• English
  • Login / Register

2015 ஆண்டில் OEM தயாரிப்பாளர்கள் அறிமுகப்படுத்திய ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்கள் – ஒரு கண்ணோட்டம்

published on டிசம்பர் 29, 2015 09:39 am by raunak

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2015 –ஆம் ஆண்டு, இந்திய வாகன துறையின் வரலாற்றில் முக்கிய ஆண்டாக நினைவு கூறப்படும், ஏனெனில், இந்த வருடத்தில் ஏராளமான வாகனங்கள் ஸ்டாண்டர்ட் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் மற்றும் ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டு வெளிவந்தன.

பெரும்பாலான இந்திய மக்கள் மத்தியில், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கண்ணோட்டத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, பாதுகாப்பு அம்சங்களை ஆடம்பர அம்சங்களாக கருதும் மக்களின் மனப்போக்கு மாறிவிட்டது. இத்தகைய மாற்றம் மிகவும் உண்மை என்பதை, சமீபத்தில் வெளிவந்துள்ள கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் பேக்குகள் மற்றும் ABS அமைப்பு ஆகியவை, தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டி நிரூபிக்கின்றன. உண்மையில், வாடிக்கையாளர்கள் விரும்பாதத்தை எப்போதுமே தயாரிப்பாளர்கள் கொடுக்க முன்வருவதில்லை. முக்கியமாக, இந்தியா போன்ற நாடுகளில் இதுதான் நடைமுறை. எனவே, மக்களின் மனதில் வந்துள்ள, ஊக்குவிக்கப் படவேண்டிய இந்த மாற்றம் நிச்சயமாக உண்மை. 2014 –ஆம் ஆண்டில், முதல் முறையாக வோக்ஸ்வேகன் மற்றும் டொயோடா நிறுவனங்கள், தங்களது கார்களில் பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்ட் ஆக்கினர். அதற்குப் பின்னர், 2015 –ஆம் ஆண்டில் ஏராளமான வாகன தயாரிப்பாளர்கள் இந்த இரு நிறுவனங்களின் கொள்கையைப் பின்பற்றின. இதில் முக்கியமாக, இந்தியாவின் மிகப் பெரிய வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகியை குறிப்பிட்ட வேண்டும். இந்தியாவின் மிகப் பெரிய வாகன சந்தையில், எந்தெந்த கார் தயாரிப்பாளர்கள் இந்த வருடத்தில் தங்களது தயாரிப்புகளில் ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தினர் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மாருதி சுசுகி

மாருதியின் ஸ்விஃப்ட் காரின் செயல்திறன் மோசமாக விமர்சிக்கப்பட்டாலும், பாதுகாப்புக்கான க்ராஷ் பரிசோதனையில், இந்த கார் தேரிவிட்டது என்பது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். மாருதியின் நெக்ஸா பிரிவில் வந்த அனைத்து புதிய கார்களிலும் ஏர் பேக்குகள் மற்றும் ABS அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது. நெக்ஸா டீலர்ஷிப் மூலம் வெளியான முதல் மாடலான S க்ராஸ் காரில், ஸ்டாண்டர்ட் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் மற்றும் ABS பொருத்தப்பட்டு வந்தது. பலீனோவிலும் இதே கதை தொடர்ந்தது. இது தவிர, தற்போது சந்தையில் உள்ள மாடல்களான ஸ்விஃப்ட், ஸ்விஃப்ட் டிசயர், சேலெரியோ மற்றும் அனைத்து கார்களுக்கும், அவற்றின் அடிப்படை வேரியண்ட்டில் இருந்து ஆரம்பித்து அனைத்து வேரியண்ட்களிலும், சேஃப்டி பேக் என்னும் திட்டத்தின் மூலம், டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் மற்றும் ABS அமைப்பை இந்த வாகன தயாரிப்பாளர் ஆப்ஷனலாகத் தருகிறார்.

ஃபோர்ட் இந்தியா

2015 –ஆம் வருடத்தில், ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது அனைத்து வாகனங்களையும் சீரமைத்துள்ளது. அவற்றில் முக்கியமாக புதிய பிகோ மற்றும் பிகோ ஆஸ்பயர் பற்றி குறிப்பிட வேண்டும். ஏனெனில், இந்த அமெரிக்க தயாரிப்பாளர் இவ்விரு மாடல்களின் பாதுகாப்பு அம்சங்களில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார். புதிய பிகோ சந்தைக்கு வருவதற்கு முன்பாகவே ஆஸ்பயர் அறிமுகப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அம்சங்களான டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டாக பிகோவில் பொருத்தப்பட்டு வந்தன. அவற்றின் உயர்தர வேரியண்ட்டில், இந்த பிரிவிலேயே முதல் முறையாக 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டு வந்தன. ஃபோர்ட் நிறுவனம், இதே போன்ற அம்சங்களை பிகோ காரிலும் பொருத்தி அறிமுகப்படுத்தியது. ஆனால், பிகோவின் அடிப்படை வேரியண்ட்டில் ஓட்டுனருக்கு மட்டும் ஏர் பேக் ஸ்டாண்டர்டாக இணைக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் இரண்டாம் வேரியண்ட்டில் ஆரம்பித்து அனைத்து வேரியண்ட்களிலும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆஸ்பயரைப் போலவே, பிகோவின் உயர்தர டிரிம்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த, 6 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டிருந்தது. ஃபோர்ட் பிகோ மற்றும் ஆஸ்பயர் கார்களின் ஆட்டோமேடிக் பெட்ரோல் வகைகளில் டூயல் கிளட்ச் பொருத்தப்பட்டு, எலெக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் மற்றும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

மஹிந்த்ரா & மஹிந்த்ரா

இந்தியாவின் மிகப் பெரிய பயன்பாட்டு வாகனங்கள் தயாரிக்கும் M&M நிறுவனமும், தனது தயாரிப்புகளின் அடிப்படை மாடல்களில் இருந்து அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்த ஆரம்பித்தது. இத்தகைய மாற்றம் பிரபலமான TUV 300 காரின் அறிமுகத்தின் போது நடந்தது. ஏனெனில், இந்த காரின் அடிப்படை வேரியண்ட்டில் இருந்து அனைத்து வேரியண்ட்களிலும், ஏர் பேக்குகள் மற்றும் ABS அமைப்பு ஆப்ஷனலாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், அடுத்து வெளிவரவுள்ள, மிகவும் எதிர்பார்க்கப்படும் மைக்ரோ SUV காரான KUV 100 (S101 என்ற புனைப் பெயர் கொண்டது) காரில் ஸ்டாண்டர்டாக ABS (ஆண்டி-லாக் ப்ரேக்கிங் சிஸ்டம்) பொருத்தப்பட்டு வருகிறது. டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள், அடிப்படை டிரிம்மில் இருந்து அனைத்து விதங்களுக்கும் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

அடுத்த வருடத்தில், மேற்சொன்ன பாதுகாப்பு அம்சங்களை விட பல மடங்கு உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை நாம் எதிர்பாக்கலாம். ஏனெனில், முன்பேப்போதும் இல்லாத அளவிற்கு, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இந்திய வாடிக்கையாளர்களின் மத்தியில் தற்போது நிலவுகிறது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience