மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் சென்னையில் மூன்று புதிய விற்பனை மையங்களை தொடங்கி உள்ளது.
published on ஆகஸ்ட் 27, 2015 11:36 am by bala subramaniam
- 13 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மெர்சிடீஸ் மேன்ஸ் நிறுவனம் அதி நவீன மூன்று மையங்களை நேற்று சென்னையில் தொடங்கி உள்ளது. தன்னுடைய டீலர் டைட்டானியம் மோட்டார்ஸ் உடன் இணைந்து அதி நவீன உலதரத்தில் ஒரு புதிய டீலர்ஷிப் மையம் ஒன்றை ஓஎம்ஆர் சாலையில் துரைபாக்கம் பகுதியில் தொடங்கி உள்ளது. மேலும் நகரத்தின் பிரதானமான அண்ணாசாலையிலும் ப்ரேத்யேக அதி நவீன ஷோரூம் ஒன்றையும், பெருங்குடியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய சர்வீஸ் மையத்தையும் தொடங்கி உள்ளது. இந்த புதிய மையங்கள் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ திரு. எபர்ஹார்ட் கேர்ன் மற்றும் டைட்டானியம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு, சுரேந்திரா ஆகிய இருவராலும் கூட்டாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த டீலர்ஷிப், பென்ஸ் நிறுவனத்தின் 15 ல் 15 என்ற திட்டத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் 15 புதிய டீலர்ஷிப்களையும் 15 புதிய மாடல் பென்ஸ் வாகனங்களையும் அறிமுகப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த துவக்க விழாவில் பேசிய மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஒ திரு. எபர்ஹார்ட் கேர்ன், “ சென்னை யின் வாகன சந்தை ஒரு நன்கு முதிர்ச்சி பெற்ற சந்தையாகும். பொதுவாகவே சொகுசு கார்களின் விற்பனை பெரிதளவு கூடியுள்ளது அதிலும் குறிப்பாக பென்ஸ் கார்கள் மிக அதிக அளவில் விற்பனை ஆகிறது. எங்களது நெட்வொர்க் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் வாடிக்கையாளரின் வசதியே பிரதானம் என்ற எங்களது அணுகுமுறையை உறுதி செய்யும் வகையிலும் இந்த புதிய மூன்று அதிநவீன மையங்களை தொடங்கியுள்ளோம். இந்த குறிப்பிடத்தக்க விரிவாக்கமானது எங்களுக்கு மேலும் பல புதிய வாடிக்கையாளர்களை பெற்று தரும் என்பது மட்டுமின்றி எங்களது வாடிக்கையாளரின் வசதியே பிரதானம் என்ற வியாபார கொள்கையை உறுதி படுத்துவதாகவும் அமையும். தென் இந்தியாவில் நாங்கள் மேலும் சிறப்பான வெற்றிகளை ஈட்ட டைட்டானியம் மோட்டார்ஸ் நிறுவனம் உறுதுணையாக விளங்குவது மட்டுமின்றி எங்களது விரிவாக்க திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும். நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான ப்ரேன்ட் அனுபவங்களை கொடுத்து வரும் அதே வேளையில் வாகன உரிமையாளர்களுக்கும் முழு திருப்தி ஏற்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளோம். VSட் குழுமம் தங்களது தேர்ந்த பரந்த ஆழமான அனுபவங்களை பயன்படுத்தி எங்களது மேலான வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான சேவையை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்””.”
விழாவில் பேசிய டைட்டானியம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு, சுரேந்திரா. “ எங்களுடைய பென்ஸ் நிறுவனத்துடனான உறவை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த மாபெரும் நிறுவனத்துடனான எங்களது பயணம் மிக அற்புதமாக இருக்கும் என்றே நம்புகிறோம். இந்த மூன்று மையங்களை நிறுவ நாங்கள் செய்த முதலீடு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிக சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற எங்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பென்ஸ் போன்ற ஒரு தனித்துவமான ப்ரேண்டுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் திருப்தியை பல மடங்கு உயர்த்தி ஒரு மிக அற்புதமான அனுபவத்தை வழங்க முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். நூறு வருடத்திற்கும் மேலான பென்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வெற்றியை இந்த சந்தையிலும் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வாகன சந்தையில் எங்களுக்குள்ள ஆழமான அறிவு, அனுபவம் மற்றும் தொலைநோக்கு சிந்தனை ஆகியவை தான் டைட்டானியம் மோட்டார்ஸ் பெற்றுள்ள வெற்றிக்கு காரணம் என்றால் அதே அனுபவத்தை பயன்படுத்தி எங்களின் இந்த புதிய கூட்டு முயற்சியை மாபெரும் வெற்றி அடைய செய்வோம் " என்று கூறினார்.
25,000 சதுர அடியில் மிக விசாலமாக நிறுவப்பட்டுள்ள எங்கள் இந்த ஓஎம்ஆர் டீலர்ஷிப் பல வசதிகளைக் கொண்டுள்ளது. ஓட்டுனர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க லவுன்ஜ், வாகனங்கள் நிறுத்த தாராளமான இடம் வாடிக்கையாளர்களுக்கான சொகுசான ஓய்வெடுக்க தனி இடம் மற்றும் 15 கார்களை ஒரே நேரத்தில் பார்வைக்கு வைக்கக் கூடிய அளவுக்கு வசதி என பலவற்றை சொல்லலாம். சென்னை அண்ணாசாலையில் மிகப்பிரபலமான கோவ் கட்டிடத்தில் இந்த நகர்புற ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு புது கார் விற்பனை தவிர உதிரி பாகங்கள் விற்பனை, வாகன நிதி உதவி மற்றும் வாகன காப்பீடு சம்மந்தமான சேவைகளும் வழங்கப்படுகிறது. 45000 சதுர அடியில் பெருங்குடி தொழிற்பேட்டையில் துவங்கப்பட்டுள்ள சர்வீஸ் சென்டரில் ஒரே சமயத்தில் 27 கார்கள் வரை நிறுத்தி செர்வீஸ் செய்யும் வசதி உள்ளது. 50 ஊழியர்கள் பணியாற்றும் இந்த சர்வீஸ் சென்டரில் வருடத்திற்கு சுமார் 6000 கார்கள் வரை சர்வீஸ் செய்து விட முடியும் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
0 out of 0 found this helpful