JK டயர் பாஜா ஸ்டூடண்டு இந்தியா 2016 முடிவுகள் வெளியானது: புனேயின் ஃபோர்ஸா அணி சாம்பியனாக அறிவிப்பு
BSI-யின் இந்த பதிப்பில், நாடெங்கிலும் இருந்து 1300-க்கும் அதிகமான என்ஜினியரிங் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கடந்த புதன்கிழமை அன்று JK டயர் பாஜா ஸ்டூடண்டு இந்தியா 2016 போட்டி முடிவுக்கு வந்தது. புனேயின் சிங்காத் அகடமி ஆப் என்ஜினியரிங்கை சேர்ந்த ஃபோர்ஸா ரேஸிங் அணி, இந்த போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு JK டயர் BSI 2016 கோப்பையை, JK டயர் மற்றும் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரகுபதி சிங்கானியா வழங்கினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை முறையே, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ரோடு ரன்னர்ஸ் மற்றும் மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பிரன்ஹா ரேஸிங் அணியும் பெற்றனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களையும், அமைப்பாளர்களையும் வாழ்த்திப் பேசிய, JK டயர் மற்றும் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான டாக்டர் ரகுபதி சிங்கானியா கூறுகையில், “அடுத்த தலைமுறையைச் சேர்ந்த என்ஜினியர்கள், வகுப்பில் கற்றுக் கொள்ளும் அறிவை, நிஜ வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கான ஒரு தளத்தை JK டயர் பாஜா ஸ்டூடண்ட் இந்தியா உருவாக்கி கொடுக்கிறது. இந்த இளம் என்ஜினியர்கள் இடையே நாங்கள் கண்ட ஆர்வம் அசாதாரணமானது. உலக வல்லரசுகளுக்கு நிகராக தொழில்நுட்பத்தில் உயர வேண்டும் என்ற எதிர்கால இந்தியாவின் பயணத்திற்கு, இது நிச்சயம் உறுதியளிப்பதாக உள்ளது” என்றார்.
முந்தைய போட்டிகளில் ஃபோர்ஸா ரேஸிங் அணியினர் திணறிய போதும், சகிப்புத்தன்மை (எண்ட்யூரேன்ஸ்) ரேஸில் அதிகபட்ச வெயிட்-ஏஜ் சுமந்து சென்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதால், மதிப்பெண் பட்டியலில் அவர்களால் முன்னேற முடிந்தது.
இப்போட்டியின் அமைப்பாளர்களை பொறுத்த வரை, JK டயர் பாஜா ஸ்டூடண்ட் இந்தியா 2016-வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள், கார்களை வடிவமைக்கும் போது மட்டுமின்றி, அதன் சோதனைக் கட்டத்தின் போதும், கடுமையான சர்வதேச அளவிலான வழிகாட்டல்களும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. இப்போட்டியின் நம்பகத்தன்மையை நிரூபிக்கும் வகையில், ஆட்டோமோட்டிவ் டிசைன், தயாரிப்பு மற்றும் வர்த்தகத் துறையை சேர்ந்த அனுபவமுள்ள சர்வதேச அளவிலான வல்லுநர்களால், போட்டி மதிப்பிடப்பட்டது. இப்போட்டியின் பிரபலத்தன்மை வலியுறுத்தி பேசிய JK டயர் பாஜா ஸ்டூடண்ட் இந்தியா 2016-வின் ஒருங்கிணைப்பாளர் (கன்வீனர்) செளமியா காந்தி போஸ் கூறுகையில், கடந்தாண்டு நடைபெற்ற BSI 2015-யில், 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை அந்த எண்ணிக்கை 1300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியராக வளர்ந்துள்ளது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் நீண்டகாலமாக நிலைநிற்பதை நிரூபித்து வரும் JK டயர் போன்ற நிறுவனத்துடன் சேர்ந்து செயலாற்றுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு JK டயர் நிறுவனத்தின் மூலம் JK ரேஸிங் இந்தியா சீரிஸ் துவக்கப்பட்டது. இதன்மூலம் அடுத்த ஃபார்மூலா ஒன் டிரைவருக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கும், இந்திய ரேஸ் டிரைவர்களுக்கு ஒரு உலக தரம் வாய்ந்த அறிமுகத்தை அளிக்கவும் எண்ணியது. முதலில் ஃபார்மூலா BMW என்று இந்த சீரிஸ் அறியப்பட்ட நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு JK டயர் மூலம் அது வாங்கப்பட்டு, அதற்கு JK ரேஸிங் ஏசியா சீரிஸ் என்று மறுபெயரிடப்பட்டது. JK டயர் மூலம் நடத்தப்படும் இந்த ரேஸிங் மற்றும் கார்டிங் நிகழ்ச்சியினால், அர்மேன் இப்ராஹீம், காரன் சாந்தோக், ஆதித்யா பட்டேல் மற்றும் மற்ற வளர்ந்து வரும் திறனாளிகள் உள்ளிட்ட நாட்டின் மோட்டார்ஸ்போர்ட் திறமைசாலிகளுக்கு இது வளர்வதற்கான ஒரு தளமாக அமைந்தது.
மேலும் வாசிக்க