மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவின் எஸ் 63 ஏஎம்ஜி சேடன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிமுகம்
published on ஆகஸ்ட் 07, 2015 09:26 am by raunak
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா தொடர் உற்சாகத்தில், தனது எஸ் 63 ஏஎம்ஜி சேடனை ஆகஸ்ட் 11 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. ஜெர்மன் தயாரிப்பாளரான இந்நிறுவனம், எஸ் 500 கூபே, எஸ் 65 ஏஎம்ஜி கூபே மற்றும் ஜி 63 கிரேஸி கலர் எடிசன் ஆகியவற்றை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. எஸ் 63 கூபே போலவே, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி எஸ் 63 சேடனிலும் 5.5 லிட்டர் வி8 பை-டர்போ ஏஎம்ஜி மோட்டாரின் அம்சங்கள் காணப்படுகிறது.
என்ஜினை பொறுத்த வரை, மற்ற ஏஎம்ஜி வாகனங்களை போலவே, ஏஎம்ஜி எஸ் 63 சேடனில் உள்ள என்ஜினும் கைவேலையால் தயாரிக்கப்பட்டது. 5.5-லிட்டர் பை-டர்போ வி8 மூலம் 585 பிஎஸ் மற்றும் 900 என்எம் மகத்தான முறுக்குவிசையும் கிடைக்கிறது. இதன்மூலம் 4.4 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இந்நிலையில் ஏஎம்ஜி எஸ் 63 சேடனின் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. ஆகும். மெர்சிடிஸ், பின்பக்க சக்கரம் மூலம் ஓடும் ஏஎம்ஜி எஸ் 63 சேடனை இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்பதால், ஏஎம்ஜி எஸ் 63 கூபேயில் உள்ளது போல, மேஜிக் பாடி கன்ட்ரோல் சஸ்பென்ஸன் சிஸ்டத்தின் அம்சங்கள் இதில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ் 63 ஏஎம்ஜி பார்வைக்கு, தற்போதுள்ள சேடன்களை போல இல்லாமல் நுட்பமான வழியில் வேறுபட்டு காட்சியளிக்கிறது. முன்புறத்தில் அதிக காற்று உள்வாங்கி உடன் கூடிய ஸ்போர்ட்டியர் பம்பர்களுடன் காணப்படுகிறது. வேகமாக செல்ல கூடிய எஸ்-கிளாஸான இதன் பின்புறத்தில் பார்வைக்கு நேர்த்தியான பம்பர்களுடன் டிஃப்பியூசர்கள் மற்றும் குவாட் வெளியேற்றி ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது. எஸ் 63 ஏஎம்ஜியின் பக்க பகுதிகளில் அமைந்துள்ள பக்க ஓரங்கள் மற்றும் 20-இன்ச் ஏஎம்ஜி சக்கரங்கள் ஆகியவை பாராட்டத்தக்கவை. மேலும் தற்போதைய எஸ்-கிளாஸ் உடன் ஒப்பிட்டால், சுமார் 100 கிலோ எடை குறைவாகவும் உள்ளது. ஆனால் விலையை பொறுத்த வரை சமீபத்தில் அறிமுகமான கூபே மாடல்களை விட, ஒரு சிபியூ இறக்குமதியான இதற்கு ரூ.2 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.