ஆட்டோ எக்ஸ்போ 2016-ல், வெளியிடப்பட்ட புதிய ஹேட்ச்பேக்குகள்
published on பிப்ரவரி 22, 2016 09:16 am by saad
- 58 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
தயாரிப்புகளை காட்சிக்கு வைப்பது மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆகிய இவ்விரண்டிலும், ஒரு நம்ப முடியாத நிகழ்வாக ஆட்டோ எக்ஸ்போ 2016 அமைந்தது. இதில் சேடன்களும், SUV-களும் அதிகளவிலான பார்வையாளர்களை கவர்ந்தாலும், சந்தையில் பெரும்பாண்மையாக பங்கு வகிக்கும் ஹேட்ச்பேக்குகள், தங்களின் திறனை வெளிக்காட்டுவதில் பின்தங்கியதாக தெரியவில்லை. ஆட்டோ எக்ஸ்போவில், அதிகமாக பேசப்பட்ட புதிய ஹேட்ச்பேக்குகளின் ஒரு பட்டியலை, இங்கே நாங்கள் வெளியிடுகிறோம்.
க்விட் 1.0 லிட்டர்
ரெனால்ட் இந்தியாவிடம் இருந்து வெளியான ஒரு சிறிய தயாரிப்பான இது, இப்போது புதிய என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உடன் கூடிய புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. க்விட்டின் புதிய என்ஜினான ஒரு 1.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மூலம் 77bhp ஆற்றலும், 90Nm அதிகபட்ச முடுக்குவிசையும் வெளியிட்டு, ஒரு ஈசி- R டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பை 2016-ன் மத்தியில் ஒரு உயர்ந்த விலை நிர்ணயத்தோடு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரெனால்ட் க்விட் காருக்கு ஏறக்குறைய ரூ.4 லட்சம் என்று விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மாதிரிகள் மற்றும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, ரெனால்ட் க்விட் 1.0 உடன் கூடிய AMT இப்பிரிவில் ஒரு பெரிய புயலை கிளப்பும் என்பது உறுதி. இந்த பிரிவின் கீழ், ஹூண்டாய் இயான் 1.0 மற்றும் ஆல்டோ K10 ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா ஸீகா
அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஹேட்ச்பேக்குகளில் ஒன்றான டாடா ஸீகாவும், எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. எக்ஸ்போவில் வெளியிடுவதற்கு முன்பாகவே, நம் நாட்டு மக்களுக்கு இந்த காரை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய ஸீகாவில், பிராண்டின் புதிய ஒரு டிசைன் தத்துவத்தை கொண்டிருப்பதோடு, ஹேட்ச்பேக்குகளின் B1 பிரிவில் சூறாவளியை கிளப்ப தேவையான சந்தையில் உயர்வான அம்சங்களையும் பெற்றுள்ளது. ஆற்றலகங்களை பொறுத்த வரை, பிராண்டிற்கு புதிய டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்கள் முறையே, 1.05 ரிவோடார்க் மற்றும் 1.2 லிட்டர் ரிவோட்ரான் ஆகியவற்றை கொண்டு, முறையே 70PS மற்றும் 85PS ஆகிய அளவுகளில் ஆற்றலை வெளியிடுகின்றன. கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் USB, ப்ளூடூத் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய ஜூக் ஆப் மற்றும் நேவிகேஷன் அம்சங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள் ஆகும்.
புண்டோ பியூர்
இந்த கண்காட்சியில் புண்டோ பியூர் ஹேட்ச்பேக்கை, ஃபியட் நிறுவனம் வெளிக்காட்டியது என்பதை விட உண்மையில் அறிமுகம் செய்தது எனலாம். புண்டோவின் சரிவை சந்திக்கும் இந்த காரின், இது ஒரு முன்-புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். ரூ.4.49 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட புண்டோ பியூர், பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இவ்விரண்டு என்ஜின் தேர்வுகளையும் கொண்டு, சில அழகியல் மாற்றங்களோடு வந்துள்ளது. 1.2 லிட்டர் பயர் மில் மூலம் 67bhp ஆற்றலும், 96Nm அதிகபட்ச முடுக்குவிசையும் அளிக்கிறது. அதேபோல 1.3 லிட்டர் மல்டி-ஜெட் டீசல் என்ஜின் மூலம் 75bhp ஆற்றலும், 197Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையும் கிடைக்கிறது. மேற்கண்ட இவ்விரு என்ஜின்களும், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவில் உள்ள ஹூண்டாய் கிராண்ட் i10 மற்றும் மாருதி ஸ்விஃப்ட் ஆகியவை உடன் தற்போது இந்த கார் போட்டியிட்டு வருகிறது.
பெலினோ RS
இந்தியாவில் உள்ள சிறிய அளவு கார்களின் அரசனான இந்நிறுவனம், நம் நாட்டில் வளர்ந்து வரும் பிரிமியம் ஹேட்ச்பேக் சந்தைக்கு, இன்னொரு தயாரிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜினை தன்னுள்ளே கொண்டுள்ள பெலினோவின் ஒரு நேர்த்தியான பதிப்பாக, இந்த புதிய பெலினோ RS உள்ளது. டயரெக்ட்-இன்ஜெக்ஷன் டர்போசார்ஜிங் டெக்னாலஜி உடன் வரும் இந்த என்ஜின் மூலம் 110bhp ஆற்றலும், 170Nm என்ற உயர் முடுக்குவிசையும் பெறப்படுகிறது. இந்த ஆற்றலகம், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயலாற்றுகிறது. இந்த காரில் உள்ள மற்ற அம்சங்களை பொறுத்த வரை, சிறியளவிலான மாற்றங்களை மட்டுமே கொண்டு அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலோ GTI
எக்ஸ்போவில் ஜொலிக்கும் கார்களின் இடையே, வோல்க்ஸ்வேகன் போலோ GTI-யும் ஒன்றாகும். தற்போதைய போலோவின் செயல்திறனால் நிறைந்த பதிப்பான இந்த வாகனம், ஐரோப்பியா சந்தையில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. இதனுள்ளே இருக்கும் ஆற்றலகத்தை கொண்டே, தரமான போலோவிடம் இருந்து இது வேறுபடுகிறது. ஒரு 1.8 லிட்டர் TSi டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினான இதன்மூலம் 192PS ஆற்றலும், 250Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையும் அளிக்கிறது. இந்த மோட்டார், ஒரு 7-ஸ்பீடு இரட்டை கிளெச் DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வோல்க்ஸ்வேகன் போலோ GTI, இந்தாண்டின் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவில் உள்ள மற்றொரு சக்திவாய்ந்த போட்டியாளரான அபார்த் புண்டோ EVO உடன் இது போட்டியிட உள்ளது.
செவ்ரோலேட் பீட் ஆக்டிவ்
இந்திய சந்தையில் டவேராவிற்கு பிறகு இந்த அமெரிக்கன் வாகனத் தயாரிப்பாளரின் பிராண்டு பிரபலத் தன்மையை உயர்த்த உதவிய ஒரே கார் பீட் ஹேட்ச்பேக் ஆகும். பல ஆண்டுகளாக சிறப்பான விற்பனையை பெற்று வரும் இந்த கார், இந்த நிலையை தொடர, மாறி வரும் நடைமுறைகளுக்கு ஏற்ப சில மேம்பாடுகளை அடைய வேண்டியுள்ளது. இதற்காக ஜெனரல் மோட்டார்ஸின் துணை நிறுவனமான செவ்ரோலேட், இந்த எக்ஸ்போவில் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பீட்டை, தொழிற்நுட்ப உருவில் காட்சிக்கு வைத்தது. இருப்பினும், இதன் தயாரிப்பு பதிப்பு கூட ஏறக்குறைய இதை ஒத்ததாகவே இருக்கும். இந்திய கார் ஆர்வலர்களின் இதயத்தில் உள்ள இதன் மீதான நம்பிக்கையை புதுப்பிக்கும் வகையில், இந்த பிராண்டின் புதிய அழகியல் மேம்பாடுகளை, இந்த புதிய பீட் தாங்கி வருகிறது.
0 out of 0 found this helpful