சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ஹியர் மேப்பிங் சேவையை $2.74 பில்லியனுக்கு வாங்கி உள்ளது.

nabeel ஆல் ஆகஸ்ட் 04, 2015 04:53 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜெய்பூர்: நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஜெர்மன் நாட்டின் உயர் ரக கார் தயாரிப்பாளர்கள் கூட்டாக நோக்கியாவின் ஹியர் மேப்பிங் சர்வீஸ் ஐ $2.74பில்லியனுக்கு வாங்க சம்மதித்து உள்ளனர்.

டியாம்ளர், பிஎம்டபல்யூ மற்றும் வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் பிரிமியம் வகைக் கார் பிரிவான அவுதி ஆகிய இம்மூன்று நிறுவனங்களும் நோக்கியா மேப்ஸ் ஹியர் ல் சமமான பங்குகளை கொண்டிருப்பார்களே தவிர எந்த ஒரு நிறுவனமும் தனிப்பட்ட முறையில் கூடுதலாகன பங்கை வைத்திருக்க மாட்டார்கள் என்று அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தமானது மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வியாபர பரிவர்த்தனையின் மதிப்பீடு சுமார் 2.8பில்லியன் ஆகா இருக்கும் என்று நோக்கியா தரப்பில் கூறப்படுகிறது.. வாகன தொழில் நுட்பத்தில் இந்த புதிய மேப்பிங் சேவை மிக முக்கிய தேவை என்றும் முழுமையான சுதந்திரமான வாகன ஓட்டுதலுக்கு இந்த சேவை மிக இன்றியமையாதது என்றும் இந்த சேவையை வாங்கிய கார் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வாகன தொழில் நுட்பத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நிலப்பரப்புகளை பற்றிய துல்லியமான தகவல்களைத் தரும் அமைப்பை $8.1 மில்லியனுக்கு அமெரிக்காவின் நேவ்டெக் நிறுவனத்திடம் இருந்து 2008 ஆம் ஆண்டு நோக்கியா வாங்கியது.

சுமார் 200 நாடுகளின் புவியியல் ரீதியான தகவல்களை 50 மொழிகளில் தர வல்லது இந்த நோக்கியாவின் ஹியர் மேபிங் சர்வீஸ். ஒரு விபத்து அல்லது ட்ராபிக் ஜாம் பற்றிய தகவல்களை அனுப்புவதன் மூலம் கடந்து வந்த தூரத்தை மறு கணக்கீடு செய்வது போன்ற அசாத்தியமான தன்னிச்சையான செயல்களை இந்த மேபிங் அமைப்பைக் கொண்டு செல்ப் டிரைவிங் கார்கள் செய்துக்கொள்ளும்..

வரும் காலத்தில் இந்த மேபிங் அமைப்பை அடிப்படையாகக் கொண்டுதான் செல்ப் டிரைவிங் கார்களில் விபத்து கண்டுபிடித்தல் போன்ற இன்னும் பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்படும் என்பதை நாம் உறுதியாக சொல்லலாம்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.30.40 - 37.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை