இந்தியாவில் இரு புதிய ATV-களை சுசுகி அறிமுகம் செய்கிறது
published on டிசம்பர் 08, 2015 02:39 pm by sumit
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சுசுகி நிறுவனம் மூலம் எல்லா நிலப்பகுதிகளுக்கும் ஏற்ற இரு வாகனங்கள் (ATV – ஆல் டிர்ட்ரெயின் வெஹிக்கிள்) கடந்த சனிக்கிழமையன்று, நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. புனேவில் நடந்த இந்தியா சூப்பர்பைக் திருவிழாவில் இந்த அறிமுகங்கள் நடைபெற்றன. இதில் 250cc மற்றும் 400cc கொண்ட பைக்குகள் முறையே ரூ.5.45 லட்சம் மற்றும் 8.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்று நிர்ணயிக்கப்பட்டதாக, அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஒன்றான ஒசார்க் 250 ATV-யை குதுகலம் மற்றும் ஓய்வு நேர களிப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், குவாட்ஸ்போர்ட் Z400-யை அதிக ஸ்போர்ட்டி தன்மை கொண்ட வாகனமாக விளங்கி, ஓட்டுநருக்கு கூடுதல் முடுக்குவிசையை அளிக்கிறது. இதை தவிர, இதில் அதிக வலுவான மற்றும் ஸ்போர்ட்டி சேசிஸ் கொண்டு, கரடுமுரடான பாதைகளில் அதிக செயல்திறனை காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மும்பை, டெல்லி, புனே, ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களில் உள்ள டீலர்களின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த ATV-களை சுசுகி விற்பனை செய்ய உள்ளது. அதன்பிறகு சந்தையில் கிடைக்கும் வரவேற்பிற்கு ஏற்ப, மற்ற நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படலாம். ஆனால் இந்த வாகனத்தின் விலை தொடர்பாக ஏற்படும் நெருடல் காரணமாக, இதன் பயன்பாடு வரையறுக்கப்பட்ட நிலைக்குள் அடங்கிவிட வாய்ப்புள்ளது. இந்த ATV-களை ஓட்டுவதில் உள்ள குதூகலம் காரணமாக, சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை இவை பிடிக்கும் நிலையில், இதன் அறிமுகம் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நிகழலாம். சமீபத்தில் ஹரியானாவில் தனது 3வது ‘எக்ஸ்பிரியன்ஸ் சோன்’-னை, போலார்ஸ் இந்தியா திறந்த போது, ஆர்வம் வளர்ந்து வருவதை காண முடிந்தது. அதிலும் குறிப்பாக இளைஞர்களிடையே அதிகமாக காண முடிந்தது.
இது குறித்து சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மாசாயோஷி இடோ கூறுகையில், “எங்களின் தயாரிப்பு வரிசையை இந்தியாவில் விரிவாக்கம் செய்யும் இலக்கத்தோடு, பல்வேறு பிரிவுகளில் எங்களின் நிபுணத்துவத்தை காட்டும் வகையில், சந்தையில் எங்களின் பிரபலமான இரண்டு ATV மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார். இந்தியாவில் நடைபெறவுள்ள எதிர்கால அறிமுகங்களுக்கு வழிவகுக்கும் வகையில், வளர்ந்து வரும் இந்த சந்தையில் ஒரு நிலையான கால்தடத்தை பதிக்க இந்நிறுவனம் உத்தேசித்துள்ளது, என்று அவர் மேலும் கூறினார்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful