சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

தேசிய பசுமை தீர்பாயத்தின் (NGT) உத்தரவு படி , ஜனவரி 6 ஆம் தேதி வரை டெல்லியில் அனைத்து டீசல் வாகனங்களின் பதிவும் ( ரெஜிஸ்ட்ரேஷன்) நிறுத்தப்படுகிறது.

sumit ஆல் டிசம்பர் 14, 2015 02:56 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜெய்பூர் :

சுற்று சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதத்தில் டெல்லி அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக , தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) கடந்த வெள்ளிக்கிழமை முதல் ( டிசெம்பர் ,11 , 2015 ) வரும் ஜனவரி 6 , 2016 வரை டீசல் வாகனங்களின் பதிவிற்கு (ரெஜிஸ்ட்ரேஷன் ) தடை விதித்துள்ளது. டெல்லி அரசின் இந்த முடிவிற்கு சுற்று சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த தடை உத்தரவை கடுமையாக சாடியுள்ள மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா , டெல்லியில் இயக்கப்படும் டீசல் வாகனங்களின் மீது பசுமை தீர்ப்பாயம் எடுத்துள்ள மிக கடுமையான நடவடிக்கை இது என்றும் இந்த நடவடிக்கை எந்த விதத்திலும் காற்றின் தரத்தை மேம்படுத்தி விடாது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 15 வருடங்களாக டீசல் கிளீனர் உருவாக்குவதில் செலவிடப்பட்ட நேரமும் , உழைப்பும் , ஆராய்ச்சியும் வீணாகி விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்கையில் திரு. கோயங்கா , அரசு அமைப்புக்களினால் இது போன்று எடுக்கப்படும் எதிர்பாராத முடிவுகள், தொழில் துறை முதலீடுகளை நிச்சயம் பாதிக்கும் என்றும் கூறினார்.

திரு. கோயங்கா அவர்களின் கருத்திற்கு ஆதரவாக பேசியுள்ள SIAM அமைப்பின் தலைமை இயக்குனர் திரு. விஷ்ணு மாத்தூர் , “ வாகன தொழில் துறை எப்போதுமே எளிதில் காயப்படுத்தப்படும் ஒரு துறையாகவே இருந்து வந்துள்ளது. இதுவரை நீதிமன்றங்கள் பிறப்பித்த எந்த விதமான உத்தரவாக இருந்தாலும் அதை அப்படியே பின்பற்றி வந்துள்ளோம். ஒரு தெளிவான திட்டத்துடன் நாம் களம் இறங்கவில்லை என்றால் நிச்சயம் எந்த ஒரு பெரிய அளவிலான மாற்றத்தையும் நாம் கொண்டுவர முடியாது" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில், 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்கள் அனைத்தின் மீதும் பசுமை தீர்ப்பாயம் (NGT) கொண்டு வந்த முழுமையான தடை உத்தரவை தொடர்ந்து இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்காலிகமானது தான் என்றாலும், டீசல் என்ஜின் தயாரிப்பில் ஏராளமான பணத்தை வாகன தயாரிப்பாளர்கள் முதலீடு செய்துள்ள நிலையில் , அரசு அமைப்பின் இத்தகைய திடீர் முடிவுகள் டீசல் கார்களின் எதிர்காலத்தை மிகப்பெரிய கேள்விகுறி ஆக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.8.95 - 10.52 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை