ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ 2016 கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
modified on நவ 25, 2015 11:17 am by cardekho
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோலாகலமாக நடக்கும் மிக பெரிய வாகனக் கண்காட்சி, இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ. இந்த வருடத்திய ஆட்டோ எக்ஸ்போ - தி மோட்டார் ஷோ 2016 –விற்கான டிக்கெட் புக்கிங் தற்போது ஆரம்பமாகிவிட்டது. www.autoexpo-themotorshow.in மற்றும் www.bookmyshow.com ஆகிய இணையதளங்களில் இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை புக் செய்யலாம்.
வார நாட்களில், (காலை 10 மணி – பிற்பகல் 1 மணி) அலுவல் நேரங்களுக்கான டிக்கெட்டின் விலை ரூ. 650; வார நாட்களில் பொது மக்களுக்கான நேரத்திற்கான டிக்கெட் விலை (பிற்பகல் 1 மணி – மாலை 6 மணி) ரூ. 300; மற்றும் வார இறுதிகளில் (காலை 10 மணி – மாலை 7 மணி) ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 400 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2016 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 –ஆம் தேதி முதல் 9 –ஆம் தேதி வரை, டெல்லி NCR –இல் உள்ள க்ரேட்டர் நொய்டாவில் இருக்கிற இந்தியா எக்ஸ்போ மார்ட் லிமிடெட் (IEML) வளாகத்தில், இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஒன்று கூடுவர். அனைவரும், புதுமையான தொழில்நுட்பங்களால் தயாரான தங்களது அடுத்த ஜெனரேஷன் வாகனங்களை பார்வையாளர்களுக்கு காட்சிக்கு வைப்பர்.
2015 டிசம்பர் 31 –ஆம் தேதிக்குள் மூன்றிலிருந்து பத்து டிக்கெட்களை முன்பதிவு செய்பவர்களுக்கு வீடு தேடி வந்து, அவர்களது டிக்கெட்கள் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும். அதற்கு பின், 2016 ஜனவரி 25 –ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்து, ஹோம் டெலிவரி ஆப்ஷனைத் தேர்வு செய்பவர்களுக்கு, ஒவ்வொரு புக்கிங்கிற்கும் ரூ. 75 வசூலிக்கப்படும். ஹோம் டெலிவரி வேண்டாம் என்பவர்கள், தங்களது டிக்கெட்களை க்ரேட்டர் நொய்டாவில் உள்ள, இந்த நிகழ்ச்சி நடக்க உள்ள இடத்தின் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் தங்களது டிக்கெட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
2016 ஜனவரி 25 –ஆம் தேதிக்குப் பின், இந்த நிகழ்ச்சி நடக்கும் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு ஹோம் டெலிவரி என்ற ஆப்ஷன் கிடையாது. மாறாக, அவர்கள் தங்களது டிக்கெட்களை க்ரேட்டர் நொய்டாவில் உள்ள, இந்த நிகழ்ச்சி நடக்க உள்ள இடத்தின் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் தங்களது டிக்கெட்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
2016 ஜனவரி 15 –ஆம் தேதி முதல் டிக்கெட் விநியோகம் ஆரம்பமாகிவிடும்.
www.bookmyshow.com மட்டுமே ஆட்டோ எக்ஸ்போ – தி மோட்டார் ஷோ 2016 நிகழ்ச்சியின் அங்கீகாரம் பெற்ற டிக்கெட் பார்ட்னர் என்ற முக்கியமான செய்தியை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள். நம்பகமற்ற முறைகளில் இருந்து வாங்கிய டிக்கெட்களுக்கு, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறுகின்றனர்.
வாரநாட்களில் அதிகாரபூர்வ அலுவல் நேரம் என்பது காலை 10 – பிற்பகல் 1 மணி வரையாகும். எனினும், அலுவல் நேர டிக்கெட்களை பெற்றவர்கள் பொது மக்களுக்கான நேரத்திலும், அதாவது மாலை 6 மணி வரை, உள்ளே வந்து கண்காட்சியைக் கண்டு ரசிக்க முடியும்
இதையும் படியுங்கள்
ஆட்டோ எக்ஸ்போ 2016 – மிகப்பெரியதாகவும், மிகச்சிறப்பானதாகவும், மிகப்பிரம்மாண்டதாகவும் இருக்கும்
2016 டொயோடா இன்னோவா இந்தோனேசியாவில் அறிமுகமானது
0 out of 0 found this helpful