சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பெட்ரோல் விலை 32 காசுகள் குறைந்துள்ளது; டீசல் விலை 28 காசுகள் உயர்வு

published on பிப்ரவரி 18, 2016 03:37 pm by sumit

பெட்ரோல் வாகன உரிமையாளர்களுக்கு ஒரு நற்செய்தி , ஆனால் டீசல் கார் உரிமையாளர்களுக்கு ஒரு கெட்ட செய்தி ! இரு வாரங்களுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்து கூட்டவோ அல்லது குறைக்கவோ படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை , சமீபத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் பெட்ரோலின் விலை 32 காசுகள் குறைக்கப்பட்டும் டீசலின் விலை 28 காசுகள் உயர்த்தப்பட்டும் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு பிறகு பெட்ரோல் லிட்டருக்கு இப்போது ரூ.. 59.63 என்ற விலைக்கும் , டீசல் லிட்டருக்கு ரூ. 44.96 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தற்போதய விலை நிலவரத்தைப் பார்க்கையில் பெட்ரோலின் விலை இன்னும் அதிகமாக குறைக்கப்பட்டிருக்க வேண்டும் . அதுவும் பெட்ரோலின் விலை தொடர்ந்து 6 வது முறையாக குறைக்கப்பட்டுள்ள சூழலில் இன்னும் அதிகமான விலை குறைப்பை எதிர்பார்ப்பது நியாயமே. கடந்த மதிப்பீட்டின் முடிவில் செய்யப்பட்ட விலை மாற்றத்தின் போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை முறையே 4 மற்றும் 3 காசுகள் குறைக்கப்பட்டன. “ டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் சர்வதேச விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோலின் விலை இப்போது குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச எண்ணை சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நிலவரம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மாறிவரும் போக்குக்கு ஏற்றபடி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படும் " என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

File Photo

வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நேரம் நெருங்கி வரும் நிலையில் அரசாங்கம் இந்த பெட்ரோல் மீதான விலை குறைப்பை பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையை குறைக்க பயன்படுத்திக் கொள்ள உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ. 1 மற்றும் 1.50 என்ற அளவுக்கு அரசு உயர்த்தி அதன் மூலம் கூடுதலாக ரூ. 3,200 கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.

இருந்தாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவது ஒரு வருத்தம் தரும் விஷயம் என்பது மட்டுமல்லாமல் இதன் காரணமாகத் தான் பெட்ரோலின் விலை பெரிய அளவில் குறைக்கப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

“ டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் சர்வதேச விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே பெட்ரோலின் விலை இப்போது குறைக்கப்பட்டும் டீசலின் விலை உயர்த்தப்பட்டும் இருக்கிறது " என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க : மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.

s
வெளியிட்டவர்

sumit

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை