டீசல் தடைக்கு எதிர்ப்பு வலுக்கிறது: எதிர்ப்புக் குழுவில் போஷ் நிறுவனமும் இணைந்தது
published on பிப்ரவரி 18, 2016 03:38 pm by sumit
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
டீசல் வாகனங்களை பதிவு செய்வதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்க இன்னும் தயாராக இல்லை என்பதாக, அதற்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் CEO-வின் விமர்சனத்தில், ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை பொறுத்த வரை, அவை காற்று மாசுப்படுத்திகளாக செயல்படுவதை விட, காற்று தூய்மையாக்கிகளாக தான் செயல்படுகின்றன என்று தெரிவித்திருந்தார். இந்த எதிர்ப்புக் குரல் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில், டீசல் கார்களில் பணியாற்றும் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவாக போஷ் நிறுவனமும் கருத்து வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆட்டோகார் வல்லுநரும், போஷ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் உறுப்பினருமான டாக்டர்.மார்கஸ் ஹெயின் உடன் பேசிய போது, டீசல் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களின் முக்கியத்துவம் மற்றும் சில நேரங்களில் பெட்ரோல் வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசுப்படுத்தும் துகள்களை விட, டீசல் வாகனங்களில் இருந்து 10 மடங்கு குறைவாகவே வெளியாகிறது என்ற உண்மையை அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறுகையில்,
“ஐரோப்பியாவில் இன்று, கியாஸோலைன் என்ஜின்களை விட 10 மடங்கு சிறப்பான செயல்பாட்டை அளவீடுகளில் காட்டும் வகையில் டீசல் என்ஜின்கள் ஒரு குறிப்பிட்ட ஃபில்டரை தாங்கி வருகின்றன. இது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், அது தான் உண்மை” என்றார். (அவர் குறிப்பிட்டதில் கியாஸோலைன் என்பது பெட்ரோல் என்ஜின் ஆகும்). அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் BS-VI விதிமுறைகளை கடைப்பிடிக்க வரும் 2020 ஆண்டை காலக்கெடுவாக நியமித்திருப்பது சவாலான வழி மூலம் அடைய சாத்தியமான ஒன்றாகும், என்றார். தொழிற்நுட்பத்தில் மேம்பட்ட நிறுவனமான போஷ், புதிய மாசுப்படுத்தல் விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஏதாவது பிரச்சனைகள் எப்போது எழுந்தாலும், அதற்கான தீர்வுகளை ஏற்கனவே தயாராக வைத்துள்ளது. ஆனால் டாக்டர் ஹெயின் கூறுகையில், எல்லாவற்றையும் இந்நிறுவனம் இறக்குமதி செய்வதில்லை. பெரும்பாலும் இந்தியன் டெக்னிக்கல் சென்டரையே இது சார்ந்துள்ளது, என்றார்.
2,000cc அல்லது அதற்கு அதிகமான திறன் கொண்ட டீசல் என்ஜின்களை கொண்ட வாகனங்களை, டெல்லியில் 3 மாத காலத்திற்கு விற்பனை செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடை உத்தரவிற்கு காரணமாக, பெட்ரோல் என்ஜின்களை விட டீசல் என்ஜின்களால் தான் அதிக அளவில் மாசு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே அதிக திறன் கொண்ட என்ஜின்கள் உள்ள வாகனங்களின் (பொதுவாக இவற்றின் விலையும் அதிகமாகவே இருக்கும்) மீதான இந்த தடை விதிப்பின் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான மாசுப்படுதலை கட்டுப்படுத்தலாம். இந்த தடை உத்தரவின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், மஹிந்திரா மற்றும் டாடா போன்ற பல்வேறு கார் தயாரிப்பாளர்கள், இதற்கான மாற்றுத் தேர்வுகளுக்கான பணிகளை துவங்கியுள்ளனர்.
0 out of 0 found this helpful