ஷெல் லூப்ரிகன்ட்ஸ் நடத்தும் குளோபல் லெக்சர் சீரிஸ் 2015
published on ஆகஸ்ட் 12, 2015 10:48 am by konark
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லி:தரமான லூப்ரிகன்ட்ஸ் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் ஷெல் லூப்ரிகன்ட்ஸ் தரப்பில், “வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை துறையின் வருங்கால சக்திக்கு உங்களை ஆயத்தப்படுத்துதல்” என்ற தலைப்பின் கீழ் அமைந்த சொற்பொழிவு தொடரின் நான்காம் பதிப்பு, இன்று பெங்களூர் IIM-ல் நடைபெற்றது.
முன்னதாக, ஷெல் லூப்ரிகன்ட்ஸ் உலக அளவிலான சொற்பொழிவு தொடரின் மற்ற பதிப்புகள், முறையே லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி, பீஜிங்கில் உள்ள சிங்குவா மற்றும் மெட்ராஸ் ஐஐடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இயந்திர கூட்டு முயற்சியின் (மெக்கானிக்கல் ஜாயின்ட்) முக்கியத்துவத்தை மையமாக கொண்ட இந்த பரிசோதனையின் மூலம் தவிர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு வெளியோட்டமான பதில்கள் மற்றும் உறுதியான செய்முறையை, புதிய ஆய்வு கண்டுபிடிப்புகள் மற்றும் கியர் ஆகியவற்றின் அபரிமித வளர்ச்சிக்கு ஏற்ப முறைப்படுத்துதல் ஆகியவை அறியப்பட்டன.
ஷெல் லூப்ரிகன்ட்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் நிதின் பிரசாத் கூறுகையில், “ஷெல் லூப்ரிகன்ட்ஸின் உலக அளவிலான சொற்பொழிவு தொடர், தொழில்துறை மற்றும் கல்வித்துறையை இணைக்கும் தனித்தன்மை வாய்ந்த ஒரு பாலமாக அமைகிறது. இது எங்களின் கண்டுபிடிப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை அடிப்படை தத்துவமாக கொண்ட ஒரு துவக்க நிலை ஆகும். இந்த உலகளவிலான சொற்பொழிவு தொடர் பதிப்பின் மூலம் இது ஒரு ஷெல் லூப்ரிகன்ட் இந்தியாவின் வருடாந்திர சொத்து என்பதை வெளியிட்டுள்ளோம். உலகளவிலான ஆற்றல் இயக்குத் திறன் மற்றும் எரிப்பொருளை திறம்பட கையாளும் பழக்கவழக்கங்களை தினந்தோறும் பின்பற்றுதல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பின் மீது இந்த ஆண்டு அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது. சரியான லூப்ரிகன்ட் என்பது ஒரு தொழிற்சாலையின் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் திறம்பட செயல்படுவது அல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அந்த முழு தொழிற்சாலைக்கும் திறம்பட பயன்படுவது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சிக்கு சாதகமான மறுமொழி அளித்த தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் கல்வித்துறையினரை கண்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள ஆட்டோமோட்டிவ், ஆற்றல், வளர்ச்சி, சுரங்கம் மற்றும் கூட்டி சேர்க்கும் (அசெம்பிளிங்) தொழிற்சாலை ஆகியவற்றை சேர்ந்த முக்கிய வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் மாருதி சுசுகி இந்திய லிமிடேட் உற்பத்தி மேம்பாடு துறையின் சீனியர் VP திரு.பி.பான்டா, ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு (SIAM) நிர்வாக இயக்குநர் (டெக்னிக்கல்) திரு.கே.கே.காந்தி, நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் வின்ட் எனர்ஜி (NIWE) பொது இயக்குனர் டாக்டர்.எஸ்.கோமதிநாயகம், டாடா மோட்டார்ஸ் ஹெட்-பவர் சிஸ்டம் என்ஜினியரிங் திரு.ராஜேந்திரா பிட்கர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 out of 0 found this helpful