ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் நட்சத்திரங்களாக கவர்ந்திழுக்கும் தயாரிப்புகள்!

published on பிப்ரவரி 11, 2016 10:24 am by saad

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Attractive Cars Auto Expo

ஆட்டோ எக்ஸ்போவின் 13வது பதிப்பு, இந்தியாவின் மிகப்பெரிய வாகன கண்காட்சியாக நடந்து வருகிறது. இங்குள்ள விரிவான மற்றும் சிறப்பான வாகனங்களை காண வரும் மக்களை, அந்த இடத்தை விட்டு அசையவிடாமல், அதன் தொழிற்நுட்ப ரீதியான செயல்திறனை காண செய்ய, உலகமெங்கும் இருந்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த மின்னி ஜொலிக்கும் வாகனங்கள் அனைத்திற்கும் இடையே, தங்களின் ஸ்டைலான தோற்றம், பிராண்டு பெருமை மற்றும் அவை நுழைய உள்ள பிரிவு போன்ற சில முக்கிய காரணங்களால், மக்கள் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் கார்களும் இடம்பெற்றுள்ளன. எனவே 2016 ஆட்டோ எக்ஸ்போவில் பார்வையாளர்களை முக்கியமாக கவர்ந்திழுக்கும் கார்களின் ஒரு பட்டியலை நாங்கள் அமைத்துள்ளோம். அதை கீழே காண்போம்.

மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா

மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸாவின் முதல் டீஸர் வெளியான முதல் நாளே, அதற்கென ஒரு கூட்டம் ரசிகர்களை அது சம்பாதித்துக் கொண்டது. இதற்கான காரணம் என்ன தெரியுமா? இது, நம் நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரிடம் இருந்து வெளிவரும் முதல் கச்சிதமான SUV ஆகும். இரண்டாவதாக, ஃபோர்டு ஈகோஸ்போர்ட், TUV300 மற்றும் பல வாகனங்களால் நிரம்பியுள்ள நம் நாட்டின் மிகவும் பிரபலமான பிரிவிற்குள் இது நுழைகிறது. மாருதியிடம் இருந்து வரும் இந்த புதிய விட்டாரா ப்ரீஸ்ஸா, மேற்கூறிய வாகனங்களின் வளரும் பிரபலத்தை நோக்கி, அதை பெற மட்டுமே திட்டமிட்டுள்ளது.

இந்த வாகனம் கச்சிதமானது என்பதை தவிர, நாம் எதிர்பார்க்கும் தடித்த தன்மை மற்றும் ஸ்டைல் தன்மை ஆகியவற்றில் எந்த குறையும் இல்லாமல் காட்சி அளிக்கிறது. இந்த காரில், ஃபியட்டிடம் பெறப்பட்ட 1.3 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டு, 90PS மற்றும் 200Nm முடுக்குவிசையை வெளியிட்டு, 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பொருத்தப்பட்டதாக மட்டுமே கிடைக்கிறது. இந்த வாகனம், 2016 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர்

இந்த பிரான்ஸ் நாட்டு வாகனத் தயாரிப்பாளரின் வருங்காலத்தையே இந்த கார் மாற்றியமைத்ததா என்ற ஒரு சிறியளவிலான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு கச்சிதமான SUV பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட புதுமையான காரான இதற்கு, இந்த காலத்தில் ஒரு பெரியளவிலான மேம்பாட்டின் அவசியம் தேவைப்பட்டது. இந்நிலையில் இந்த காரின் ஆற்றல்வளத்தை வெளிகாட்ட இந்த மிகப்பெரிய கண்காட்சியை விட வேறெதுவும் சிறப்பான மேடையாக அமையாது. நம் நாட்டின் இளைஞர்களுக்கு இடையே ஒரு பிரபலமான காராக உள்ள நிலையில், ஊடகத்துறை மற்றும் பொது மக்களின் கண்களை கவர ரெனால்ட் டஸ்டர் தவறவில்லை.

புதிய டஸ்டரில் AMT மெக்கானிசத்தின் சேர்ப்பு மற்றும் பல்வேறு அழகியல் மேம்பாடுகள் ஆகியவை முக்கிய மாற்றங்களாக செய்யப்பட்டுள்ளதால், ஹூண்டாய் க்ரேடாவிற்கு நேராக வளர்ந்து வரும் ஈர்ப்பை சமாளிக்க, இது நிச்சயம் உதவிகரமாக இருக்கும். என்ஜின்களை பொறுத்த வரை, 2016 டஸ்டரில் எந்த மாற்றமுமின்றி அப்படியே தொடரும். விலை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஹோண்டா BR-V

இந்தியாவில் நீண்ட காத்திருப்பிற்கு உள்ளான வாகனங்களில் ஒன்றாக இந்த வாகனம், ஜப்பான் நாட்டு வாகன தயாரிப்பாளர் அளிக்கும் ஒரு அறிமுக SUV ஆகும். ஏற்கனவே தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய சந்தைகளில் குடியேறிவிட்ட இந்த காரில், டஸ்டர் மற்றும் க்ரேடா உள்ளிட்ட கச்சிதமான SUV-க்களை சிறுமைப்படுத்தும் கவர்ச்சி காணப்படுவதால், இந்தியாவில் அறிமுகம் செய்வது இன்றியமையாததாகி உள்ளது. ஹோண்டா பிரியோவின் பிளாட்பாமை கொண்ட ஹோண்டா BRV, அதற்கான வடிவமைப்பு கூறுகளை மொபிலியோ MPV-விடம் இருந்து பெற்றுள்ளது.

மேற்கூறிய போட்டியிடும் தயாரிப்புகளை மேற்கொள்ளும் வகையில், கார் தயாரிப்பாளரின் மூலம் இந்த காரின் 5 மற்றும் 7 சீட்களை கொண்ட பதிப்புகள் வெளியிடப்படுகிறது. இதன் ஆற்றலகங்களை குறித்து பார்க்கும் போது, முந்தைய 1.5-லிட்டர் i-VTEC மற்றும் 1.5 லிட்டர் i-DTEC மில் ஆகியவை முறையே பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு வகை என்ஜின்களாக அளிக்கப்படுகிறது. இந்த குடும்பத்தை சேர்ந்த மற்ற கார்களில் மேற்கண்ட என்ஜின்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதால், BR-V-விலும் இவை சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தின் இறுதியில், இதன் அறிமுகம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இனோவா கிரைஸ்ட்டா

ஜப்பானியர்களை பார்த்தால் பழைய தத்துவத்திலேயே தொடர்ந்து செயல்படுவதாக தெரிகிறது. எடுத்துக்காட்டு: தெற்கு ஆசிய சந்தைகளில் முதலில் அறிமுகம் செய்துவிட்டு, அதன்பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்தல். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த டொயோட்டா இனோவா கார், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய இவ்விரு சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அதற்கு பெயரில் மாற்றம் செய்யப்பட்டு இனோவா கிரைஸ்ட்டா என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த கார், இந்தியாவில் உள்ள பெரிய குடும்பங்களுக்கு இடையே அதிகம் விரும்பப்படுவதும், வீடுகளில் இடம்பெறுவதுமாக காராகவும் இதுவரை இருந்துள்ளது. ஆனால் காலம் செல்ல செல்ல எல்லா கார்களுக்கும் ஒரு மேம்பாடு தேவைப்படும் நிலையில், இதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு வெளியாகி அதன் மீது தங்களின் கைகளை வைக்க மக்கள் காத்திருக்கின்றனர். இந்த புதிய இனோவாவில், புதிய சர்வதேச அளவிலான கட்டிடக்கலை பிளாட்பாம் (கிளோபல் ஆர்ச்சிடெக்சர் பிளாட்பாம்), நவீன வெளிப்புற ஸ்டைலிங் மற்றும் புதிய ஆடம்பர / கேட்ஜெட் பொருட்களால் நிரம்பிய உள்புற அமைப்பியல் ஆகியவற்றை கொண்டு ஒரு பலமான தயாரிப்பாக திரும்பி வந்துள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சங்களை திரளாக கொண்ட ஒரு புதிய 2.4 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டுள்ளது.

ஃபோர்டு முஸ்டாங்

பெருமையுடன் நிற்கும் இந்த அற்புதமான காரை காணும் மக்களுக்கு, இந்த நாள் ஒரு நினைவில் நிற்கும் நாளாக இருக்கும். இந்த குதிரை வண்டி போன்ற கார், ஆட்டோ எக்ஸ்போவில் உள்ள ஃபோர்டின் அறையில் கவர்ந்திழுக்கும் தயாரிப்பாக உள்ளது. எல்லாராலும் செய்யக் கூடிய அவ்வளவு எளிதான பணி என்று கூற முடியாதபடி, ஜெர்மன் போட்டியாளர்களுடன் நேருக்கு நேராக போட்டியிடும் வகையில், ஃபோர்டு முஸ்டாங் காருக்கு அவ்வப்போது மேம்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பான தோற்றத்தை பெற்றுள்ள இந்த கார், கடைசியாக இந்திய கடற்கரையை எட்டியுள்ளது.

மான்ஸ்ட்டர் என்ஜினை தன்னுள்ளே கொண்ட உயர்தர GT டிரிம் கார், இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த 5.0 லிட்டர் Ti-VCT V8 மூலம் 435PS மற்றும் அதிகபட்ச முடுக்குவிசையான 542Nm-யையும் அளிக்கிறது. இந்த காரை இயக்க, இது போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு செலக்ட்-ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு, இதன் பெடல் ஷிஃப்டர்களை தேர்விற்குரியதாகவும் அளிக்கிறது. பாஸ்ட்பேக் மற்றும் கன்வெர்ட்பிள் என்ற இருவேறு பதிப்புகளோடு இந்த கார் கிடைக்கிறது.

சாங்யாங் டிவோலி

நம் நாட்டின் மிகப்பெரிய SUV தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், இப்பிரிவில் தொடர்ந்து தனது ஆளுமையை செலுத்துவதில் தவறிவிடாமல் இருக்க மிக கவனமாக செயல்படுகிறது. கச்சிதமான SUV அரங்கில் TUV300-யை அறிமுகம் செய்த பிறகு, அந்த வாகனத் தயாரிப்பாளரிடம் இருந்து அடுத்தபடியாக வரும் இது, கொரியன் முத்திரையை கொண்டதாக வருகிறது.

ஏற்கனவே வெளிநாட்டு சந்தைகளில் சாங்யாங் டிவோலி விற்பனையாகி வருவதை கண்ட இந்நிறுவனம், இதை இந்தியாவிற்கு கொண்டு வரும் எண்ணம் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதன்மூலம் மற்ற கொரியன் (ஹூண்டாய் க்ரேடா) மற்றும் பிரான்சு (ரெனால்ட் டஸ்டர்) ஆகியோருடன் தாங்களும் பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது. எக்ஸ்போவில் கவர்ந்திழுக்கும் தயாரிப்புகளில் ஒன்றாக விளங்கும் சாங்யாங் டிவோலியின் நிலையை வைத்து பார்த்தால், இந்த சிந்தனை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சரியானதாக தான் தெரிகிறது. சர்வதேச அளவில், இந்த SUV-யை e-XGi 160 என்ஜின் இயக்கி, அதன்மூலம் 120PS ஆற்றலையும், 157Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. மேலும் இது TUV300-யில் உள்ள 1.5 டீசல் மில்லையும் பகிர்ந்து கொள்ளக் கூடும் என்று தெரிகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience