• English
  • Login / Register

ஒற்றைஇரட்டை எண் முறை: பயனுள்ள நடைமுறையாக 4,000 பஸ்களை டெல்லி அரசு களமிறக்குகிறது

modified on டிசம்பர் 21, 2015 05:30 pm by sumit

  • 21 Views
  • 1 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

ஒற்றை/இரட்டை எண் கார்களுக்கான தடையை அறிவித்த டெல்லி அரசிற்கு, நடைமுறைத் தன்மையை புரிந்துக் கொள்ள முடியவில்லை என்ற கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ள நிலையில், பொதுமக்களின் போக்குவரத்திற்கு பயன்படும் வகையில் 4,000 பஸ்களை டெல்லி அரசு களமிறக்கியுள்ளது. இதற்காக டெல்லி காண்ட்ரேக்ட் பஸ் அசோசியேஷன் (DCBA) உடன் டெல்லி அரசு ஒப்பந்தம் செய்து, பொது மக்களின் பயன்பாட்டிற்காக 4,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து டெல்லி அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராஜ் கூறுகையில், “செயலகத்தில் வைத்து டெல்லி காண்ட்ரேக்ட் பஸ் அசோசியேஷன் (DCBA) உறுப்பினர்களுடன் நாங்கள் சந்தித்து பேசிய பிறகே, இந்த முடிவுக்கு வந்துள்ளோம். வரும் ஜனவரி 1 – 15 இடைப்பட்ட தேதிகளில் CNG மூலம் இயங்கும் ஏறக்குறைய 4,000 கூடுதல் பஸ்களை சாலைகளில் காணலாம். இந்த திட்டத்தின் காரியங்களை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை உருவாக்கியுள்ளோம்” என்றார். பொது மக்களின் பயன்பாட்டிற்காக தங்களின் பஸ்களை அளிக்குமாறு, தனியார் பள்ளிகளுடனும் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கூறிய அனைத்து பஸ்களும், டெல்லி டிரான்ஸ்போர்ட் கம்யூனிகேஷன் (DTC) கீழ் இயங்கும்.

கடந்த 6 நாட்களுக்கு முன், டெல்லியில் கார்களின் மீது ஒரு அபூர்வமான தடையை, டெல்லி அரசு அறிவித்தது. இந்த புதிய திட்டத்தின்படி ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்கள், திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளிலும், இரட்டை படை பதிவு எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளிலும் மட்டுமே ஓட்டுவதற்கும் அனுமதி உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய தடை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும். மேலும் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு என தனிச்சட்டம் எதுவும் இல்லாத நிலையில், இவர்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படலாம் என்ற யூகங்கள் உள்ளன. டெல்லி வாழ்க்கை, ஒரு கியஸ் குழாயினுள் வாழ்வதற்கு நிகரானது என்று டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டதை தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் மேற்கூறிய தடை உத்தரவு அறிவிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவை 15 நாட்களுக்கு அமல்படுத்தி சோதிக்கப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் பலன்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience