர்
தன்னுடைய பிரிவில் ஏற்கனவே நல்ல முறையில் காலூன்றி பிரபலமாக உள்ள இந்த டஸ்டர் வாகனங்களின் மீது ரூ. 81,000 வரை ( AWD வேரியன்ட்கள் மீது 1 லட்சம் ) விலையில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இந்த SUVயை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த டஸ்டர் வாகனங்களின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2.மாருதி சுசுகி எஸ் க்ராஸ்
அறிமுகமான நாள் முதலே ஹயுண்டாய் க்ரேடா மற்றும் போர்ட் ஈகோஸ்போர்ட் ஆகிய கார்களிடம் இருந்து கடும் சவாலை சந்தித்த வண்ணமே தொடர்ந்து பயணித்து வந்திருக்கிறது இந்த எஸ் க்ராஸ் கார்கள் . இப்போது இந்த இந்தோ - ஜப்பான் கார் தயாரிப்பாளர்கள், தேர்ந்தெடுக்கப்படும் வேரியன்ட் மற்றும் டீலர்ஷிப் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளைப் பொறுத்து ரூ. 90,000 முதல் ரூ. 1.5 லட்சங்கள் வரை விலையில் தள்ளுபடி செய்துள்ளது.
3.டாடா சபாரி ஸ்டார்ம்
டாடா சபாரி வாகனங்கள் பெருமளவு மேம்படுத்தப்பட்டு இப்போது கூடுதல் சக்தியுடன் கூடிய என்ஜின் பொருத்தப்பட்டு வெளியாகி உள்ளது . அனைவரின் பார்வையும் இந்த புதிய டாடா சபாரி பக்கம் திரும்பி உள்ள நிலையில் ரூ. 1.4 லட்சங்கள் வரை விலையில் தள்ளுபடி செய்யப்படுவதாக டாடா அறிவித்துள்ளது. ஆனால் இந்த விலை மீதான சலுகை, சற்று குறைவான சக்தி கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட வேரியன்ட்கள் மீது மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கதக்கது. ஆகவே இஞ்சின் சக்தியில் லேசாக நீங்கள் சமரசம் செய்து கொள்ள தயார் என்றால் ஒரு புதிய சபாரி SUV வாகனந்தை நீங்கள் சொந்தமாக்கி கொள்ள இதுவே சரியான சந்தர்ப்பமாகும்.
4.ரெனால்ட் லாட்ஜி
இந்த பிரெஞ்சு நாட்டு கார் தயாரிப்பாளர்கள் , தங்களது லாட்ஜி வாகனங்கள் மீது ரூ. 1 லட்சம் வரை விலை குறைப்பு செய்துள்ளனர். தனது பிரிவில் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வரும் இந்த வாகனங்களின் விற்பனையை எப்படியாவது உயர்த்த வேண்டும் என்பதற்காகவே இந்த விலை சலுகையை ரெனால்ட் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
5.நிஸ்ஸான் டெரானோ
நிஸ்ஸான் நிறுவனத்தின் SUV வாகனமான டேரானோ தனது எழில் மிகு தோற்றத்தாலும் , ஸ்திரத்தன்மையாலும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இப்போது இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள் தனது டெரானோ SUV வாகனங்கள் மீது ரூ. 1.2 லட்சம் வரை விலை குறைப்பு செய்துள்ளது. மொத்தமாக ஒரு பேக்கேஜ் ஆக பார்க்கையில் , தனது போட்டியாளர்களை புதிய உத்வேகத்துடன் சந்திக்க தயாராக இருக்கிறது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful