மார்க்கெட்டிங் லாயல்டி மற்றும் என்கேஜ்மெண்ட் விருதுகளில், ஷெல் லூப்ரிகன்ட்ஸின் நிகழ்ச்சிக்கு கோல்ட் அவார்டு கிடைத்தது

published on செப் 21, 2015 09:40 am by konark

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மும்பை: ஷெல் லூப்ரிகன்ட்ஸின் மெக்கானிக் லாயல்டி நிகழ்ச்சியான ‘ஷெல் மெக்கானிக் சம்ரித்தி’யின் ஆண் பார்வையாளர்களுக்கான பிரிவின் சிறந்த என்கேஜ்மெண்ட் திட்டத்திற்கு, ஆசியா பசிபிக் 2015 மார்க்கெட்டிங் லாயல்டி மற்றும் என்கேஜ்மெண்ட் விருதுகளின் மூன்றாவது பதிப்பின், கோல்ட் அவார்டு கிடைத்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி, சிங்கப்பூரில் உள்ள சங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த வெற்றியை குறித்து ஷெல் லூப்ரிகன்ட்ஸ் இந்தியாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி மான்சி மதன் திருப்பதி கூறுகையில், “ஷெல் லூப்ரிகன்ட்ஸில் எங்களுக்கு, இது ஒரு அற்புதமான ஆண்டாகும். மேலும் இந்த வியக்கத்தக்க அங்கீகாரம் மூலம் ஆசியா பசிபிக் நிலையில், எங்களின் முக்கிய செல்வாக்கின் மீதான அர்ப்பணிப்பிற்கு ஒரு சாட்சி கிடைத்துள்ளது. ‘ஷெல் மெக்கானிக் சம்ரிதி நிகழ்ச்சி’ என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த மற்றும் வித்தியாசமான லாயல்டி மற்றும் என்கேஜ்மெண்ட் தளம் மூலம் மெக்கானிக்களை இணைக்கும் ஒரு கருத்தாக்கம் ஆகும். எங்கள் பிராண்ட் மீதான பரிந்துரைகளை அதிகரித்தல் மற்றும் மதிப்பு மிகுந்த இணைப்புகளை இன்னும் வலுப்படுத்துதல் ஆகியவை இந்நிகழ்ச்சியின் இலக்கு ஆகும். எளிமையான மற்றும் பயன்பாட்டு வசதியுள்ள அடிப்படை 2G மொபைல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மேல்மட்ட இந்திய மெக்கானிக்கள் மூலம் தேர்வாகும் பிராண்ட்டாக இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தோடு இந்த ஒருங்கிணைந்த பிளாட்பாமை உருவாக்கி உள்ளோம். இந்த முறையில் எங்களுக்கு கிடைத்த உறவுகளை எண்ணி, பெருமை அடைகிறோம். எங்களின் தயாரிப்புகள் இன்னும் அதிக இடங்களில் சென்றடைய இலக்கு நிர்ணயித்து, ஷெல் உடன் இணைந்துள்ள மெக்கானிக்களுக்கு நன்மைகள் அளிக்க, இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு அவர்களை அழைத்து கூட்டி சேர்க்க உள்ளோம்” என்றார்.

சிறந்த லூப்ரிகன்ட்களுக்கான சர்வதேச சந்தையில் ஷெல் லூப்ரிகன்ட்ஸ் முன்னணி வகிக்கிறது. இந்த பிரிவில் முக்கிய போட்டியாளர்களாக IKEA, கேனான், சிட்டி பேங்க் ஆகிய பிராண்டுகள் இடம் பெற்றிருந்தன. ‘சிறந்த புதுமையான லாயல்டி நிகழ்ச்சி’ என்ற பிரிவை சென்றடைய, மேல்மட்டத்தை சேர்ந்த 5 இறுதி போட்டியாளர்களை ஷெல் லூப்ரிகன்ட்ஸ் சந்திக்க வேண்டி இருந்தது. மற்றவர்களில், 30,000 மெக்கானிக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், 15,800 பேர் வெகுமதிகள் மற்றும் நன்மைகள் பெற தகுதி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியை ஷெல் லூப்ரிகன்ட்ஸ் மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவை இணைந்து வடிவமைத்து, செயல்படுத்தின.

கிம்பர்லே-கிளார்க், ஆசியா பசிபிக், செக்டர் மார்க்கெட்டிக் இயக்குனர் தீப்ஷிகா கியாவாத், லூஃப்தான்சா ஜெர்மன் ஏர்லைன்ஸ், ஆசியா பசிபிக், லாயல்டி நிகழ்ச்சி மற்றும் வழங்குனர் மேலாண்மை, மார்க்கெட்டிங் தலைவர் பிராங்க் போர்னிமேன், லினோவா சிங்கப்பூர், குளோபல் என்கேஜ்மெண்ட் நிகழ்ச்சிகளின் மேலாளர், நஸியா ஹயாத் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கான மதிப்பிற்குரிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience