சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

NACP SIAM சங்கத்திற்கு கடிதம் மூலம் வலியுறுத்தல்: உலகளாவிய பாதுகாப்பு நியமங்களை இந்தியாவில் கடைபிடிக்க வேண்டும்

nabeel ஆல் ஆகஸ்ட் 25, 2015 02:32 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

விபத்து சோதனையில் தோல்வியுற்ற உப – 1,500 கிலோ வாகனங்களை தடை செய்ய கவுகாத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், இந்தியா SIAM –ஐ ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு ஏற்ப, முன் மற்றும் பக்கவாட்டு பாதுகாப்பு சோதனையை உடனடியாக (ஜனவரி 1, 2015 முதல்) கடுமையாக்கும்படி உலகளாவிய NCAP உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் 26 அன்று கவுகாத்தி உயர் நீதி மன்றம், விபத்து சோதனை விதிமுறைகளில் தவறிய பல்வேறு வாகன தயாரிப்பாளர்களின் 140 கார் மாடல்களை தடை செய்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாகன பாதுகாப்பு அடிப்படையில், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியா 20 வருடங்கள் பின் தங்கி இருக்கிறது என்று உலகளாவிய NCAP -இன் பொது செயலாளரான டேவிட் வார்ட், வாகன வல்லுனர்களிடம் கூறினார். பல இந்திய மற்றும் சர்வதேச வாகன உற்பத்தியாளர்கள் தங்களது ஏற்றுமதி வாகனங்களில் உலகளாவிய பாதுகாப்பு நெறிமுறைகளை ஏற்கனவே நடைமுறை படுத்தியுள்ளனர். எனவே, அவர்கள் இந்தியாவிலும் அதே நடைமுறையை மேற்கொள்வது கடினமாக இருக்க முடியாது.

திரு.வார்ட் இந்திய ஆட்டோமொபைல் ஊர்ப்பத்தியாளர்கள் சங்கத்திற்கு (SIAM) கடிதம் எழுதும்போது, “சர்வதேச விபத்து சோதனைகளில் தோல்வியடையும் சிறிய நான்கு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதித்த சமீபத்தைய அஸ்ஸாம் இடைக்கால நீதிமன்ற ஆணையை தொடர்ந்து, இந்திய அரசால் அக்டோபர் 2017 முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடு சட்டங்கள் செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பே, SIAM சங்கம் கார்களின் பாதுகாப்பு தன்மையை மேம்படுத்த தன்னார்வ முயற்சி எடுக்க வேண்டும் என்று உலகளாவிய NCAP வற்புறுத்துகிறது”, என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய வாகன தயாரிப்பாளர்கள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், செயல்படுத்தவும் எவ்வாறு தன்னார்வ முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என்பதை பற்றி அவர் மேலும் விரிவுரையாற்றி, இந்திய கார் உற்பத்தியாளர்களும் அதனை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுரித்தினார்.

கடந்த வருடம், NACAP முன்புறம் இடித்து கார்களை சோதனை செய்தது. இதில், நமது மாருதி ஆல்டோ, ஹுண்டாய் i10, ஃபோர்ட் பிகோ மற்றும் டட்ஸுன் கோ போன்ற கார்கள் தோல்வியுற்றன. வளர்ந்த சந்தைகளில் இத்தகைய சோதனைகள் கட்டாயமானவை, எனவே அனைத்து கார் நிறுவனங்களும் இவ்வகை சோதனைகளில் வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியம். துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய கட்டங்களை இந்தியாவில் இல்லை. எனினும், இனி வரும் காலங்களில் இந்தியாவிலும் சாலை மற்றும் வாகன பாதுகாப்பை கண்டிப்பாக பின்பற்றும் கட்டாயம் வரும்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை