சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கான இறக்குமதி விதிகளில் தளர்வு

anonymous ஆல் பிப்ரவரி 10, 2025 09:11 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
143 Views

நீங்கள் விண்டேஜ் கார் பிரியரா உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி !

கார் பிரியர்களுக்கு விண்டேஜ் வாகனங்களை இறக்குமதி செய்வதை இந்திய அரசு எளிதாக்கியுள்ளது. இதற்கு முன்பு வரை 1950 க்கு முன் தயாரிக்கப்பட்ட கார்களை மட்டுமே நாட்டிற்கு கொண்டு வர முடியும். 50 ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் விதிகள் இப்போது தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி 2025 -ல் 1975 வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இந்தியாவுக்கு கொண்டு வரலாம். 2026 ஆண்டு 1976 -ல் இருந்து தயாரிக்கப்பட்ட கார்கள் தகுதி பெறும். இந்த தகுதியானது வருடா வருடம் தொடரும். இது கிளாசிக் கார் பிரியர்களுக்கு அவர்களின் கனவு கார்களை சொந்தமாக்குவதை வருவதை எளிதாக்குகிறது.

கிளாசிக் கார்களை யார் இறக்குமதி செய்யலாம்?

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக விண்டேஜ் காரை வைத்திருக்க யார் வேண்டுமானாலும் இப்போது உற்பத்தி தேதியிலிருந்து குறைந்தது 50 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்யலாம். சிறப்பு இறக்குமதி உரிமம் தேவையில்லை என்ற செயல்முறை இப்போது முன்பை விட எளிதாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வாகனங்களை இந்தியாவிற்குள் மறுவிற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கார் வாங்குபவரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடையை அரசாங்கம் விதித்துள்ளது.

இது ஏன் ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது?

இந்தியாவில் நிறைய பேர் கிளாசிக் கார்களை விரும்புபவர்களாக உள்ளனர். ஆனால் கடுமையான விதிமுறைகள் விண்டேஜ் கார்களை இறக்குமதி செய்வதை கடினமாக்கியது. இந்த புதிய விதியின் மூலம், சேகரிப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இப்போது உலகெங்கிலும் உள்ள பழங்கால ரோல்ஸ் ராய்ஸ் அல்லது பழைய கிளாசிக் அமெரிக்கன் மஸ்டாங், அதாவது ஃபோர்டு மஸ்டாங் போன்ற மிகப் பழமையான பிரபலமான மாடல்களை சட்டப்பூர்வமாகக் கொண்டு வரலாம்.

கிளாசிக் கார் சமூகத்தின் மீதான தாக்கம்

இந்த விதி மாற்றம் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்:

  • வாங்குபவர்களுக்கு கூடுதல் தேர்வுகள்: ஆர்வலர்கள் இனி குறைவான கார்கள் கொண்ட உள்நாட்டு சந்தையை நம்ப வேண்டியதில்லை.

  • இந்தியாவில் ரீஸ்டோரேஷன் தொழிலுக்கு ஒரு ஊக்கம்: அதிக இறக்குமதி செய்யப்பட்ட கிளாசிக்ஸ் என்பது இன்ஜின் மறுகட்டமைப்பு, அப்ஹோல்ஸ்டரி மறுசீரமைப்பு மற்றும் கிளாசிக் கார் விவரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த தொழிலகங்களுக்கான தேவையை அதிகரிக்கும்.

  • பெரிய மற்றும் சிறந்த பழங்கால கார் நிகழ்வுகள்: கிளாசிக் கார்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும் போது, ​​இந்தியா முழுவதும் அதிகமான ஆட்டோ ஷோக்கள், விண்டேஜ் பேரணிகள் மற்றும் சேகரிப்பாளர் சந்திப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விதிகள் மற்றும் செலவுகள்

விண்டேஜ் கார்களை இறக்குமதி செய்வது எளிதாகிவிட்ட நிலையில், உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் பின்வரும் விதிமுறைகளுக்கு ஏற்ப இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்:

  • மோட்டார் வாகனச் சட்டம், 1988 மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989.

  • சாலைத் தகுதி மற்றும் உமிழ்வு தரநிலைகள். பழைய வாகனங்கள் அவற்றின் வரலாற்று மதிப்பு காரணமாக விலக்கு பெறலாம்.

  • அதிக இறக்குமதி வரிகள்: இறக்குமதி செய்யப்பட்ட கிளாசிக் கார்களுக்கான வரிகள் காரின் மதிப்பில் சுமார் 250% ஆகும். இதனால் இந்த வாகனங்கள் விலை உயர்ந்த முதலீடாக அமைகிறது.

கார் பிரியர்களுக்கு இது ஒரு அற்புதமான செய்தியாக பார்க்கப்படுகிறது! நீங்கள் அனுபவமுள்ள சேகரிப்பாளராக இருந்தாலும் சரி அல்லது அழகான விண்டேஜ் காரை சொந்தமாக்க வேண்டும் என்ற வாழ்நாள் கனவைக் கொண்டவராக இருந்தாலும் சரி இந்தப் புதிய விதிகள் அதை மிகவும் எளிதாக்குகின்றன.

நீங்கள் இறக்குமதி செய்யப் விரும்பும் முதல் கார் எது? எங்களுக்கு கமென்ட் பகுதியில் தெரியப்படுத்துங்கள்!

மேலும் பார்க்க: இந்த பிப்ரவரியில் மாருதி அரீனா கார்களில் ரூ.60,000-க்கும் மேல் சேமிக்கலாம்

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.67.65 - 73.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.8.25 - 13.99 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை