2024 -ம் ஆண்டில் கார்த்தேக்கோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 ரீல்கள்
published on டிசம்ப ர் 31, 2024 09:36 pm by shreyash
- 68 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாப் 10 பட்டியலில் 2024 டிசையர் மற்றும் XUV 3XO போன்ற சில பிரபலமான மாடல்களின் ரீல்கள் மற்றும் கார் ஸ்கிராப்பேஜ் மற்றும் பல வீடியோக்கள் உள்ளன.
மேலும் பல புதிய கார் அறிமுகங்களுடன் 2024 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு 2024 மாருதி டிசையர் மற்றும் டாடா கர்வ்வ் ஆகியவற்றோடு ஸ்கிராப்பேஜ் கொள்கை மற்றும் ஹைப்ரிட் கார்களுக்கான மாசு சோதனை போன்ற விஷயங்களும் இணையத்தில் அதிகம் பேசப்பட்டவையாக இருந்தன. அப்படி கார்கள் தொடர்பாக எங்களது கார்தேக்கோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2024 ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 ரீல்களின் பட்டியல் இதோ.
பழைய காரை ஸ்கிராப் செய்வதால் கிடைக்கும் பலன்கள்
பார்வைகள்: 20.8 மில்லியனுக்கும் அதிகம்
2024 ஆம் ஆண்டில் கார்தேக்கோ -வின் இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்ட ரீல் ஒரு பழைய காரை ஸ்கிராப்பிங் செய்வது தொடர்பானது ஆகும். பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 -க்கு எங்கள் வருகையின் போது ஒரு முழுவதுமாக ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனம் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். ஒரு மிகப்பெரிய கார் எப்படி ஒரு சிறிய அளவில் சுருங்கியது என்பதை இந்த வீடியோவில் பதிவு செய்திருந்தோம். மேலும் புதிய காரை வாங்குவதற்கு முன், பழைய காரை ஸ்கிராப் செய்தால் கிடைக்கும் பல்வேறு நன்மைகளையும் ரீலில் விளக்கியிருந்தோம்.
MPV -கள் மற்றும் அவற்றின் இன்ஜின்கள் பற்றிய வேடிக்கையான கருத்து
பார்வைகள்: 5.2 மில்லியனுக்கும் அதிகம்
பயணத்தின்போது மக்களைக் கொண்டு செல்லும் போது MPV -கள் தாங்கும் அழுத்தத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ரீலை நாங்கள் உருவாக்கியிருந்தோம். அதற்காக மலிவு விலையில் கிடைக்கும் ரெனால்ட் ட்ரைபர் முதல் இந்தியாவின் பிரபலமான மாடலான டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா வரையிலான பல்வேறு பிராண்டுகளிலிருந்து MPV -களை நாங்கள் காட்சிப்படுத்தினோம். 1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் இன்ஜின் ஏழு பேருடன் முழுமையாக ஏற்றப்பட்ட MPV -யை இழுக்க எவ்வளவு வேலை செய்கிறது என்பதை இந்த ரீல் காட்டியது. இன்னோவா கிரிஸ்டா -வில் உள்ள பெரிய 2.4-லிட்டர் டீசல் இன்ஜின் அந்த வேலையை எவ்வளவு சிரமமின்றி செய்கிறது என்பதை காட்டியிருந்தோம்.
மேலும் பார்க்க: 2024 ஆம் ஆண்டில் கார்தேக்கோ யூடியூப் சேனலில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் இங்கே
2024 மாருதி டிசையர் பூட் ஸ்பேஸ்
பார்வைகள்: 4.7 மில்லியனுக்கும் அதிகம்
2024 மாருதி டிசையரின் பூட் ஸ்பேஸ் அனைத்து வகையான பைகள் மற்றும் சூட்கேஸ்களை வைக்கும் அளவுக்கு இருக்குமா என்பதை நிஜ உலக சூழ்நிலையில் சோதித்தோம். 382 லிட்டர் கொள்ளளவு கொண்ட நடுத்தர அளவிலான டிராலி பேக்குகளை ஏற்றி அதன் மேல் சிறிய பைகளை அடுக்கி வைத்தோம். டிசையர் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருந்தாலும் அனைத்து பைகளுக்கும் பூட் ஏற்றதாக இருந்தது என்பதை இந்த ரீலில் காட்டியிருந்தோம். நாம் அதன் எல்லையை அடைந்துவிட்டோம் என்று நினைக்கும் போதே டிசையர் எங்களை ஆச்சரியப்படுத்தியது!.
பணக்காரர்கள் உண்மையில் எப்படி பேசிக்கொள்வார்கள்
பார்வைகள்: 4.2 மில்லியனுக்கும் மேல்
இந்த ரீல் 'பணக்காரர்கள்' என்ற பதம் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை வேடிக்கையாக எடுத்துக் காட்டியது. இது 3 நண்பர்கள் அரட்டை அடிப்பதைக் காட்டுகிறது, அவர்களில் ஒருவர் பணக்காரர் அவர் மற்ற இருவரால் 'பணக்காரன்' என்று அழைக்கப்பட்ட பிறகு அவர் வெளிப்படையாக எரிச்சலடைகிறார் மற்றும் வணிகர்களின் போராட்டங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான இழப்புகளைப் பற்றி பேசத் தொடங்குகிறார். அங்கே கதையில் ஒரு திருப்பம் , இழப்புகளை பற்றி பேசினாலும் கூட மறுபக்கம் அவரிடம் இருக்கும் சுமார் ரூ. 3.5 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) மதிப்புடைய மெர்சிடிஸ் AMG GT 63 S E பெர்ஃபாமன்ஸ் கார் காட்டப்படுகிறது. பெரும் செல்வந்தர்கள் 'பணக்காரர்கள்' எனக் குறியிடப்படும்போது அவர்களின் சிக்கலான பெரும்பாலும் முரண்பாடான உணர்வுகளை ரீல் மிகச்சரியாகப் படம் பிடித்து காட்டியிருந்தது.
ஹூண்டாய் ஸ்டாரியா -வின் சீட்டிங் கெபாசிட்டி
பார்வைகள்: 3.9 மில்லியனுக்கும் மேல்
2024 பாங்காக் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் (BIMS) எங்கள் குழு கலந்து கொண்டது. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட பெரிய ஹூண்டாய் ஸ்டாரியா MPV -யில் எத்தனை பெரியவர்கள் வசதியாக அமர முடியும் என்பதையும் கூர்ந்து கவனிக்க வைத்தது. அதன் தனிச்சிறப்பு விஷயங்களில் ஒன்று 11 பேர் வரை இடமளிக்கும் திறன் ஆகும். மூன்று வரிசைகள் ஒவ்வொன்றும் மூன்று இருக்கைகள் மற்றும் மூன்றாவது வரிசையில் கேப்டன் நாற்காலிகள் உள்ளன. மூன்று இருக்கை அமைப்பு கொண்ட நடு வரிசையில் உள்ள பயணிகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஃபோர்ஸ் அர்பேனியா
பார்வைகள்: 3.9 மில்லியனுக்கு மேல்
இந்த ரீலில் இந்தியாவில் தனியார் வாகனமாக பயன்படுத்தும் வகையிலான மினி பஸ், ஃபோர்ஸ் அர்பானியா பற்றி பேசினோம். அர்பேனியாவின் எக்ஸ்ட்டீரியர் மற்றும் உட்புற ஹைலைட்ஸ் -களில் ரீல் கவனம் செலுத்துகிறது. ரீலில் இந்த காரின் விசாலமான கேபினை காட்டுகிறது. வணிக வாகனமாக பதிவு செய்யும்போது அர்பேனியா 13 இருக்கைகள் கொண்ட மினிபஸ் ஆக இருந்தது. ஆனால் தனியார் பதிவுடன், 10 இருக்கைகள் கொண்ட அமைப்புடன் இப்போது வருகிறது. ரூ. 30-35 லட்சம் விலை வரம்பில் பல பிரீமியம் MPV -கள் மற்றும் முழு அளவிலான எஸ்யூவி -கள் அடங்கிய வரம்பில் அர்பேனியா மிகவும் விசாலமான தேர்வாக இருக்கும்.
லேண்ட் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் இடையே உள்ள வேறுபாடு
பார்வைகள்: 3.3 மில்லியனுக்கு மேல்
மக்கள் பெரும்பாலும் லேண்ட் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஆகிய இரண்டு நிறுவனங்களை குழப்பிக் கொள்கிறார்கள். குறிப்பாக ரேஞ்ச் ரோவர் பேட்ஜின் கீழ் பல மாடல்கள் கிடைக்கின்றன. ரீலில் இரண்டு பெயர்களும் உண்மையில் எப்படி வேறுபடுகின்றன என்பதைப் பற்றி தெளிவாக விளக்க முயற்சித்தோம்.
ஹைப்ரிட் கார்களுக்கான மாசு சோதனை
பார்வைகள்: 3.1 மில்லியனுக்கும் மேல்
ஸ்ட்ராங்-ஹைபிரிட் மாடல்களுக்கான PUC சரிபார்ப்பை பெறுவது தந்திரமானதாக இருக்கலாம். ஏனெனில் ஹைபிரிட் கார்கள் பேட்டரி சக்தியிலேயே ஸ்டார்ட் ஆகும். சோதனைக்கு இன்ஜின் இயங்குவதை உறுதி செய்ய நீங்கள் வாகனத்தை மெயின்டனன்ஸ் மோடுக்கு மாற்ற வேண்டும். எலக்ட்ரிக் காருக்கான சான்றிதழை பெற உதவும் சரியான செயல்முறையை இந்த ரீல் விளக்குகிறது.
லோட்டஸ் எலெட்ரே காரின் லிடார் சென்சார்கள்
பார்வைகள்: 3.1 மில்லியனுக்கு மேல்
லோட்டஸ் எலெட்ரே பிரிட்டிஷ் வாகன உற்பத்தியாளரான லோட்டஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்த முதல் தயாரிப்பு ஆகும். இது மிகவும் மிரட்டலான மற்றும் நேர்த்தியான தோற்றத்தை கொண்டுள்ளது. எலெட்டரில் நான்கு லிடார் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவற்றால் சாலையில் உள்ள பொருட்களை 800 மீட்டர் வரை ஸ்கேன் செய்ய முடியும். ஸ்கேன் செய்யப்பட்ட படங்கள் அதன் 15.1 இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீனில் காட்டப்படும். நீங்கள் லோட்டஸ் எஸ்யூவி -யை ஃபாக் அல்லது மழையிலோ ஓட்டினாலும் எல்லாம் லிடார் ஸ்கேனர்கள் மூலம் காட்டப்படுவதால் சாலையின் தோற்றம் மிகத் தெளிவாக இருக்கும்.
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட டாடா கர்வ்
பார்வைகள்: 3 மில்லியனுக்கும் அதிகம்
கடைசியாக பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 நிகழ்வில் டாடா கர்வ்வ் காட்சிக்கு வைக்கப்பட்ட ரீல் 3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றது. அந்த நேரத்தில் கர்வ் ஆனது அதன் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு தயாரிப்புக்கு தயாரான நிலையில் இருந்தது. ரீல் எஸ்யூவி-கூபேயின் எக்ஸ்ட்டீரியர் விஷயங்களை காட்டுகிறது. இது முதல் பார்வையில் டாடா நெக்ஸான் போலவே இருந்தது.
எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு எந்த ரீல்களை பார்க்க விரும்புகிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் உங்களுக்குப் பிடித்தவற்றைப் பகிரவும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.